எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Sunday, August 28, 2022

பூரம் நட்சத்திரம்

 

இரட்டைப் பிள்ளையார்

நட்சத்திரக் காப்புத் திரட்டு

பன்மலர் தூவிப் பாடி மகிழ்ந்து பூரம் அருள்

 பூண்டு இன்முகம் சுமந்து வாழ இரட்டை

 கணபதி பாதக் காப்பே!

நட்சத்திர சகாயத் திருவாக்கியத் திரட்டு

துர்கதி நாசினி தூப ப்ரகாசினி ஜெய

பூரம் தேவி சகாய க்ருபே


ஸ்ரீஅகஸ்தியர் அருளிய திருநட்சத்திரப்

 பொற்பாதத் திரட்டு



உள்ளம் மேவும் உத்தமியே உனை நினைந்து

 உருகி அழும் எனைத் தேத்து உத்தம 

பூரம் பொற்பாதமே! போற்றி!!

பூரம் தானம் :-

கொத்தமல்லி சட்னி சாதம், கீரை சாதம்

கல் அடைப்புகள் நீங்கும்.

பூரம் அதிதேவதை - பார்வதி

பூரம் நட்சத்திர தலம்

திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர்

புதுக்கோட்டையிலிருந்து சுமார்10கி.மீ

 தொலைவில் பட்டுக்கோட்டை மார்க்கத்தில்

 ஆலங்குடிக்கு முன்பாக உள்ளது.

Saturday, August 27, 2022

மக நட்சத்திரம்

இரட்டைப் பிள்ளையார்

நட்சத்திரக் காப்புத் திரட்டு 

தர்மத் திருஅருள் மாதேவி மகத் திருஅருளால்

 கர்மத் தொல்லை தீர உடனிருக்கும் இரட்டை

 கணபதி பாதக் காப்பே!

நட்சத்திர சகாயத் திருவாக்கியத் திரட்டு

சாது ஜடாரச்ரித தேவமுனி பூஜித 

யோக மகம் தேவி சகாய க்ருபே

ஸ்ரீஅகஸ்தியர் அருளிய திருநட்சத்திரப்

 பொற்பாதத் திரட்டு

கவலை போக்கி ஆதரிப்பாய் அன்னையே

 கசிந்துருகும் உன் பிள்ளைக்கருள்

மக பொற்பாதமே! போற்றி!!



மகம் அதி தேவதை - சுக்ரன்

தானம் செய்ய வேண்டிய பொருள்

மாங்காய் சாதம், காரக் குழம்பு சாதம்

சிறுநீரக நோய்கள் நீங்கும்.



மகம் நட்சத்திர தலம்

தவசிமடை ஸ்ரீமகாலிங்க சுவாமி

( திண்டுக்கலில் இருந்து நத்தம் செல்லும்

 வழியில் சுமார் 25கி.மீ தொலைவில் உள்ளது.)


Thursday, August 25, 2022

ஆயில்ய நட்சத்திரம்

 

இரட்டைப் பிள்ளையார்

 நட்சத்திரக் காப்புத் திரட்டு

ஏந்திழையாளொடு மதி ஆயில்ய சகிதமாகி

கை ஏந்தி நிற்கு நிலையிலா அருள்பூண

 இரட்டை கணபதி காப்பே!


நட்சத்திர சகாயத் திருவாக்கியத் திரட்டு

சீக்ர பலப்ரத பவபய ஹாரிணி

  சுப ஆயில்ய தேவி சகாய க்ருபே


ஸ்ரீஅகஸ்தியர் அருளிய 

திருநட்சத்திரப் பொற்பாதத் திரட்டு


உள்ளம் கனி உன் புகழ் பாடும் கள்ளமற்ற

 உந்தன் பிள்ளைக்கருளும் ஆயில்ய

 பொற்பாதமே! போற்றி!!


ஆயில்யம் நட்சத்திரத் திருத்தலம்

 திருந்துதேவன்குடி ஸ்ரீகற்கடேஸ்வரர்

கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து

 சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ளது.

அதிதேவதை - ஆதிசேஷன்

ஆயில்யம் தானம் :-

கருவேப்பிலைப் பொடி சாதம், 

பருப்புப் பொடி சாதம்

கல்லீரல், மண்ணீரல் நோய்கள் குணமாகும்!

Wednesday, August 24, 2022

பூச நட்சத்திரம்

  இரட்டைப் பிள்ளையார் 

நட்சத்திரக் காப்பு துதி


குளிர்ந்து வரும் குரு அருள் பூண்ட பூசத்து

 அருள் பூண்டு திகழ்கின்ற திடசித்தி

 அருள்கின்ற  இரட்டை கணபதி 

பாதக் காப்பே!


நட்சத்திர சகாயத் திருவாக்கியத் திரட்டு

ஜெயவர வர்ணினி ஜெயப் பிரதாயினி  

 சிவ பூச தேவி சகாய க்ருபே

ஸ்ரீஅகஸ்தியர் அருளிய 

திருநட்சத்திரப் பொற்பாதத் திரட்டு

வளம் தந்து பெருக்கிடுவாய் அன்புடன்

 வணங்கிட என் பூச பொற்பாதமே! போற்றி!!


பூசம் நட்சத்திர தலம் - விளங்குளம்

  ஸ்ரீஅட்சயபுரீஸ்வர ஆலயம்!

தஞ்சை மாவட்டத்தில்

 பேராவூரணியில் இருந்து

 சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது.


பூசம் அதிதேவதை - வியாழன்

பூசம் தானம் - கலப்பு சாம்பார் சாதம்,

 (பிஸிபேடாஹுளி), கத்தரி கொத்ஸுசாதம்

நுரையீரல் சம்பந்தமான நோய்கள்

 நிவர்த்தியாகும்!

Tuesday, August 23, 2022

புனர்பூச நட்சத்திர லிங்கம்

 

புனர் பூசம் இரட்டை பிள்ளையார் 

நட்சத்திர காப்புத் திரட்டு


புகழ் மாலை சூட்டியெனைப் புனிதனாக்கி

 புனர்பூச அருள் பூண்டு திகழ்கின்ற திடசித்தி

 அருள்கின்ற இரட்டை கணபதி பாதக் காப்பே!


நட்சத்திர சகாயத் திருவாக்கியத் திரட்டு


அம்புஜ வாஸினி தேவகணசேவித

புனர்பூச தேவி சகாய க்ருபே


ஸ்ரீஅகஸ்தியர் அருளிய திருநட்சத்திரப்

 பொற்பாதத் திரட்டு !


பாதம் தந்து காத்திடுவாய்

பரிந்தருளும் புனர்பூச

பொற்பாதமே! போற்றி!!


புனர்பூசம் - சாம்பார் சாதம், கைமுறுக்கு

ரத்த நாளங்களில் வரும் நோய்கள் நிவர்த்தியாகும்!



புனர்பூசம் வாணியம்பாடி ஸ்ரீஅதிதீஸ்வரர்

(வேலூர் – ஆம்பூர் –வாணியம்பாடி –திருப்பத்தூர் மார்க்கத்தில் உள்ளது.)

புனர்பூசம் அதிதேவதை - அதிதி


Monday, August 22, 2022

திருவாதிரை நட்சத்திர லிங்கம்

 

 

திருஆதிரை இரட்டை பிள்ளையார் 

நட்சத்திர காப்புத் திரட்டு


வாழியெம் போற்றி என்றேத்தும் வளம்பெரு

 ஆதிரை அருள் பூண்டு ஆழி முதல்வனாகி

 நின்ற இரட்டை கணபதி பாதக் காப்பே!


நட்சத்திர சகாயத்  திருவாக்கியத் திரட்டு


தேவஸூ பூஜித ஸத்குண வர்ஷிணி

திருஆதிரை தேவி சகாய க்ருபே



ஸ்ரீஅகஸ்திய மகரிஷி அருளிய

 திருநட்சத்திரப் பொற்பாதத் திரட்டு


நாதம் ஈந்த நாரிமணியே தினம்

நலம் பல தருவாய் திருஆதிரை

பொற்பாதமே! போற்றி!!




திருவாதிரை தானம்

சர்க்கரைப் பொங்கல், மசால் வடை ,

 இருதய சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகும்!



திருஆதிரை திருத்தலம் அதிராம்பட்டினம் ஸ்ரீஅபயவரதீஸ்வரர் ( பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 12கி.மீ தொலைவில் உள்ளது.)

திருவாதிரை அதிதேவதை - ருத்ரன்

Sunday, August 21, 2022

மிருகசீரிஷ நட்சத்திரம்

 

மிருகசீரிஷம்

இரட்டை பிள்ளையார் 

நட்சத்திர காப்புத் திரட்டு


மலைஅருவி எனப் புகழ் சிதறும் மிருகசீரிஷ

 அருள் பூண்டு மனைவி துயர் நெருங்காது

 அருள்புரியும் இரட்டை கணபதி பாதக் காப்பே!



நட்சத்திர சகாயத்  திருவாக்கியத் திரட்டு

மந்திர நிவாசினி சந்திர பத்தினி

ம்ருகசீரிஷ தேவி சகாய க்ருபே


ஸ்ரீஅகஸ்திய மகரிஷி 

அருளிய திருநட்சத்திரப் பொற்பாதத் திரட்டு

வேதம் ஆனாய் பேரொளியே வெற்றி

 அருள்வாய் மிருகசீரிஷ பொற்பாதமே! போற்றி!!


மிருகசீரிஷம் தானம் - மோர் சாதம், போண்டா

கைகளில் வரும் நோய்கள் நிவர்த்தியாகும்!

மிருகசீரிஷம் தலம் எண்கண்

 ஸ்ரீஆதிநாராயணப் பெருமாள் (இத்திருத்தலம்

 தஞ்சாவூர் -கொரடாச்சேரி -திருவாரூர்

 மார்க்கத்தில் கொரடாச்சேரியில் இருந்து

 சுமார் 13கி.மீ தொலைவில் உள்ளது.

மிருகசீரிஷம் அதிதேவதை - சந்திரன்

Saturday, August 20, 2022

ஸ்ரீரோஹிணி நட்சத்திர லிங்கம்

 



இரட்டை பிள்ளையார் 

நட்சத்திர காப்புத் திரட்டு


மாதர் பிழை களைய மனமிரங்கும் ரோகிணி

 அருள் பூண்டு வேதம் ஓதுவோர்

 துணையாகும்

 இரட்டை கணபதி பாதக் காப்பே!


நட்சத்திர சகாயத் திருவாக்கியத் திரட்டு

 

மோக்ஷ ப்ரதாயினி மங்கள பாஷிணி

ரோகிணி தேவி சகாய க்ருபே!


ஸ்ரீஅகஸ்தியர் அருளிய திருநட்சத்திரப்

 பொற்பாதத் திரட்டு !

தாயாய் வந்த அருள் ஒளியே

தயை பூண்டருள்வாய் ரோகிணி

பொற்பாதமே! போற்றி!



ரோகிணி அதிதேவதை - பிரம்மா

தானம் செய்ய வேண்டிய பொருள் 

 வெண்பொங்கல், வெள்ளை கேசரி

முகத்தில் வரும் நோய்கள் நிவர்த்தியாகும்.

 


ரோகிணி நட்சத்திர தலம் 

காஞ்சீபுரம் ஸ்ரீபாண்டவ தூத 

ஸ்ரீகிருஷ்ணப் பெருமாள் ! 

(காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தை

 அடுத்துள்ள குமரக்கோட்டம் ஸ்ரீமுருகன்

 திருக்கோயில் அருகே உள்ளது.)