எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, August 21, 2013

அறிவியலும் ^ போகர் ஏழாயிரமும்


    அறிவியலும் --> ஏழு கடலும் , தீவுகளும் ---->
                           ----> போகர் ஏழாயிரமும் ----> ஸ்ரீ அகஸ்தியர் விஜயமும்

   தெய்வீக விஞ்ஞானி டாக்டர் சாது .சு ஸ்ரீநிவாஸ் அவர்களது "உபநிஷத்துகளின் விஞ்ஞான ரகசியங்கள், " என்னும் புத்தகத்தில் இருந்து சில வரிகள் :-

இந்த பூமியின் மீது நாம் வசித்துக் கொண்டிருக்கிற ஜம்பூ த்வீபம் என்னும் முதலாவது உலகம் ..,நாம் வசிக்கும் இந்த உலகமும் நாம் காணும் உப்பு நீர்க்கடலும் எப்படி உண்மையோ அதேபோலவே இந்த ஏழு உலகங்களும் , ஏழு கடல்களும் உண்மையானவையே ஆகும் .

1. நாம் வசிக்கும் இந்த உலகமும் -- உப்பு நீர்க் கடலும்
2.பிலட்சத்தீவு என்னும் 2வது உலகமும் - கரும்புச்சாறு கடலும்
3. சால்மலித்தீவு என்னும் 3வது உலகமும் - தேன் கடலும்
4. குசத்தீவு என்னும் 4வது உலகமும் - நெய்க் கடலும்
5. கிரௌஞ்சத்தீவு என்னும் 5வது உலகமும் - பால் கடலும்
6. சாகத்தீவு என்னும் 6வது உலகமும் - தயிர்க் கடலும்
7. புஷ்கரத்தீவு என்னும் 7வது உலகமும் - இளநீர்க் கடலும் உள்ளது .

இந்த நாம் வாழும் உப்பு நீர்கடலின் மீது தெற்கு நோக்கி வான வெளிக் கப்பல்கள் மூலம் சுமார் பத்து லட்சம் கிலோ மீட்டர்கள் தூரம் பரந்து சென்றால் இக்கடலுக்கு எதிர்புறமாக மறுகரையாக உள்ள பில்ட்சத்தீவு என்னும் இரண்டாவது உலகத்தை அடையலாம் . இந்த இரண்டாவது உலகத்தில் பில்ட்சம் என்னும் மரங்கள் அதிகமாக இருப்பதால் இதற்குப் பிலட்சத்தீவு என்று பெயர் ஏற்பட்டிருகிறது . இவ்வுலகம் சீலம் , வசயம் , சுபத்திரம் , சாந்தம் ,ஷேமம் , அபயம் ,ரிதம் , என்னும் ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது . இந்த ஏழு கண்டங்களிலும் மணிகூடம் , வச்சிரக் கூடம் , இந்திர சேனம் , சோதிடமா , தூம்ப்பர வர்ணம் , இரணிய கிரிவலம் , மேகமாலம் என்னும் ஏழு பெயர்களை உடைய ஏழு பெரிய மலைகள் உள்ளன .இவைகளில்லிருந்து அருணா , ரமணா , ஆங்கீரஸீ , சாவித்திரி , சுப்ரபாதா , ருதம்ப்ரா , சத்தியம் பாரா என்னும் ஏழு நதிகள் உற்பத்தியாகி ஓடுகின்றன . நமது கடவுளின் பேரன்மார்களில் ஒருவரான "இந்துமசிக்குவன்" என்பவர் தனது மனைவியுடன் முதன் முதன்முதலாக இங்கு குடியேறி ஆராசாட்சி செய்து கொண்டு வாழ்ந்து வந்தார் .., அவருடைய வம்ச பரம்பரையினர் அம்சர் , பதங்கர் , ஊர்துவாயனர் ,சத்தியாகர் என்னும் நான்கு பரிவினராக வாழ்ந்து வருகிறார்கள் ...

அமெரிக்க் ரஷ்ய விஞ்ஞானிகள் . , மற்ற உலக விஞ்ஞானிகள் சந்திரன் , செவ்வாய் , சுக்ரன் , சனி , வியாழன் முதலிய கிரஹ மண்டலங்களை ஆராய்ந்து அவைகளுக்குப் போக்குவரத்து சாதனங்களை அமைக்க முயற்ச்சி செய்வது போல் , இந்த இந்த ஏழு உலகங்களையும் , ஏழு கடல்களையும் ஆராய்ச்சி செய்து இவைகளுக்குப் போக்குவரவு சாதனங்களை அமைக்க முயற்சிக்க வேண்டும் ., இது மிகவும் அவசியம் .

செயற்கைச் சந்திரன் வான வெளிக் கப்பல்கள் ராக்கெட்டுகள் மூலம் இந்த முதலாவது உலகத்தை கிழக்கு மேற்காகவே சுற்றி வந்திருக்கிறார்கள் ., தெற்கு வடக்காக சுற்றவில்லை .அதனால் , முன் சொன்னபடி தென் துருவத்திலிருந்து தெற்கு நோக்கி சுமார் பத்து லட்சம் கிலோ மீட்டர்கள் தூரம் சென்றால் நிச்சியமாக இந்த இரண்டாவது உலகை அடையலாம் . .[ இப்படி தொடர்ந்து ., ஏழு உலகங்கள் ,கடல்கள் பற்றி இந்த "உபநிஷத்துகளின் விஞ்ஞான ரகசியங்கள், " என்னும் புத்தகத்தில் கூறியுள்ளார் .] ..,
--------------------------------------------------------------------------------------------------------

    இஃதோடு ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் [2001] புத்தத்தில் [அகஸ்தியர் விஜயம் இதழ் வெறும் புத்தகங்கள் அல்ல .. சித்தர்களின் ஞானப் பத்திர கிரந்தங்கள் ] இருந்து சில வரிகள் :--

பூலோகத்தின் கடலைப் போல் ,வைகுண்டத்தின் பாரற்க்கடலைப் போன்று , கரும்புச்சாறு கடல் ஒன்று உண்டு ., இதில் சுயம்புவாக தோன்றியவரரே "கற்ககடகேஸ்வரர்ராகிய சிவலிங்க மூர்த்தியாவார் .., அருமருந்தம்மை ஈஸ்வரியே இறைவனிடம் வேண்டிக் கரும்புச் சாறு தீர்த்தத்தில் தோன்றிய கற்ககடகேஸ்வர சுயம்பு மூர்த்தியை பூமியிலும் சுயம்புபாகத் தோன்ற வேண்டும் என்று அருந்தவம் பூண்டு வரம் வேண்டி நமக்காகப் பூலோகத்தில் இன்று திருந்துதேவன்குடியில் கற்ககடகேஸ்வர சுயம்பு மூர்த்தி வழிபாட்டை நமக்கு அளித்துள்ளாள் . அதே சமயம் கரும்புச் சாறு தீர்த்தத் கடலில் தவம் பூண்ட கற்கடர் இறையருளால் பூமியில் இறை தரிசனம் வேண்டிட , திருந்துதேவன்குடியில் சுயம்புலிங்கத் மூர்த்தியாகத் தோன்றிட அதே நண்டு வடிவில் அவர் பூலோகத்தில் தவத்தை தொடர்ந்தார் . வரும் கலியுகத்தில் கோடிக் கணக்கான மக்கள் சர்க்கரை வியாதி எனப்படும் நோயாள் அவதியுறுவர் என்பதைக் தீர்க்க தரிசனமாக உணர்ந்து கலியுகத்தில் சர்க்கரை வியாதி ஏற்படுவதற்கான கர்ம வினைகளை பகுத்தறிந்து அவர்ற்றிகான அறவழித் தீர்வுகளையும் பரிகார , பிராயசித்த முறைகளையும் பெறுவதற்காகவும் இங்கு கற்கட நண்டாய் மகரிஷி அருந்தவைதை தொடர்ந்தார் .!!

இப்பூவுலகில் நம் பாரத நாட்டில் - அதுவும் நம் தமிழ்த் திரு நாட்டில் தான் இறைவன் பல்லாயிரம் சுயம்பு லிங்க முர்த்திகளாய் ஆங்காங்கே தன் இறைமையை நிரவிக் கொள்ளக் காரணமே ., இப்பூவுலகின் ஒவ்வொரு அணுத்துளிக்கும் உரிய படைப்பு ரகசியத்தை ஊட்டி உணர்விக்கவே ! காரண ,காரியமின்றி எவ்வித அசையும் , இயக்கமும் ஏற்படுவதில்லை என்பதை மனிதன் தன்னைத்தானே ஆத்ம விசாரம் செய்வதன் மூலமாக அறிந்து கொள்ளவே இறைவன் தன்னை மலை ரூபமாகவும் ,கல் வடிவிலும் , உலோக வடிவிலும் ,புனித விருட்சங்களையாகவும் , அக்னியாகவும் ,காற்றாகவும்,ஆறாகவும் , தம்மைப் படைத்துக் கொண்டுள்ளான் .
-- ஜனவரி 2001 பக்கம் - 29 to 35. [ ஸ்ரீ அகஸ்திய விஜயம் ]
[ இந்த கோவில் கடக ராசி "ஆயில்யம்" நட்சத்திர கோவில் என்பதும் குறிப்பிடத்தக்கது ] .
 -------------------------------------------------------------------------------------------------------

இதே ஏழு கடலும் ., தீவுகளும் பற்றி இங்கு சப்தகாண்டத்தில் போகரும் ., கூறுகிறார்

அடவர்க வஷ்டதிசை சுத்திவந்தேன்
அப்பனே மற்றசாகரமும் கண்டேன்
திடலான நெய்க்கடலும் நானும்கண்டேன்
தீர்க்கமுடன் வுவர்கடலுங் கண்டேன்நானே - பாடல் எண் ( 4006)

கண்டேனே யுவர்கடலை கடந்தபின்பு
கடிதான தயிர்க்கடலை யானுங்கண்டேன்
விண்டேனே மதுபானக் கடலுங்கண்டேன்
விரிவான கறுப்பன் சாகரமும் கண்டேன்
அண்டமெலாம்புகழும் நன்னீரான
வழகான சாகரமும் கண்ணிற்கண்டேன் - பாடல் எண் ( 4007)

இட்டேனே சத்தசாகரமுங்கண்டேன் எழிலான
சத்ததீவுகளுங்கண்டேன்
திட்டமுடன் சம்புவென்ற தீவதனைக் கண்டேன்
திகழான இலட்சமார் தீவுகண்டேன்
சட்டமுடன் செத்தீவு யானுங்கண்டேன்
சார்பான கிரவுஞ்சத்தீவு கண்டேன்
வட்டமாஞ் சாகரத்தின் தீவுகண்டேன்
மளமான சான்மலியுங் கண்டேன்பாரே - பாடல் எண் ( 4009)

பாரேதான் சான்மலிவு தீவுகண்டேன்
பாங்கான புஷ்கரத் தீவுகண்டேன்
நேரேதான் சத்ததீவுகளுங்கண்டேன்
நேரான குளிகையது பூண்டுகொண்டு
சீரேதான் காலாங்கி புஜபலத்தால் சிறப்புடனே
லோகமெலாம் சுத்திவந்தேன் -- பாடல் எண் ( 4010)

இலட்சமார் தீவு - பிலட்சத்தீவு , செத்தீவு - குசத்தீவு
கிரவுஞ்சத்தீவு - கிரௌஞ்சத்தீவு , புஷ்கரத் தீவு - புஷ்கரத்தீவு
சான்மலிவு தீவு - சால்மலித்தீவு , சாகரத்தின் தீவு - சாகத்தீவு

"உபநிஷத்துகளின் விஞ்ஞான ரகசியங்கள், " புத்தகத்திலும் இந்த அமைப்புக்கள் "பாகவத புராணத்தில் பஞ்சமஸ்கந்தம் பகுதியில் ஐந்தாவது ., இருபதாவது அத்தியாய
த்தில் கூறப்பட்டுளதாக  விவரிக்கப்டிருக்கிறது .

இதை நாம் பதிவிட்டால் "இப்படி பார்த்தால் பாகவத புராணத்தில் இருப்பதையே போகர் பெருமான் பாடலாக கூறியிருக்கிலாமே .., போகர் . அங்கு சென்றார் .., இல்லை அப்படி கடல்களும் ., தீவுகளும் இருப்பதற்கு என்ன ஆதாரம் என்று படிப்பவர்கள் கேட்பார்கள் " இது படிப்பவர்கள் பார்வையில் நியாயம் தான் .., என்று யாம் சற்று யோசித்து விட்டு போகர் 7000த்தை புரட்டுகையில் . அங்கு தான் குரு லீலை . பேரானந்தம் எமக்கு .., ஏனோ போகர் பெருமான் அடுத்த பாடலிலேயே அசத்திவிடுகிறார் .,

பாலமுடன் சீனபதி கடலோரத்தில்
பண்பான மலையொன்று குகைதானுண்டு
வானர்முதல் வந்திறங்கும் பொய்கையுண்டு
வளமான மண்டபந்தான் அங்கொன்றுண்டு
தோணவே குளிகையது பூண்டுகொண்டு
தொல்லுலகை யான்மறந்து சென்றேன்பாரே -பாடல் எண் ( 4011)

இந்த பாடலுக்கு என்ன ஆதாரம் என்கிறீர்களா ? சீனா -திபேத் எல்லையில் "பையன் கரா உலா " என்றொரு இடம் உள்ளது . 1938 -ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்த "சி.பு.டை " என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் இங்கிருந்து 716 கருங்கல் பலகைகளைக் கண்டுபிடித்தார் .., இந்தப் பலகைகளில் ஏராளமான கோபால்ட்டும் உலோகமும் கலந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் ., அதுமட்டுமல்ல , இந்தப் பலகைகள் உயர்ந்த அதிர்வுத் தன்மையைக் கொண்டவை என்றும் அவர்கள் கண்டறிந்தனர் . ரஷ்யாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் . வியாச்செஸ்லாவ் செயசெவ் என்பவர் இந்தக் கற்பலகைகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்து செய்தி வெளியிட்டார் : "12,000" ஆண்டுகளுக்கு முன்னால் விண்வெளியிலிருந்து வந்த சிலர் மூன்றாவது கிரகத்தில் வந்து இறங்குவதற்கும் அவர்களது உலகிற்குச் செல்வதற்கும் அவர்களது வாகனத்திற்குச் சக்தி இல்லாமல் பொய்விட்டது .." என்று அந்தக் கற்பலகைகள் சொல்கின்றன ."  --
இந்த தகவல் "தேவர்கள் பூமிக்கு வந்த உண்மை ஆதாரங்கள் புத்தகத்தில்" "சீனாவிலும்கூட கடவுள் சின்னங்கள் உண்டு " எனும் பகுதியிலில் 36,37,38 ஆம் பக்கத்தில் இருந்த செய்தி. ...
 
இப்பொழுது போகர் பாடலை மறுபடியும் படியுங்கள் "சீனபதி கடலோரத்தில் ..... வானர்முதல் வந்திறங்கும் பொய்கையுண்டு ........குளிகையது பூண்டுகொண்டு .,தொல்லுலகை யான்மறந்து சென்றேன்பாரே - பாடல் எண் ( 4011)

ஆக . அந்த விஞ்ஞானி கண்டுபித்ததும் .., போகர் சொன்னதும் .., சென்றதும் .., சிவ சிவா ...!! இதற்கும் மேலுமா இந்த உலகில் சித்தர்கள் உன்மைதானா .., அவர்கள் குளிகைகொண்டு பறந்ததும் .., கோடியுகம் . வாழ்ந்து .. இன்னும் வாழ்ந்து .. என்றும் வாழ்வார்கள் என்பதற்கு ஆதாரம் வேண்டும் ??? ,,,


மேலும் ..., இந்த ஒப்பிடுகள் இவற்றையெல்லாம் ரசிக்கலாம் .., ஆனால் சர்வ கோடி சித்தர்களின் பீடாதிபதியாம் அகஸ்தியரின் .,கிரந்த வாக்கியங்களை குருவாய் மொழியாக தாங்கி வரும் ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மூலமாக .., நாம் அணுபவிக்கலாம் ., கர்மாவை குறைக்கலாம் . இதையும் ஏன் கூறுகிறோம் என்றால் .., யாம் ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் இருந்து . சில குறிப்புகளை கொடுத்து .., சிலருக்கு வாய்பிருந்து ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழை படிக்க நேர்ந்தால் .., பல பல தெய்வ ., தேவ ., சித்த ரகசியங்களையும் ..,அனுபுதிகளையும் .., படித்து இதெல்லாம் இருக்குமோ . என்று யோசித்தால் . அறியாமை படிப்பவருக்கு தான் .., அறியாமை என்று சொல்வதை விட .., கர்மா அவ்வுளவுதான் .., ஏனெனில் ...,

"விட்டகுறை வந்ததென்றால் தானே எய்தும்
விதியிலார்க்கு எத்தனைதான் உரைத்தாலும்
பட்டு மனம் மாய்தல் அல்லால் வேறொன்றில்லை
பக்தியிலார்க்கு உரைத்து மனம் பாழ்போக்காதே.'


குருவே சரணம் !!!! குருவே சரணம் !!!! குருவே சரணம் !!!

பிறவாழி உயிர்வாழி அறவாழி பதம்வாழ
இறைவாழி குருவே துணை

இப்படிக்கு ,
ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழின் கடை நிலை வாசகன் 


புலிப்பாணி சித்தர் அடிமை
சித்தர் பைத்தியம்

Sunday, August 18, 2013

அடிப்படை ஆன்மிகம் - 4

(அறிவியல் புர்வமாக நான் எனும் உணர்வை பற்றி )  ஒலியும் ஒளியையும் பார்ப்பது யார் ?

மூளை ஒரு திரையரங்கம் என்றும் அதில் சினிமா ஓடுகிறது என்றும் தெரிகிறது , அதில் உள்ளிருந்து பார்த்து ரசித்து இன்ப துன்பங்களை அனுபவிப்பது யார் ? அந்த ஆளும் மூளையின் செல்கள் தானா ? செல்களின் சர்க்யூட் தானா ? அதற்கென்று ஒரு தனிப் பகுதியிலிருந்து "நான்" காண்கிறேன் என்ற உணர்வு பிறந்தால் உணர்வை உணர்பவர் யார் ?

இது சிக்கலின் இரண்டாம் பகுதி 

இந்த ஒற்றைச் செல் ஜீவனைப் பாருங்கள் ., இதற்க்குச் எதைச் சாப்பிடலாம் , எதைச் சாப்பிடக் கூடாது என்ற அறிவு இருக்கிறது . தன் ஒரே ஒரு செல்லையே நடக்க , எடுக்க , சாப்பிட என்று பயன் படுத்துகிறது . இதற்கு உள்ளேயே எல்லாச் செயல் பற்றிய முடிவுகளும் எடுக்கப் படுகின்றன .அதாவது அந்த ஒரு செல்லே மூளையாகவும் இருந்து கொள்கிறது .., நானிருக்கிறேன் என்ற நினைப்பையும் அந்த ஒற்றைச் செல்லுக்கு உண்டு .

                        ஏன் இந்த "நான் " உணர்வு தேவைப் படுகிறது ? எண்ணிப் பாருங்கள் இந்த உணர்வு இல்லாவிட்டால் இந்தச் செல்லின் கதி என்னவாகும்? எதையாவது சாப்பிட எண்ணுமா ? சாப்பிடுவது ஒரு எந்திரச் செயலாக நடைபெறுவதானால்  அச்செயல் எதையாவது சாப்பிட்டு விட்டு இறந்து போகலாம் . "நான் " என்ற இருப்பு நினைவு இல்லாது போனால் அது எப்படி ஆபத்திலிருந்து தப்பிக்கும்  ? ஏன்  தப்பிக்க விளையும் ! அதன் உணர்வும் , ஓட்டமும் அந்த நான் என்ற உணர்வுக்குத் தானே . யாருமே இல்லாத போழ்து , யாருக்காக அச்செயல் செய்யப்பட வேண்டும் .எனவே ,நான் என்ற உணர்வு இருப்பதால் மட்டுமே , ஒரு செயல் பெருகி ,பல்லூயிராகி ,மரம் , செடி , கோடி , புழு , பூச்சியாகி , மனிதனாகப் பரிணாமம் அடைய முடியும் .

தம் உடலில் உள்ள சிறுநீரகம் ,நுரையீரல் ,குடல் முதலானவை அவ்வ வற்றிக்கு உரித்தான செயல்களை மட்டுமே செய்கின்றன .ஆனால் மூளையோ ,மற்ற உறுப்புகள் என்ன செய்கின்றன ,எப்படிச் செய்ய வேண்டும் என்று மேற்பார்வையிடுகிறது .மூளை உடம்பை நிர்வகிக்கிறது . மூளையிலேயே நமது முழு உடம்பும் இருக்கிறது .கனவின் போது அந்த உடம்பும் , உணர்வுகளும் ,நினைவுகளும் மூளையில் பதிவாகியிருக்கின்றன . உடம்பு ஹார்டுவேர் என்றால் மூளை ஒரு சாப்ட்வேர் .

ஓர் உயிரின் எல்லாப் பணிகளையும் மூளை செய்கிறது .செய்விக்கிறது . ஒரு குறிப்பிட்ட சந்தர்பத்தில் ஒரு விலங்கு ஒரு மாதிரி நடந்து கொள்கிறது என்றால் , அதன் மூளையில் அப்படி ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் .அதாவது உடம்பு என்ற வீட்டுக்கு மூளை ஒரு சொந்தகாரர் .அவ்வாறெனில் மூளைக்கும் ஒரு சொந்தகாரர் வேண்டும் செயல்படுத்துவது போல் , மூளையின் கட்டுப் பாட்டை வேறு ஓர் உறுப்பு (அது மூளைக்குள்ளாகவே இருக்கலாம் ) முன் நின்று செய்யலாம் .அதுவே "நான்" என்பதாகும் .

மன உணர்வுகள் யாருக்கு ? என்ற கேட்காத கேள்விக்கு ஒரு பதிலாக நான் என்ற உணர்வு சதா பிறந்து கொண்டே இருக்கிறது . இவ்வுணர்வு மூளையில் எழும் சினிமாவிலிருந்து வேறுபட்டதல்ல  சினிமாவும் , சினிமா பார்பவர்வரும் ஒன்றே . எப்படி எளிமையான வேதியல் செயலால் மொழியும் , உணர்வுகளும் எழும்புகின்றனவோ , அவற்றிலிருந்து இன்னொரு மேல் தளத்தில் "நான் இருக்கிறேன் " என்ற உணர்வும் எழும்புகிறது . இவ்வாரு பலபடி நிலைகளின் மனம் செயல்படுகிறது . கோபுர உச்சி போல் பிரதானமாக "நான் " என்ற உணர்வு எழும்புகிறது .

இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடிகிறது . இதுவே முடிவானதும் அல்ல  அடுத்த 50 ஆண்டுகளுகளில் இதற்கு முடிவு கிடைத்து விடலாம் . கிடைக்காமல் போனாலும் நாம் வெட்கப்பட வேண்டியதில்லை . ஏன்னெனில் "நாம் " நாம் தான் !

நன்றி : - அறிவியல் பார்வை புத்தகம் 
---------------------------------------------------------------------------------------------------
அடியேனின் கருத்து
                              
"நான் " என்னும் உணர்வு அறிவியல் முறையில் மூளையின் நடுமையத்தில்

 இருப்பதை அறிவியல் பார்வையில்  சொல்லவதை தாம் நாம் குண்டலியின் 7 சக்கரங்கள் உச்சியில்(சகஸ்ரஹாரம்) சகஸ்ரதளம் என்று குறிப்பிட்டுகிறோம் ..,யோகத்தில் குண்டலினி சக்தி  பாம்பு வடிவில் பின்னி மேல் எழுந்து சகஸ்ரதளத்தில் கொட்டும் போது நான் கரைந்து ஆயிரம் தாமரை எழுந்து " நான் " உணர்வு ஆத்மாவில் கரைந்து மறைகிறது ..., ஆத்மா விடுதலை பெற்று ஆதியோடு (அதாவது பிரம்மத்தில் பரம்பொருளில் இணைகிறது ) இது தான் ஆதியோடு சமமாகுதல் (சமாதி ).  

                                             
 சரியை ,கிரியை , யோகம் , ஞானம் 

சரியை ,கிரியையில் - முதலில் நம் கர்மாவை உணர்ந்து . கர்மாவை ஏற்று அனுபவிக்க சித்தமாக இருக்கிறேன் இறைவா என்று பற்றில்லாமல் இப்பிறவி கர்மா , கடமைகளை ஆற்ற வேண்டும் . இதை தான் காரைச் சித்தரும் இப்படி சொல்கிறார் 

இல்லறமே நல்லறமா மென்று சொன்னால்  இன்பமெனப் பள்ளியறைக் குள்ளாகாதே தொல்லறமே துறவறமே தனது வண்ணம் துறந்திட்டா பற்றறவே துறந்தி டாமல்  சொல்லறமே யுலகமெல்லாம கண்ணின் ரூபம்  சொர்ணமய மாம்சொர்க்கம் சுகவை போகம் கல்லறமே கனகமணிப் பூஷ ணங்கள் கமலத்தைக் காத்திடுவான் பத்ம யோகி. 

பெற்றவர்கள் தங்கடனைத் தீர்க்க வேண்டும் 

உற்றவர்கள் உறுகதியைப் பார்க்க வேண்டும்

பற்றுவர வத்தனையு முடிக்க வேண்டும் 

பற்றில்லாப் பாமரைக் காக்க வேண்டும் 

செற்றபுலன் பொறியடக்கிச்சேர வேண்டும் 


சித்தமுறச் சிவபூஜை செய்யத் தானே.

கற்றவர்க்கே பலயோகம கனியும் பாரே.

"கல்லாதவர் யோகமெல்லாம் பொல்லா யோகம் "

                                                      --- காரைச் சித்தர் 

"கல்லாதவர் யோகமெல்லாம் பொல்லா யோகம் ".. என்றால் அடிப்படையாக நமக்கு கர்மா ,கடமைகள் உள்ளது என்பதை உணர்ந்து செயல்படுதல் .. தானம் , தர்ம நெறி (பண்பாடு , ஒழுக்கம் , ஜீவகாருண்யம் , அன்பு ) இவற்றில் தான் கர்மா கழியும் . நான் என்ற உணர்வு உண்மையாக மறையும் .., "  ஏனெனில் நான் என்ற உணர்வு மறைந்தால் அங்கு அதை சொல்வதற்கு அவரில்லை .. 

தானாயிருக்கும் பிரமத்தின்
         தன்செயல் தன்னை அறிந்தாக்கால்
வானாகி நின்று மறைபொருள்
          ஆனதை வாய்கொண்டு சொல்லுவாரோ ?? ?
                                       - ஏகநாதர் 
பின்பு தான் யோகம் , ஞானத்தை அடைய முடியும் .சித்திக்கும் . வெறுமனே யோகம் செய்தால் ராவணைப் போலத்தான் சிறந்த சிவபக்தனாக இருந்தும் தவம் செய்தும் ..., நவகிரங்கங்களை கட்டுபடுத்தும்  சக்தியிருந்தும் .. சபலத்தாலும் ., அகந்தையாலும்  அனைத்தும் வீணாகியது .., ஞானத்தை பற்றி வெறுமனே படித்தாலும் பயனில்லை .. இதை தான் ஸ்கந்த குரு கவசத்தில் "தத்துவ குப்பையை மறந்திட செய்திடப்பா "  என்று வரும் ..,


ஆதாலால் தாம் யாமும் அடிப்படை ஆன்மீக குணங்களை ,கடமைகளை முடிந்த மட்டும் கடைப்பிடித்து ., கடைபிடிப்பதை மட்டும் சொல்கிறோம் . அடிப்படை ஆன்மீகத்தை பின்பற்றி இறைபாதத்தை பற்றினால் .

இல்லாதது இல்லையாகி இரவுமில்லை  பகலுமில்லை  இறப்பின்றி பிறப்பின்றி ஏகாம்பரன் மூச்சொன்ற எல்லாம் உளதாகி ஏகசக்தி ஆகுதப்பா.!நீராய் நெருப்பாய் நிலனாய் காற்றாய் மேலாய் கீழாய் மாயமாய் இருந்து வாழ்ந்திட வருணா அருளிடுவாய் என்றும் ...!!  ...யென ஏக பரம்பொருள் பாதம் பற்றல்லாகும்  ..

இப்படிக்கு 
புலிப்பாணி சித்தர் அடிமை 
சித்தர் பைத்தியம்   

Wednesday, August 14, 2013

அடிப்படை ஆன்மிகம் - 3


ஆரோக்யத்தை உணர்த்தும் சித்த வைத்ய 
 "அட்சர ஆழிப்பா " !!!



.E.C.G எனப்படும் மருத்துவ டெஸ்டிலே , வரைபடத்தில் கீழிருக்கும் வளைவை இருதயத்தின் ஆரோக்கியக் குறைவாக எடுத்துக் கொள்கிறார்கள் அல்லவா ! உண்மையில் E.C.G என்பது  அவரவருடைய கையெழுத்து நிர்ணய சக்திகளாகும் .

அக்காலத்தில் இருதய நாள நாடிகளை அறிந்திட , ஒரு ஓலைச் சுவடியிலே மயில் தோய்த்துத் தந்து "அட்சர ஆழிப்பா " எனும் ஆரோக்கியப் பரிபாஷைச் சூத்திரத் துதியை எழுத வைத்து , இதில் ஏற்படும் நெளிவு , சுழிவுகளை வைத்து இருதயத்தின் நிலையை அறிவார்கள் ..

அட்சர ஆழிப்பா ( அ முதல் ஃ வரை , க முதல் ன் வரையிலான அனைத்து உயிரெழுத்துக்களும் , உயிர்மெய் எழுத்துகளும் அடங்கிய ஆழிமொழிப்பா )

 உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும் , மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் இந்த அட்சர ஆழிப்பாவில்  (தியானத்தில் ) அடங்கி (ஆரோக்கிய ) யோகத்தில் ஒடுங்கி இருப்பதைக் காணலாம் .. உயிரும் , மெய்யும் , சேர்வது தானே ஜீவ சக்தி !

முற்காலத்து நாட்டு வைத்தியர்களும் , சித்த வைத்தியர்களும் இத்தகைய அட்சர ஆழிப்பாக்களை  எழுத வைத்தும் , ஓத வைத்தும் , நோயுற்றோரின் இருதய நாடிகளைத் துல்லியமாகப் பகுத்தறிந்து நல்மருந்துகளை அளித்தனர் .., விரல் நுனிகளுக்கும் ,இருதயத்திற்கும் ,மனிகட்டிற்கும் நிறைய தொடர்புகள் உண்டு என்பது இதன் மூலம் புனலாகும். 
(மேலும் விளகங்களை "அட்சர ஆழிப்பாவை"  ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஜனவரி 2007இதழிலில்காணக ) (தெய்வத் தமிழ் பற்றிய ஆன்மீக விளக்கங்களை ( ஸ்ரீ அகஸ்திய விஜயம் அக்டோம்பேர் & டிசம்பர்  2007 இதழிலில் காணக )

------------------------------------------------------------------------------------------------------------
அடியேனின் கருத்து :-

***தெய்வத் தமிழ் மாமறைகளை ஓதுவதை விட .., மிகப் பெரிய வாசி யோகம் ஏதும் இல்லை., என்பதை  (.அட்சர ஆழிப்பா மூலம் ஒரளவு  உணர முடிகிறது அல்லவா ).., அப்படியெனில் திருவாசகத்தை சிவபெருமானே மாணிக்க வாசகர் சொல்ல கைப்பட எழுதினார் . திருப்புகழை முருகப்பெருமானே அடியெடுதுக் கொடுத்தார் ...,இப்படியே ஏனைய அனனத்து தேவாரங்களும் .,திருப்பாவை ., திருஅருட்பாக்கள் ., ஏனைய தமிழ் மறைகள் இவற்றில்யெல்லாம்  எத்துனை புனிதம் இருக்கும் .(ஆனால் உண்மை பக்தியோடு , பண்பாட்டோடு  ., தான ,தர்ம நெறியொடு  தினமும் ஓதினால் தானே உணர முடியும் ..,) 


***தெய்வத் தமிழ் மாமறைகளை ஓதுதலை விட பெரிய வாசி யோகம் ஏதுமில்லை என்று ..., மாமறைகளை மட்டும் ஓதினால் போதுமா .., தெய்வத் தமிழ் பண்பாடு .., நாகரிகம் ., நல்லொழுக்கம் ., மனத்தால் ., எண்ணத்தால் தூய்மையாக இருத்தல் வேண்டும் .., இதுவே தெய்வத் தமிழ் திருநாட்டில் வாழ்ந்து ., தெய்வத் தமிழ் பேசும் பெரும் பேறு பெற்றோர் அனைவரின் கடமையாம் .., 


***ஆகவே  தினமும் குறைந்தபட்சம் 3 முன்று பதிகங்களையேனும் ஓதுதலே . .., முறையான .., ஆன்மீக பாதைக்கு வித்திடும் ..., கோடி கோடி ஆண்டு தவம் ., யோகம் , யாகம் செய்தோரை விட ..., நெக்குருகி நெஞ்சுருகி இறைவனை பாடி .,தான , தர்ம நெறியோடு வாழ்ந்தவர்களுக்குகாக தான் இறைவன் ஏழு திரைகளை நீக்கி ஓடோடி வந்ததை அறிகின்றோம் .,தெய்வத் தமிழ் மாமாறைகளை ஓதுதலே . யோகம் , ஞானம் , தவம் ., பரிபுரன இறையருள் அனைத்தையும் சுயம்பாய் பெற்றுத் தரும் .,  அதோடு பசிதொருக்கும் ., உதவி வேண்டுவோர்க்கும் ., முடிந்த உதவி செய்வதும் ,,அஃதோடு தர்ம நெறி தவறாது நடத்தல் .., இவை முன்றும் தான் அடிப்படை அனைத்திருக்கும் ...,
-----------------------------------------------------------------------------------------------

அகஸ்தியரின் அறவுரைகள்..!

கடமையை செய்வது என்பது வேறு, பற்று என்பது வேறு. இரண்டையும் தேவையில்லாமல் குழப்பிக்கொள்ளக் கூடாது. அதாவது, ஒரு வாகனத்தை வாங்காதே என்று நாங்கள் கூறமாட்டோம். ஒரு வாகனம் இருக்க இன்னொரு வாகனம் எதற்கு ? அந்த தனத்தை, தக்க ஏழைக்கு கொடுத்து புண்ணியத்தை சேர்த்துக்கொள் என்றுதான் கூறுகிறோம். அந்த வாகனம் தொலைந்து போனாலும் கவலைப்படாத மனதை வளர்த்துக்கொள் என்று கூறுகிறோம். பாவங்கள் குறைய, குறையத்தான் நீ எண்ணக்கூடிய அமைதியும், பற்றற்ற தன்மையும் வளரும். ‘ பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும், பெண்ணிற்கு நல்ல இடத்திலே திருமணம் ஆக வேண்டும் ‘ இவையெல்லாம் முதலில் மனிதனின் ஆசையாக இருந்து பிறகு கவலையாக மாறிவிடுகிறது. எண்ணவேண்டும், “ அதுவும் ஒரு ஆத்மா. ஈன்றோர்களும் ஆத்மா. எப்படி கர்ம வினைக்கேற்ப அந்த ஆத்மா பிறவி எடுத்திருக்கிறதோ, பிள்ளைகளும் அவ்வாறு பிறவி எடுத்திருக்கிறார்கள். அதனதன் கர்மவினைப்படி அதனதன் வாழ்க்கை சம்பவங்கள் நடந்துபோகும். இதையெண்ணி கவலையோ, கலக்கமோ கொள்ளக்கூடாது. கடமைகளை மட்டும் செய்யவேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.

இறைவன் அருளைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப ஒரு மனிதன் செய்கின்ற எத்தனையோ தவறுகளும், பாவங்களும் கூட பின்னால் இறைவனால் மன்னிக்கப்படலாம். மனிதன் அறியாமையில் செய்யும் தவறுகள் மன்னிக்கப்படும். அறிந்தே ஆணவத்தாலோ, தன்முனைப்பாலோ, வேண்டுமென்றோ அல்லது காழ்ப்புணர்ச்சியினாலோ அவன் செய்யக்கூடிய தவறுகளும், பாவங்களும் பெரும்பாலும் மன்னிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தராது.


இதை உணர்ந்து எந்த வழியிலும் தவறுகள் செய்யாமல் எம்மை நாடுகின்ற மனிதர்கள் வாழ பழக வேண்டும். அஃதொப்ப சூது, வாது இல்லாத மனிதனை வருத்தாமலும், வேதனைபடுத்தாமலும் இருக்க வேண்டும்.  அறியாமையோடு ஆணவமும் சேர்ந்துகொள்ள மனிதன் பாவத்தை விடுவதாக இல்லை. எனவே மனிதனானவன் இறைவனின் பெருங்கருணையை எண்ணி, ஒரு மனிதன் செய்கின்ற தவறுகளை எப்படி இறைவன் பொறுத்து மன்னித்து அருள்கிறாரோ அதுபோல் சக மனிதர்கள் செய்கின்ற குற்றங்களை எல்லாம், குறிப்பாக, தன் மீது கூறப்படும் பழிசொற்களையெல்லாம் பொறுமையோடு சகித்துக்கொள்ளும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இறைவன் அருளால் உலகியலே பிரச்சினை எனும்பொழுது உலகியல் பிரச்சினைகளுக்கு வழி கூறினால் என்ன ? கூறாவிட்டால் என்ன ? ஒரு மனிதனுடைய தேவைகள் அனைத்தும் உடல் சார்ந்து இருப்பதால் அதை வைத்துதான் வாழ்வில் நிறைவு, சந்தோஷம் என்ற முடிவிற்கு வருகிறான். நாங்கள் என்ன கூறுகிறோம் ? உன் தேவைகள் எது வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். கூடுமானவரை நேர்மையாக வாழ்க்கையை நடத்து, தர்மங்களை செய், உன் கடமைகளை தெளிவாக செய், உன் பூர்வ ஜென்ம பாவங்கள் குறைந்தாலே நீ விரும்பியது உனக்கு கிடைக்கும். இதைதான் நாங்கள் மறைமுகமாகவும், நேர்முகமாகவும் சுட்டிக்காட்டுகிறோம். எனவே ஒரு பிரச்சினைக்கு நேரடியாக இதை செய், அதை செய் எனக் கூறுவது ஒரு வாக்கு. ஒட்டுமொத்தமாக ஒரு மனிதன் பிரச்சினைகளே இல்லாமல் வாழ வேண்டுமென்றால் இந்த உலகில் அது சாத்தியமில்லை. அவன் மன நிலையைதான் மாற்ற வேண்டும். அதற்கு தெய்வீக வழி ஒன்றுதான் சிறந்த வழி. அவன் மனம் பக்குவம் அடைந்தாலொழிய இதிலிருந்து அவன் விடுபடவே முடியாது.

அனுபூதி என்றால் என்ன ஐயனே ?

அனுபவம் என்றால் என்ன ? ( வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் ). நிகழ்வுகள் என்றால் என்ன ? இந்த நிகழ்வுகள் எதனால் ஏற்படுகிறது ? இதற்கு துவக்கம் எது ? ( கர்மவினை ). அந்த கர்மவினை எங்கிருந்து துவங்குகிறது ? ( பாவங்கள் செய்வதினால் ). பாவங்களை ஒரு மனிதன் ஏன் செய்கிறான் ? ( ஆசை, அறியாமையினால் ). அறிந்த பிறகு  பாவங்களை ஏன் தொடர்கிறான் ?. ( இச்சையினால் ). இச்சை எங்கிருந்து துவங்குகிறது ?  ( மனதிலிருந்து ). மனம் எங்கிருந்து துவங்குகிறது ? ( எண்ணங்களில் இருந்து ). எண்ணங்கள் என்றால் என்ன ? ( தெரியவில்லை ஐயனே, நீங்களே சொல்லிவிடுங்கள். எங்களையே கேள்வி கேட்கிறீர்களே ). எம்மை நோக்கி எத்தனையோ வினாக்களை விடுக்கிறீர்களே ? யாம் வினா விடுக்கக் கூடாதா ? ( உங்களுக்கு பதில் சொல்லும் அளவிற்கு எங்களுக்கு தகுதி இல்லை ஐயனே ) இப்படியெல்லாம் மனதிற்குள் வினவிக் கொண்டே போனால் ஒன்று கிட்டுமல்லவா ? அதுதான் அனுபூதி.
                     -ஜீவ அருள் நாடி

Tuesday, August 13, 2013

ஆவணி பூசம்

போகர்  ஏழாயிரம் 


என்னவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் 
எழிலான புலிப்பாணி கண்ணேகேளும்

பன்னவே வடிவேலர் தாம்பிறந்த பதாம்புயத்தை 
சொல்லுகிறேன் பண்பாய்க்கேளும்

துன்னவே மூன்றுயுகங் கடந்தவேலர் துப்புறவாய்ப் 
பிறந்ததொரு நேர்மையப்பா

சொன்னபடி யாவணியாந் திங்களப்பா சொல்லுகிறேன் 
முதற்பூசங் கால்தானொன்றே

                                         பாடல் எண் - 5941.


ஒன்றான கால்தனிலே பிறந்தநாளாம் வுத்தமனார் 
வடிவேலர் பிறந்தாரென்று

குன்றான மலைபோலே சாத்திரங்கள் கூறினார் 
குவலயத்தில் சொல்லொண்ணாது

தென்றிசையில் அகஸ்தியருக்கு உபதேசங்கள் 
செய்ததொரு வடிவேலர் சித்துதாமும்

பன்றிபெருச் சாளியின்மேல் சாரியேகும் பண்பான 
விநாயகருக்கு தம்பியாமே

                                                  பாடல் எண் -5942.


தம்பியென்று சாத்திரங்கள் சொல்லலாச்சு சதகோடி 
வடிவேலர் சித்துதன்னை

வெம்பியதோர் மாந்தருக்கு ரோகந்தீரும் வெட்டவெளி 
வடிவேல ரென்றேசொல்வார்

கும்பியே மனங்கொதித்து வந்தபேர்க்கு கோடான 
கோடிபொருள் ஈவாரப்பா

தம்பியே எந்தனுக்கு குருவுமாகும் தாக்கான 
வடிவேலர் தண்மைபாரே
                                                        பாடல் எண் -5943.


போகர் பெருமான் சுட்சுமும்மாக எப்படி வேண்டுமாயின் கூறியிருக்கலாம் .., நேரடி பொருள் கொண்டால் அவை பல விவாதங்களுக்கு இட்டுச் செல்லும் ., பல குழப்பங்களுக்கு இட்டுச் செல்லும் .., அன்று ஒர் மகா விசேஷ தினம் என்றவாறாக எடுத்துக் கொள்ளுதல் நலம் ..,  ஒரு கூடுதல் குறிப்பு ஒவ்வொரு பூச நட்சத்திரதையும் முடிந்த  பூஜை வழிபாட்டுடன் முருகப் பெருமானை வழிபடுதல் பரிபுரன அருளை பெற்றுத் தரும் .. முருகப் பெருமானின் அருள் பெற்றால் .. அகத்தியர் ., போகர் முதல் சர்வ கோடி சித்தர்களின் அருள் கட்டாயம் வார்க்க பெரும் ..
                           ( இந்த வருடம் செப்டம்பர் 2ஆம் தேதி ஆவணி பூசம் )


புத்தியும் நீ ! முருகோன் ஆறெழுத்தின் பொருளறியச் 
சத்தியும் நீ ! சிவமாய் எங்குமாய் நின்ற சர்வமுகச் 
சித்தியும் நீ ! அன்பர் பார்க்கின்ற ஞானத் தெளிவுதரு
முத்தியும் நீ ! அன்றி வேறில்லை வேதம் முடிந்திடமே !
                                                         -- அகத்தியர் 


இப்படிக்கு 
புலிப்பாணி சித்தர் அடிமை 
சித்தர் பைத்தியம் 

Friday, August 2, 2013

அடிப்படை ஆன்மிகம் -2

இதற்கு முந்தைய பதிவில் காலம் பற்றி அறிவது மிக முக்கியம் என்று குறிப்பிடிருந்தோம் ., முடித்தால் முந்தைய பதிவில் யாம் குறிப்பட்ட இதழை படித்து பின்பு  .., "கலைக் கதிர் அறிவியல்"  க.மணி அவர்களது "அணு , உயிர் ,அண்டம் " புத்தகத்தில் "சார்பியல் தத்துவம் " அத்தியாத்தை மெதுவாக பொறுமையாக படித்துப் பாருங்கள் ., காலம் பற்றி நன்கு விளங்கும் ..  

ஏன் காலத்தை பற்றி அறிவது முக்கியமென்றால் .., காலத்தை முறையாக அறிந்து பயன்படுத்தல் தான் ஆன்மீகத்தின் முதல் படி .., பின்பு தான் ஆன்மீகத்தை பற்றிய மெய்யான மெய்ஞானம் விளங்கும் .. பயன் படுத்துகிறோமோ இல்லையோ .. ஒரு அசைக்க முடியாத ஆழ்ந்த நம்பிக்கை உருவாகும்  .., பாதை தெளிவாகும் .., 


"அணு , உயிர் ,அண்டம் " புத்தகத்தில் அத்தியாத்தில் இருந்து சில வரிகள் :- 

***இப்பிரபஞ்சம் என்றோ ஒரு காலத்தில் தோன்றியதாக எண்ணுகிறோம் .அக்காலத்திற்கு முன்பு இப்பிரபஞ்சம் என்னவாக இருந்தது ? என்ற கேள்வி உடனே எழுகிறது .நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ., காலமும் இடமும் இந்தப் பிரபஞ்சத்திற்குள் தான் இருக்கிறது . ஆனால் பிரபஞ்சம் காலத்திற்குள் இல்லை .அதே போல்  பிரபஞ்சத்திற்கு வெளியே என்று ஒரு இடமும் இல்லை ., பிரபஞ்சத்திற்கு முன்போ அல்லது மறைவுக்குப் பின்னாலோ காலமும் இல்லை , இடமும் இல்லை ., பிரபஞ்சம் தோன்றிய பிறகே காலமும் ,இடமும்  தோன்றியன . இந்தப் பிரபஞ்சம் வரிந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கும் பொழுது எதில் வரிந்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுகிறது . பதில் பிரபஞ்சத்திற்கு வெளியே இடம் எதுவும் கிடையாது .

**** வினாடிக்கு 3லட்சம் கி .மீ வேகத்தில் ஒளி செல்கிறது ! என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை .அப்படிப்பட்ட வேகம் கொண்டிருந்தும் ஒளியானது நம் உலகை வந்தடைய 8 நிமிடங்கள் பிடிக்கின்றன ! .., விண் வெளியில் உள்ள தூரங்கள் அப்படி ! வானத்தில் கோடிகணக்கான விண் மீன்கள் உள்ளன .அவற்றுள் நமக்கு மிக மிக அருகில் உள்ள ஒரு விண்மீனாகிய ஆல்ஃபா செண்டாரி [alpha centauri ] யிலிருந்து ஒளி புறப்பட்டு நம் கண்களை வந்தடைய 4.5 ஆண்டுகள் பிடிக்கிறது . ஆல்ஃபா செண்டாரிக்கு அருகிலேயே இன்னொரு விண்மீனும் இருக்கிறது . அதன் ஒளி நம்மை வந்தடைய பல ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன . நாம் இரவில் மேற்குறிய இரண்டு விண்மீன்களையும் ஒரே சமயத்தில் இரண்டு ஒளிப் புள்ளிகளாகப் பார்க்கிறோம் . ஆனால் 4.5 ஆண்டுகளுக்கு புறப்பட்ட ஒளியையும் இன்னொன்றின் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒளியையும் பார்க்கிறோம் என்று நமக்கு தெரியவில்லை ..,

மேற்கூறிய உதாரணத்தையே மாற்றிச் சொன்னால் ,அதன் வீபரீதம் உங்களுக்கு எளிதில் புலப்படும் . ஒருவர் ஆல்ஃபா செண்டாரியிலிருந்து கொண்டு பூமியைப் பார்ப்பாராகில் அவருக்கு 4.5 ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் நடந்த விஷியங்கள் தெரியும் . பக்கத்தில் இருப்பதாகத் தோன்றும் விண்மீனிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பின்பிருந்த பூமி தான் தெரியும் . இராஜராஜ சோழன் தஞ்சாவூரில் பிரதீஸ்வரர் ஆலயத்தை கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்வதைப் பார்க்கலாம் . நல்ல கூர்மையான தொலை நோக்கி இருந்தால் இது சாத்தியமே காலமும் - இடமும் இப்படி தளத்திற்கு தளம் மாறி மாறி காணப்படும் .

***கால நீட்சி எதோ கற்பனைக் கணக்கினால் ஏற்படும் வீ பரீதம் என்று நினைத்து விட வேண்டாம் . பலமுறை காலநீட்சி சோதனைச் சாலைகளில் சோதிக்கப்பட்டிருக்கிறது அணுக்கருவை உடைத்து துகள்களாக்கச் செய்யும் துகள் முடுக்கிகளில் [particle accelerator ] , துகள்கள் ஒளியின் வேகத்திற்கு கிட்டே சென்று பறக்கும் போது  அவற்றின் ஆயுள் அதிகமாக நீட்டிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது . நீட்டிக்கப்பட்ட ஆயுளின் அளவு ஐன்ஸ்டின் கற்றுத்தந்த கணக்கின் படியே இருந்ததும் தெரியவந்தது  ., 

***ஆதி காலத்தில் இந்திய ஞானிகள் கண்ட ஒரு பிரபஞ்சம் இன்று ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவத்தால் உறுதி செய்யபடிகிறது காலமும் , வெளியும் எல்லா இடங்களிலும் சமமாக இல்லை என்பது அவர்கள் கண்டது . 

**** இந்த இடத்தில அனைவருக்கும் எழும் அனைத்து கேளிவிகளுக்கும் ., அதற்க்கும் மேலான பல முதிர்ந்த அறிவியல் ஆராய்ச்சிகளையும் . அதன் விளக்கங்களையும் அந்த புத்தகத்தில் எளிய தமிழ் நடையில் "சார்பியல் தத்துவம்" அத்தியாயத்தில் காண்க..!

-------------------------------------------------------------------------------------------------------------------------------

அகஸ்தியரின் அறவுரைகள்.!


ஆதியோடு அந்தமாய் அந்தமோடு சொந்தமாய், சொந்தமற்ற தன்மையாய், தன்மை கொண்ட தன்மையாய், தன்மையது தரும் நன்மையாய், நன்மை நல்கும் செழுமையாய், செழுமையோடு உயர் பண்பதாய், பண்பதோடு உயர் நலமதாய், நலமோடு உயிருக்கு உயிரான பலமனதாய் பலமோடு என்றென்றும் பரம்பொருளாய் எங்கும் நிறைந்ததாய்,  நிறைந்ததாய் ...!
அஃதே நிறைந்த தாய்,  நிறைந்ததாய் இருக்கின்ற அது உயர்ந்த தாய், அது உயர்ந்த தாய் என்றும் உள்ள தாய், உள்ளதாய் பெற்றதாய் யாரும் பெறாத தாய். இஃதொப்ப வந்ததாய் போனதாய் இருக்கின்ற உயிர்க்கூட்டம் அங்கு சென்று இருப்பதாய் இருப்பதை உணர்ந்ததாய் இருக்குங்கால் அத்தருணமே அத்தாய் எத்தாய் ? என நிறைவதாய் புரிந்துகொள்ளும் தன்மையதாய் இருக்குந்தாய்.

எனவே கண்டதாய், காணாததாய் இருக்கின்ற அத்தாய் அதுவே என்றும் பெற்றாய் என்று உணரக்கூடிய ஒரு தாய். இஃதொப்ப உளதாய், இலதாய் என்று ( அருண ) கிரி பாடினாலும் அது உள்ளதாய் அது நல்லதாய் அத்தாய் பரம்பொருள் தன்னை வணங்கி போற்றி இயம்புகிறோம் சில்வாக்கு இத்தருணம். தருணமதில் நவமாய் அமர்ந்து நலமாய் வாக்கறிய வந்திருக்கும் அனைவருக்கும் நலமாய் வாழ்வு உயர யாம் இத்தருணம் இறையருள் கொண்டு நல்லாசி வழங்குகிறோம். இஃதொப்ப பல்வேறு தருணங்களில் மாந்தர்களுக்கு பல்வேறு ஐயங்கள் எது குறித்தும் எழுந்துகொண்டே இருக்கும். இயம்பிடுவோம் அஃதொப்ப ஒருவன் நல்லவனோ, நல்லவன் அல்லாதவனோ அவன் மனதிலே ஒரு வினா இருந்துகொண்டே இருக்கும். அஃதொப்ப இஃதொப்ப நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருள் எங்கும் வியாபித்து எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி ஆண்டுகொண்டிருப்பது உண்மையென்றால் அதன் தன்மை, பராக்கிரமம் கட்டாயம் உயர்ந்ததாக இருக்கும். அப்படி உயர்ந்ததாக இருக்கக்கூடிய அந்த பரம்பொருள் உண்மையில் உயர்ந்ததாகவும் இருக்கும். 

அப்படி உயர், உயர், உயர் பெருமைகளை, உயர், உயர், உயர் பண்புகளையெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ள அந்த பரம்பொருள் அதன் அளக்கவொட்டா பெரும் சக்தியைக்கொண்டு படைத்திட்ட உயிர்களில் மட்டும் ஏன் இத்தனை பேதங்கள்? இஃதோடு மட்டுமல்லாமல் இஃதொப்ப ஜீவ அருள் ஓலை மூலம் மகான்கள் வாக்கினை கூறுகின்ற தருணம் ஜீவ அருள் ஓலை மூலம் வாக்குகளை அறிந்துகொண்டே வருகின்ற மனிதர்கள் ஜீவ அருள் நாடியிலே சித்தர்களின் அருளாசியைப் பெற்றதாலோ அல்லது பூர்வ புண்ணியத்தாலோ மகான்களின் கருணை மிகுந்த வாக்குகளை பெற்றுக்கொண்டே வருகிறார்கள். மகான்களும் அஃதொப்ப மனிதன் வந்தால் வாக்குகளை கூறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் அஃதொப்ப மனிதனின் அந்தரங்கம் என்பது பல்வேறு தருணங்களில் சராசரி மனிதராலோ ஏன்? நல்ல ஒழுக்கம் மிகுந்த மனிதராலோ ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

 - ஜீவ அருள் நாடி