எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Friday, January 26, 2018

மீனாய் பிறக்கும் விதிவுடையேன் ஆவேனே !

“வேதமாதவன்” செய்த சேவையைப் பற்றிக் கொஞ்சம் கேளுங்கள்.., இது ராமாயண காலத்தில் நிகழ்ந்த  அனுபூதி!  

அனுமாருடைய சேவை அணியில் இருந்த பையனே வேதமாதவன்., அக்காலத்தில் பள்ளிகள் கிடையாது. 5வயதில் சத்குருவின் பாடசாலையில் பிள்ளைகளை விட்டு விட்டு, 12 வயதில் பிள்ளைகளை வந்து கூட்டிச் செல்வார்கள். இவ்வகையில் குருகுலவாசமாக, அனுமாரின் குருகுலவாச சாலைக்கு வந்தவனே வேதமாதவன். ஆஞ்சநேயரின் ஆன்மீக சேவைப் படையில் இருந்த வேதமாதவன், பூத்தொடுத்தல், ஆலயத்தைச் சுத்தம் செய்தல் போன்று சிறு சிறு சேவைகளைச் செய்து வந்தான். சிறுவயதில் இருந்தே அனுமாரிடம் பக்தியும், அபிமானமும் கொண்டிருந்தான். எப்போதும் ‘ராம நாமம்‘ ஜபித்தவாறு ராமாநாம ஸ்மரணையில் இருப்பவரே அனுமார் என்று, கேள்விப்பட்டான். அவரைப் போலவே எந்நேரமும் ராமநாமம் ஓதுதல் வேண்டும் என்று உறுதி பூண்டு எப்போதும், பணிகளின் இடையேயும் கூட ராமநாமம் ஓதி வந்தான். இதைத் தவிர அவனுக்கு வேறு எந்த மந்திரத்திலும் நாட்டம் ஏற்படவில்லை! வேறு மந்திரங்களை ஓதும் போதும் மன ஓடையினுள் ராமநாமத்தை இடைவிடாது ஜபிக்கும் மனோசக்தியையும் சிறு வயதிலேயே பெற்றான்.

“ஹே மாதவா!“ என்றால் திரும்பிப் பார்க்க மாட்டான்., “வேதமாதவன்“ என்று முழுப் பெயரையும் கூப்பிட்டால்தான் திரும்பிப் பார்ப்பான். இப்படியாக “வேதமாதவன்“ ,அனுமாருடைய சேவகத் துறையில் இருந்து கொண்டு, பலருக்கு பல்வகையான உதவிகளை அசராது ஆற்றி வந்தான்., ஒரு நாள்...

நல்ல மழையில் ஒரு பக்க்திக் குழுவினரைக் கடலுக்குள் இருந்த திட்டைக்குத் தர்ப்பணப் பூஜைக்காக அழைத்துச் சென்றான். திரும்பி வருகையில் நல்ல மழை பெய்து, படகினுள் நீர் பெருகியது., எப்படியோ ஒரு வழியாய்ச் சமாளித்து அவர்களுடன் கரை வந்து சேர்ந்தான்., மறுநாள் காலை, வேதமாதவன் கடற்கரைக்குச் சென்ற போது அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் நாள் படகில் நீர் நிரம்பிய நிலையில் கஷ்டப்பட்டுக் கரை சேர்ந்த வேதமாதவன். கடற்கரையில் படகை விட்டு விட்டு வந்தானல்லவா? படகில் இருந்த நீர் சிறிது சிறிதாக வடிந்து, அதில் சிக்கிய ஒரு மீன், படகில் நீர் முழுதும் வற்றியமையால் , வெளிச் செல்ல வேறு வழி இல்லாமையால், இறந்து கிடந்தது போலப் படகினுள் கிடந்தது., “தன் கவனக் குறைவால் தான்“ இது நிகழ்ந்தது என்று வேதனையுற்ற வேதமாதவன் மிகவும் வருத்தமுற்றான். இந்த மீனை மீண்டும் நீரில் விட்டு விட்டால், பிற பெரிய மீன்கள், நண்டுகள் இதனைக் கடித்து தின்று விடும். அப்படியே படகிலோ, தரையிலோ விட்டாலோ, பறவைகளும் கொத்திக் கொத்தி அவைகட்கு உணவாகக் கொண்டு விடும். தன்னுடைய கவனக் குறைவால் இறந்த அந்த மீனுக்கு ஏதேனும் செய்து, அது நற்கதி அடைய வேண்டும் என்று விரும்பினான். எனவே, மீனுக்கான காருண்யத் தர்ப்பணம் செய்ய விழைந்தான். ஆனால் எப்படிச் செய்வது? இதற்கு “அனுமார்தான் நல்வழி காட்ட முடியும்!” என்று அவன் எண்ணினான். அவன் அனுமார் சேவையில் இருந்தானே தவிர, ஒரு நாள் கூட அவரை அருகில் இருந்து தரிசித்தது கிடையாது..

மீனின் நற்கதிக்காக, மிகுந்த வெறியுடன், வெகு வேகமாக, வேதமாதவன் “ராம்,ராம்” என்று ஓதலானான். படகில் கிடந்த மீனைக் கையில் எடுத்த சிறுவன், அதனைக் கண்டு வேதனையில் துடித்து மென்மேலும் தன்னை மறந்த நிலையில், “ராம்ராம்” என்றவாறு உரக்கவும் ஜபிக்கலானான். என்ன ஆச்சரியம்! அவன் ராமநாமம் ஜபிக்க ஜபிக்க, அந்த மீனுக்கு ஜீவத் துடிப்பு வரத் தொடங்கி, அதன் உடல் சற்றே அசையலாயிற்று. ஆனால் அவன் ராம் நாமத்தை ஓதுவதை நிறுத்தி விட்டாலோ அந்த மீன் மறுபடியும் அசைவற்று முன்பு போலவே கிடக்கும். எனவே, அவன் மிகவும் பக்தி சிரத்தையுடன் ராம நாமம் ஓதியவாறே அதற்கு உயிர்த்துடிப்பு வந்தவுடன், நீரில் விட்டு விட்டால் அது பிழைத்துச் சென்று விடும் என்று எண்ணினான் ஆனால் அவன் கையில் இருந்து கொண்டு அவன் ராமநாமம் ஜபிக்கும் போது மட்டுமே, அது உயிர்த்துடிப்புடன் நன்கு அசையும், சிறிது நேரம் ராம ஜபத்தை நிறுத்தி விட்டாலோ, மீண்டும் அதன்  உடல் அசைவற்றதாகி விடும். அதனைச் சிறிது தண்ணீரில் விட்டுப் பார்த்து, “ராம்ராம்” என நீருக்குள்ளும் ஓதிப்பார்த்தான். ஆனாலும் அவன் கையில் இருந்தால் தான், அந்த மீனுக்கு உயிர்த்துடிப்பு வந்ததே தவிர, அவனை விட்டு அகன்றால், அது அசைவற்றே கிடந்தது. இப்போது வேதமாதவனால் என்ன செய்ய முடியும்? அந்த மீனுக்கு ஜீவன் இருக்க வேண்டுமானால் , தன் கையிலோ , இடுப்பில் துணியிலோ வைத்துக் கொண்டு இருந்தால் தான் அவனால் அதற்கு ஜீவசக்தி அளிக்க முடியும் என்றாகி விட்டதே! எனவே, எவரும் அறியா வண்ணம் ,அந்த மீனைத் தன் இடுப்பு முடிச்சில் வைத்துக் கொண்டு, “ராமராம” என்று ஓதி, ஓதியே பிற பணிகளைத் தொடர்ந்தான்.,

மீண்டும் என்ன ஆச்சரியம், அந்த மீனிடம் இருந்து எவ்விதமான நாற்றமும்  வரவில்லை! மாறாக, நல்ல சந்தன நறுமணம் ஏற்பட்டு, அந்த இடமே கமகமவென்று மணத்தது. அவ்வப்போது வேதமாதவன் மீனைத் திறந்து பார்த்துக் கொள்வான். அந்த மீனுக்கு ஜீவசக்தி அளிப்பதற்காகவே அவன் இராப்பகலாக உறங்காது, ஓயாது, ராமநாமம் ஜபிக்க ஜபிக்க.... இவ்வாறாகப் பல நாட்கள் கடந்தன,


·    தக்க உணவு, ஓய்வு உறக்கம் இல்லாமையால் அவன் உடலும் பலத்த பாதிப்புக்கு ஆளாகியது. இவனுடைய அதீத நிலையையும், குன்றி வரும் ஆரோக்யத்தையும் கவனித்தவர்கள்., அவனிடமிருந்து அபூர்வமான சந்தன மணம் எழுவதையும், அடிக்கடி இடுப்பில் மீனைப் பார்ப்பதையுமாக.., இருப்பதைக் கண்டு அனுமாரிடம் நடந்தது அனைத்தையும் சொல்லி விட்டார்கள்.. 


அவரோ நிகழ்ந்ததை எல்லாம் தீர்க தரிசனமாக உணர்ந்தறிந்து. “அந்த மீனுக்கு தன் ராமநாம ஜபப் பலன்களை எல்லாம் வேதமாதவன் அர்ப்பணித்து வருகின்றான். அந்த மீனுக்கு ராமதரிசனம் கிட்டிட வேண்டும்,., இதன் மூலம் தான் இந்த அனுபூதிக்கு ஒரு முடிவு கிட்டும்!” என்று உறுதியாக உரைத்து விட்டார்., அனைவரும் வேதமாதவனிடம் சென்று நடந்ததைச் சொன்னார்கள். வேதமாதவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இந்த மீனுக்கு ராமதரிசனம் கிட்டும், வரை தான் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக அவன் கவலைப்படவில்லை. அந்த மீனுக்கு “எவ்வாறு ராம தரிசனத்தைப் பெற்றுத் தருவது” என்பது தான் அவனுக்குப் புரியவில்லை. எனினும், சீதாப் பிராட்டி தந்த துளசி மணி மாலையை அணிந்து, அதன் மணிகளைச் சுவைத்து ராமநாமச் சுவையைச் பகுத்துரைத்த அனுமார், தன் நெஞ்சைத் திறந்து காட்டி “ராமதரிசனம்” பொலிவதை உணர்த்தியதை நினைத்துக் கொண்டான். எனவே, அனுமாரின் ஹிருதய தரிசனம் மூலம், இந்த மீனுக்கு உரிய ராம தரிசனத்தைப் பெற்றுத் தர முடியும் என அவன் உறுதியாக நம்பினான். அவன் மிகவும் தைரியமாக அனுமாரின் அருகில் சென்று, எதையும் கேட்காமல் அவரருகே சென்று நின்றான், அவன் வருகையின் காரணத்தைத் தீர்க தரிசனமாக உணர்ந்த அனுமாரும், 

“வேதமாதவா! ராம தரிசனத்தை நீ பெற்றால்,  உன் கண்கள் பார்வையை இழந்து விடும்! உனக்கு இன்னமும் நேத்ர சக்திகள் நன்கு விருத்தியாக வேண்டும். நீ பார்வையை இழப்பதை நானும் விரும்பவில்லை. இந்த மீனோ உன் கையில் இருந்தால் தான் ஜீவசக்தியுடன் இருக்கும்! இப்போது என்ன செய்வது என்பதை நீயே சொல் பார்க்கலாம்!” என்றார்.

வேதமாதவன் சற்றும் யோசிக்காமல், “பிரபோ! அடியேன் பார்வை இழப்பதைப் பற்றிச் சற்றும் வருத்தம் இல்லை! அடியேனுடைய பிழையால் இந்த மீனுக்கு ஏற்பட்ட கதியில் இருந்து எப்படியாவது அது மீண்டு நற்கதியை அடைய வேண்டும். அடியேன் கண்களை நன்றாக இறுக்கி மூடிக் கொள்கிறேன்! இந்த மீனுக்காவது ராமதரிசனத்தைப் பெற்றுக் கொடுங்கள்!” என்று பக்திப் பெருக்கால் உரைத்தான். “ராம் ராம்” என்று பெருங்குரலில் ஓதியவாறே அவன் கண்களை நன்கு இறுக்கி மூடிக் கொண்டது மட்டும் அல்லாமல், கண்களைச் சுற்றித் துணியையும் இறுக்கிக் கட்டிக் கொண்டு விட்டான்., வீணதாரியாகக் காட்சி தந்த ஆஞ்சநேயர், உடனே வீணையை எடுத்து மீட்டி, நாதஜோதியின் மூலம் அந்த மீனுக்குத் தன் நெஞ்சில் நிறைந்த ராம தரிசனத்தைப்,பெற்றுத் தர..., அது ஜோதி வடிவாய் வானில் மறைந்து முக்தி நிலையைத் தழுவியது, .ஆஞ்சநேயர் வேதமாதவனைத் தழுவி, அவனுடைய தியாகத்தை மிகவும் மெச்சிப் போற்றினார்., வீணையைத் தாங்கியவராய் ஸ்ரீஆஞ்சநேயத் தரிசனம் தந்தார்.,,

“இவ்வாறு, அப்பழுக்கற்ற ராம பக்தியைப் பூண்டதினால், ராம தரிசனம் தானாகவே முக்திக்கும்,! ஸ்ரீராம தரிசனமின்றி முக்தி நிலையை அடைதல் கடினமே!” என அருளினார்.,, இப்போது வேதமாதவனுக்கு பெரும் வருத்தம் ஏற்பட்டு விட்டது! “ஸ்ரீராம தரிசனமின்றி முக்தி நிலையை அடைதல் கடினமே’ என உரைத்து விட்டாரே! ராம தரிசனத்தை விடப் பெரியதா முக்தி நிலை?

அனுமன் திகைத்துப் போனார்! “ராமநாமத்திற்கே, ராமதரிசனத்தையும் முக்தியையும் பெற்றுத் தரவேண்டிய கடமை உண்டே! ராம தரிசனத்தை விட முக்தி நிலை பெரிது என்பது போலன்றோ நாம் உரைத்து விட்டோம்!” என அவரும் மலைத்துப் போனார்.., எனவே அவர் வேதமாதவனிடம், “ராமநாமமே உனக்குக் கலியுலகில் ராம தரிசனத்தைப் பெற்றுத் தருவதாக!” என்று வரமளித்தார்.., ஸ்ரீராமரும் திரேதா யுகத்தில் அயோத்யாவில், சரயு நதியினுள், நேரே உள் இறங்கித் தன் அவதார நிறைவைப் பூர்த்தி செய்தார் அல்லவா! அப்போது மீன் வடிவில் அனைவருக்கும் காட்சி தந்தார்.., 

கலியுகத்தில்  ஆஞ்சநேயர் வாக்காக, தியாகராஜ சுவாமிகள் தான் பூஜித்த ஸ்ரீராமர் பரிவாரச் சிலைகளை ஆற்றிலே தூக்கிப் போட்டு மீண்டும் பெற்ற அனுபூதியை அறிவீர்கள் அல்லவா!  இவ்வாறாக அச்சிலைகளில் “ஸ்ரீராமரின் மச்சவாத்சல்ய ஸ்பரிசம் கிட்டிய பிறகே,, தியாகராஜ சுவாமிகளுக்கு ஸ்ரீராமரின் திவ்ய தரிசனம் கிட்டியது. மேலும் 96கோடி முறை ராமநாமம் ஓதி சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஸ்ரீராமதரிசனம் பெற்ற அனுபூதி நினைவுக்கு வருகிறதா! எனவே ஆழ்ந்த நம்பிக்கையுடன் , பிள்ளைகளே ராம், ராம் என எப்போதும் ஓது வாருங்கள்!!

ஸ்ரீஅகஸ்திய விஜயம் --- 2005 "ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்!"

மீன் வளர்ப்பு என்பது குடும்பத்தில், சமுதாயத்தில் அமைதியை நிலைநாட்ட உதவும் அறப் பணியே. மீன் வளர்ப்பதற்கு முன் அவற்றின் தெய்வீகத் தன்மைகளைப் பற்றி ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். மிகவும் சுத்தமான ஒரு ஜீவன் என்று சொன்னால் மீனைச் சொல்லலாம். உப்பு நீரிலேயே இருந்தாலும் அதன் உடம்பில் உப்பு சேர்வதில்லை. அதன் தெய்வீகத் தன்மை பற்றியே சிவபெருமானும் செம்படவனாக வந்தார், அன்ன பராசக்தியும் மீனாட்சியாக மதுரையில் தோன்றினாள். பெருமாளும் மச்ச அவதாரம் கொண்டு பூவுலகைக் காத்தருளினார்.


பல மகான்களும் மீன்களின் நல்வாழ்விற்காக அருந்தொண்டாற்றி வந்துள்ளனர். காசி ராஜனின் மகள் உருபதி என்பவள் மீன் குலத்தின் நன்மைக்காக அரும் பெரும் பூஜைகள் செய்தவள். மீன்கள் முக்தி பெற வேண்டும், தண்ணீருக்குள் கண் சிமிட்டாமல் காட்சி பெற வேண்டும், கடல் வளம் பெருக வேண்டும். அது மட்டுமல்ல உலகம் உய்வடைய உத்தம மகனைப் பெற வேண்டும் என்று இவ்வாறு பல உத்தம பிரார்த்தனைகளுடன் வாழ்ந்த உருபதியே மச்சகந்தி என்னும் பெயருடன் கங்கையில் படகோட்டியாய் வந்தாள். அப்போது பராசர மகரிஷி அப்படகில் ஏறி வரவே அவர் மூலம் புனித கங்கையின் சாட்சியாக மச்சகந்தி வியாச மகரிஷியைக் குழந்தையாகப் பெற்றாள். பராசரரும், மச்சகந்தியும் கால நேரம் எதையும் செய்யும், எத்தகைய தெய்வீகப் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றும் என்ற இறை நியதிக்கு கருவியாய்ச் செயல்பட்டவர்களே. பராசரர் புதல்வரான வியாசர் நான்கு வேதங்களைத் தொகுத்ததோடு மட்டுமல்லாமல் மக்களின் காமத்தை முறைப்படுத்தும் காமசூத்திரங்களையும் உலகிற்கு அளித்துள்ளார்.

மீன் கண்களையுடைய மீனாட்சியாய் மதுரையை ஆட்சி செய்த பராசக்தியின் வல்லமை நீங்கள் அறிந்ததே. கண்களாலேயே ஆட்சி செய்தவள் மீனாட்சி. இன்றைக்கும் உண்மையான ஆளுமைத் திறன் உள்ளவர்கள் தங்கள் பார்வையாலேயே அனைத்தையும் சாதித்துக் கொள்வார்கள். அக்கம்பக்கத்து நாட்டு மன்னர்கள் மீனாட்சி தேவியின் மகிமை அறியாது ஒருமுறை மதுரை மீது படை எடுத்து வந்தபோது அம்மை போர்க்களம் கொண்டு போர்க்களத்திற்குச் சென்றாள். அப்போதிருந்த போர் யானைகளின் உயரம் குறைந்தது 200 அடி இருக்கும். அப்படி 200, 300 அடி உயரம் கொண்ட போர் யானைகள் எல்லாம் குதிரை மேல் பாய்ந்து வரும் தேவியைப் பார்த்தவுடன் தரையில் மண்டி இட்டு வணங்கின. பராசக்தியைப் பார்த்த மன்னர்கள் எல்லாம் தங்கள் தேரிலிருந்து இறங்கி தரையில் வீழ்ந்து வணங்கினர். கண்களால் அனைத்துப் பகைவர்களையும் வென்று வெற்றி வாகை சூடினாள் மீனாட்சி.


மீன்களில் சாத்வீக குணமுள்ள மீன்களையே வளர்க்க வேண்டும். கோல்ட், ஏஞ்சல், மூன் லைட் போன்ற பெயருள்ள மீன்களைத் தேர்ந்தெடுத்து வளர்ப்பது சிறப்பு. பைட்டர் போன்ற பெயருள்ள மீன் வகைகளைத் தவிர்க்கவும். திருமாலின் திருமார்பில் லட்சுமி உறைவதால் திருமால் அவதாரமான மீனிலும் லட்சுமி கடாட்சம் பெருகி மீன் வளர்ப்போரின் வறுமை நீங்க ஏதுவாகிறது. மீன் தொட்டியில் மீன்கள் நன்கு வெளியில் தெரியுமாறு பச்சை, ஆரஞ்ச், மஞ்சள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கலாம். இரண்டு, மூன்று மின் மோட்டர்களை வைத்து மீன் தொட்டியில் எப்போதும் காற்று சுழற்சி இருக்குமாறு மின் விசிறி வசதி செய்யவும். 24 மணி நேரமும் மீன்களுக்கு ஆக்ஸிஜன் காற்றோட்டம் நிறைந்திருப்பது முக்கியம். மீன் தொட்டிக்குள் சிவலிங்கம், நந்தி, கோயில் கோபுரங்கள், மான், மயில், தவளை, ஆமை போன்ற கடவுள் நினைவுகளை ஏற்படுத்தும் பொம்மைகளை வைத்திருத்தல் நலம். -- from book - இறைவனை அடைய உதவும் சூரிய நமஸ்காரங்களும் ,அதன் யோகாசனங்களும். & more on கண்களை பாதுகாப்பது எப்படி பாகம் -1!!

A Good right path & thought you decide  and stand on it and travel …… you  can attain … more than you  dreamed …  https://www.youtube.com/watch?v=G2xFJUSLEv8&t=3s &  https://www.youtube.com/watch?v=p1PID91sEW8&t=28s
--------------------------------------------------------------

ஓம் ஸ்ரீகுருவே சரணம்


Friday, January 5, 2018

ஆத்மாக்களின் சங்கமம் - 3

ஆண்டவன் பிச்சையின் உடம்பு மெள்ள மெள்ள தேறி வந்தது. இந்த அத்தியாயத்தில்  அவர் சந்தித்தது திருப்புகழ் மணியையும் அந்த சந்திப்பில் நடந்த நிகழ்வுகளையும் பார்ப்போம்...,

திருப்புகழ் மணி ஆண்டவன் பிச்சையின் பாடல்களை பத்திரிக்கையில் பிரசிரித்து இருந்தார்.., ஆனால் நேரிடையாக இருவரும் பேசியது இல்லை.., எனவே ஒரு சிவராத்திரி அன்று, திருப்புகழ்மணி அவர்களைச் சந்திக்க விருப்பம் கொண்டு ஆண்டவன் பிச்சை, அவரிடத்திற்குச் சென்றார்.., திருப்புகழ் மணிக்கும் ஆண்டவன் பிச்சையைப் பற்றி அதிக விஷயங்கள் தெரியாது.., மேலும் அன்று சிவராத்திரி தினம்.., ஆகவே தனக்கு அதிக வேலைகள் இருக்கிறபடியால் ஒருவரையும் சந்திக்க இயலாது என்று திருப்புகழ் மணி கூறிவிட்டார்.., ஆண்டவன்பிச்சையும் மணியைச் சந்திக்காமல் திரும்பி விட்டார்.., அன்று இரவு திருப்புகழ் மணியின் குருவான பின்னவாசல் பெரியவா கனவில் தோன்றி, கடிந்து கொண்டார்., காரணம் திருப்புகழ் மணி “பின்னவாசல் பெரியவா” என்று அழைக்கப்படும் யோகி இராமகிருஷ்ணாவை தனது குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார்.., ஒரு சமயம் குருவைக் காணச் சென்றபொழுது.., யோகி கூறினாராம்”நான் வேறு உருவில் வந்து தரிசனம் அளிப்பேன் அப்பொழுது என்னை அடையாளம் கண்டு பிடிக்க இயலுமா உன்னால்” என்று , இப்பொழுது பின்னவாசல் யோகி ராமகிருஷ்ணா சித்தி அடைந்த விபரம் மட்டும்தான் திருப்புகழ் மணிக்குத் தெரியும்., மற்றவிபரங்களை தெரிந்திருக்க ஞாயமில்லை..,, அன்றிரவு கனவில் “நேற்று காலை நான் உன்னைக் காண வந்தேன், ஆனால் நீ என்னை கண்டு கொள்ள வில்லை.., மேலும் உனக்கு பல அலுவல்கள் உள்ளது என்று என்னை அனுப்பி விட்டாய்” என்றார்..,

“ஓ! வந்தது நமது குரு.. தெரியாமல் தவறு இழைத்து விட்டேன்” என்று திருப்புகழ் மணி மிகவும் வருந்தினார்.., குருமார்களின் நடவடிக்கைகளை எளிதில் நாம் புரிந்து கொள்ளவே முடியாது., நான் மற்றொரு ரூபத்தில் உனக்குத் தரிசனம் அளிப்பேன்” என்று கூறியிருந்தார்.., “வந்தது என் குரு என்று தெரிந்து கொள்ளாமல் திருப்பி அனுப்பி விட்டேனே.,” என்று மணி பலமுறை மனதிற்குள் வருந்தி ஆண்டவன் பிச்சையைக் காண வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டார்.., அவ்வாறே ஆணடவன் பிச்சையைக் கண்டு  தன் குருவே இவர் என்று வணங்கி நின்றார் திருப்புகழ் மணி.., ஆனால் முருகனோ ஆண்டவன் பிச்சையிடம் மற்றொரு திருவிளையாடலை ஆடினான்.,

1949ம் வருடம் ஆண்டவன் பிச்சை சில நண்பர்களுடன் ஸ்ரீசைலத்திற்குச் சென்றிருந்தார்., அங்கு திருப்புகழ் மணியைக் கண்டதும் இருவரும் நன்றாக உரையாடினார்கள்.., அதன் பிறகு திருப்புகழ்மணி, ஆண்டவன் பிச்சைக்கு ஷடாஷரி மந்திரத்தை உபதேசித்தார்.,, சில நாட்கள் சென்றன.,, மறுபடியும் திருப்புகழ் மணியைச் சந்தித்த ஆண்டவன் பிச்சை, “ஞாபகம் இருக்கிறதா எனக்கு ஷடாக்ஷரத்தை உபதேசித்தீர்களே” என்று கேட்டார்..,அதற்கு மணி “அம்மா மன்னிக்க வேண்டும்., நான் ஒருநாளும் ஸ்ரீசைலம் சென்றது கிடையாது” என்றார்.., அக்கணத்தில் ஆண்டவன் பிச்சைக்குப் புரிந்தது.., ஆஹா வந்தது வேறு யாருமில்லை., முருகப் பெருமானே, திருப்புகழ் மணியின் ரூபத்தில் வந்து தனக்கு ஆறெழுத்து மந்திரமான ஷடாக்ஷரியை உபதேசித்திருக்கிறான் என்று...,  தெரிந்தாலும் அவன் திருப்புகழ் மணியின் உருவில் வந்தான் அல்லவா., எனவே திருப்புகழ் மணியைத் தனது குருவாக ஏற்றாள் ஆண்டவன் பிச்சை.., இதேசமயம் திருப்புகழ் மணிக்கு அவரது குருபின்னவாசல் யோகி ராமகிருஷ்ணா,, வந்தது நான் இவள் உருவில் என்றார்..., இதனால் திருப்புகழ் மணி ஆண்டவன் பிச்சையைத் தன் குருவாக ஏற்றார்.., ஆக ஒருவருக்கொருவர் மற்றவரை குருவாக ஏற்றுக்கொள்ளும்படிச் செய்தான்.. அத்திருத்தணி முருகப்பெருமான்.., என்ன அதிசயமான திருவிளையாடல்.., மேலும் ரிஷிகேஷ் சிவானந்த அனுபூதிகளை இங்கு காணும் இரண்டு படங்கள் படித்துய்க.. குருவருளை...!

மணி அடிக்கடி ஆண்டவன் பிச்சையை சந்திப்பதும் அவரது பாடல்களை பிரசுரிப்பதும் சொற்பொழிவு செய்தால் அப்பாடல்களை மேற்கோளாக எடுத்துரைப்பதுமாக இருந்தார்.., இதனால் அம்மாவின் புகழ் நாற்புறமும் பரவியது.., குடும்பத்தில் இருந்து கொண்டும்,, குடும்ப வேலைகளைச் செய்து கொண்டும்,, முருகனைப் பற்றி பாடல்கள் இயற்றியும் ஆண்டவன் பிச்சையின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.., 1951ம் ஆண்டு ஆண்டவன் பிச்சை முற்றத்தில்..., உட்கார்ந்து இருந்தார்.,, திடீரென உனக்கு வெகு சீக்கிரம் இரண்டு பேரப்பிள்ளைகள் பிறக்கப் போகிறார்கள் என ரமண மகரிஷியின் குரலில் கேட்டது........ மேலும் அறிய.திருமதி. ராதா விஸ்வநாதன் எழுதிய ஸ்ரீராஜாம்பாள் பப்ளிகேஷன்ஸினின்.., “ஆண்டவன்பிச்சை” புத்தகத்தை காண்க...,
ஆண்டவன் பிச்சையின் பாடல்களை அவரின் குரலிலேயே..., இவ்விணைப்பில் காண்க:- அன்னாரின் ஒரு தேனமுது பாடல் இணைப்பு :- https://www.youtube.com/watch?v=I_hG18vRLrE
------------------------------------------------------------------------

“பூர்வம் அபூர்வமாகும், உத்தர பூர்வாங்கத்தில் பபூவ பூர்வபாடம் கேட்கும்” – அண்ணாஸ்வாமி சித்தரின் .. அதியற்புத குருவாய்மொழி வாக்யம்.., அண்ணாஸ்வாமி சித்தர் அக்னி தகனத்தை ஏற்று பூலோக சஞ்சாரத்தை நிறைவு செய்திடினும்., இவ்வகைச்  சித்புருஷர்களின்  நீளோபஸ்மம் எனும் பரமஅணுவை, தீபங்களின் முன் வைத்துப் பரஞ்ஜோதிப் பீடமேற்றும் சாங்க்யம் ஒன்றும் உண்டு..., அண்ணாஸ்வாமி சித்தர், துர்க்கா சக்தி பீட லோகத்தைச் சார்ந்த ஞானயோகி ஆதலின், காஞ்சிமாமுனிவர் போன்ற மஹான்களின் ஆக்ஞைக்கு ஏற்ப அக்னி தகனம் ஏற்றுத் தம் பூவுலக  மஹாயோக சரீரத்தை உகுத்தார்.., பின்னர் காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தின் துர்க்கா சன்னதியில் ஜீவமுக்த ஜோதிப் பிரவாகச் சாரத்தில் இவர்தம்யோக ஜோதி “விசலவிஸ்வ பூஜிதமா” பூரணித்த சாங்க்யானுபூதி ஒன்றும் உண்டு.(,...........................................)

 இதில் அண்ணாஸாமி யோகி துர்க்காக்னி லோகத்தைச் சாந்தவராய் அனந்தயோக முறையில் ஆத்மசாட்சாத்காரம் எனும் யோகசாதகத்தில் துய்த்தவர்.., இதன்படியே இவருக்கு அக்னி தகனமாற்றி, மஹான்களின் ஆக்ஞைப்படி கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலின் துர்க்கை சன்னிதியில்  மோக்ஷதீப சாட்சாத்காரமாய் பக்தகோடிகள் நிகழ்த்தினர்..,  திருக்குடந்தையின் தீரா தீர்கதரிசி அண்ணாஸ்வாமி சித்தரின் தெய்வத்வத்தை... ப்பிரவரி2018 மாத ஸ்ரீஅகஸதிய விஜய இதழில் காண்க..., & .......ஸ்ரீராமர் இதனைப் பிரதிஷ்டை செய்தபோது, மனிதனாக வாழ்ந்து தன்னலமற்ற இறைத் தொண்டு புரிந்து, மக்களுக்குச் சேவை செய்தமையால் ஞானியரான 1008 ஆத்மாக்களை ஆவாஹனம் செய்து 1008 ஆத்மாக்களின் ஜோதிகளைத் திரட்டி சகஸ்ர ஜோதி லிங்கமாக இங்கு அமைத்தார்.




மகான்கள் எல்லாரும் ஒன்று தான்., மகா சமுத்திரம் போன்றவர்கள்., பலநதிகள் கடலில் சென்று கலந்த பின்னர் தனது தனித்துவத்தை இழந்து விடுவது போல, பிரம்ம நிலையை அடைந்த மகா ஞானிகள் தங்களிடம் வரும் அடியவர்களின் பக்குவநிலையை அறிந்தே ஞானத்தை அருள்கிறார்கள்... இது தான் யோகி ராமகிருஷ்ணாவின் வாழ்வில், ஸ்வாமி சிவானந்தர் நடத்திய அருளாடல்..
 (Read in picture.---> here...! --->

ஆத்மாக்களின் சங்கமம் - 2

இதனால் யோகி ராமகிருஷ்ணா ஏமாற்றத்துடன் பின்னவாசலுக்குத் திரும்பி தவத்தை மேற்கொண்டார். தனக்கு குருவாக ஒருவரும் தீக்ஷ்க்ஷை கொடுக்காததால் சதாசிவ பிரம்மேந்திராளை மானசீகமாக குருவாக ஏற்று தவம் செய்து வரலானார். நாட்கள் உருண்டன. வருடங்கைம் வந்து போயின., 1943ம் வருடம் யோகி ராமகிருஷ்ணாவிற்கு தவத்தின் பயனாக, மானிட சரீரத்தை உகுக்கும் நாள் தெரிந்தும் விட்டது., அந்த நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது., பிரத்தியட்சமாக குருவை குருவாக மானசீகமாக ஏற்றாலும்., குருவின் கருணைக்கு ஈடு இவ்வுலகில் ஒன்றுமே இல்லை., கருணையே உருவான சதாசிவபிரம்மேந்திராள்., தன் சீடன் யோகி ராமகிருஷ்ணாவின் முன் தோன்றினார். “உனக்கு இப்பிறவியில் முக்தி என்பது கிடையாது உனக்கு மற்றொரு பிறவி உள்ளது.. இப்பிறவிக்கு காரணம் உனது மனைவியின் சாபமே” என்றார் பிரம்மேந்திரர்.

“குருவே...,! கருணைக் கடலே! போதும் இந்த மானிடப் பிறப்பு: மறுபடியும் ஒரு கர்ப வாசமா என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கதறினார் ராமகிருஷ்ணர்.,, கெஞ்சினார்.., பலனில்லை...,, மேலும் சதாசிவ பிரம்மேந்திராள்.., தன் திருவாய் மலர்ந்து ., “உன் மனைவி பத்தினி ., பத்தினிகளின் வாக்குக்கு அதிக சக்தி உண்டு. அது பலித்தே தீரும்.., இதனால் நீ ஒரு பிறவி பெண்ணாகப் பிறக்க வேண்டியே ஆக வேண்டும்” என்றார்., பாவம் யோகி ராமகிருஷ்ணாவிற்கு பிறப்பெடுத்து இவ்வுலகில் உழல கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.., பக்தனின் பரிதாபநிலை பரமகுருவை கனிய வைத்தது. பரமகுரு நினைத்து விட்டால் பரமனே செயல் இழந்து விடுகிறான்...,

“ஒரு மாற்று வழி இருக்கிறது.. மறுபடியும் கர்பவாசம் இல்லாமல் ஒரு பெண்ணின் உடலில் சுக்ஷ்ம ரூபத்தில் நுழைந்து உலக வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்துவிடு..,” என்றார் பரமகுரு.., இப்பேற்பட்ட மாற்று வழியைக் காட்டிய பரமகுருவை வணங்கி குரு கூறியதிற்கு  ஒப்புக் கொண்டார் ., இதன்படி 1943ம் ஆண்டு இராமகிருஷ்ணா மகா சமாதி அடைந்தார்.., சமாதிக்கு முன்பே தனது பரமகுருவான சதாசிவ பிரம்மேந்திராள் கூறியபடி தனது சமாதி கோயிலின் மேல் கூரையில் ஒரு துளை வைத்துவிட்டு மேல் பாகத்தை மூடி விடுமாறு உத்தரவு இட்டார்.., யோகி ராமகிருஷ்ணாவின் சீடர்களும் தங்கள் குரு கூறியது போல் சமாதி கோயிலின் மேற்கூரையில் சிறுதுளையிட்டு கட்டியிருந்தனர்., யோகியும், அக்கோயிலில் அமர்ந்து சமாதி நிலையிலேயே இருந்து வந்தார். இந்த துளை துவாரம் மூலமாக யோகி ராமகிருஷ்ணா வெளி உலகுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். இதற்காகத் தான் சதாசிவ பிரம்மேந்திராள் துளை வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.., இப்பொழுது வாசகர்கள் பின்னவாசலிலிருந்து சென்னைக்கு வந்து ஆண்டவன் பிச்சையின் நிலையை அறிய வேண்டும்.

ஆண்டன் பிச்சையின் வாழில் நடந்த அற்புதங்கள்!

1948ம் ஆண்டு மார்ச் மாதம் ஏணிப்படிகளிலிருந்து விழுந்த  ஆண்டவன் பிச்சை படுத்த படுக்கையாகி விட்டார்.., உடல் பலஹீனமாகி விடவே பயந்து விட்டனர்.., உறவினர்கள் என்று பார்த்தோம் அல்லவா! மே மாதம் ஆண்டவன் பிச்சை தன் சுயநினைவையும் இழந்து விட்டார்.., ஒரு முன்னுரவு வேளை, ஆண்டவன் பிச்சையின் இதயத் துடிப்பும், நாடித்துடிப்பும் இரண்டுமே அறவே நின்று விட்டது.., அக்கணத்தில் அந்த நொடியில் சதாசிவ பிரம்மேந்திராள் யோகி ராமகிருஷ்ணாவின் சமாதியில் பிரவேசித்து., யோகியின் சமாதி நிலையைக் கலைத்தார்., அதுமட்டுமல்லாது ஆண்டவன் பிச்சையின் உடலை சுட்டிக் காட்டினார்.., “இதோ பார் ., இதுதான் நல்ல சமயம் ., ஒரு பவித்திரமான உடலுக்குள் நீ பரவேசிப்பாயாக.., இது சாதாரணப் பெண்ணின் உடல் அல்ல., இது முருகப் பெருமான் குடியிருந்த வீடு., ஒரு முருக பக்தரின் உடல். சுமார் 24வருடம் முருகப் பெருமான் இவ்வுடலில் குடிகொண்டு பல திருவிளையாடல்களைப் புரிந்துள்ளான்.. இவ்வுடலுக்கு க்ஷடாக்ஷ்ர மந்திரம் உபதேசிக்கப்பட்டுள்ளது.., பல ஞானியர்களைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவுடல்., பல முறை சமாதியீல் அழ்ந்துள்ளது.., ஜீவ பிரம்ம ஐக்கியத்தை ருசிபார்த்தவுடல்., இதைப் போன்ற வேறு ஒரு பரிசுத்த உடல் உனக்கு கிடைக்காது” என்றார் சதாசிவ பிரம்மேந்திராள்..,

ஆண்டன் பிச்சை என்னும் மரகதவல்லியின் பூத உடலில் உள்ள இருதயத் துடிப்பு நின்று விட்ட நிலையில் யோகி ராமகிருஷ்ணா சூக்ஷ்ம ரூபத்தில் அம்மாவின் உடலில் தம் பரமகுரு சதாசிவ ப்ரம்மேந்திராளின் ஆக்ஞைப்படி புகுந்தார்.., யோகி ராமகிருஷ்ணாவிற்கு, தன் குருவின் அருளால் ஒரு பெண்ணின் உடலில் புகுந்து உலக வாழ்வில் உழன்று ஒரு பெண்ணுக்கு உண்டான உடல் உபாதைகள், குடும்பச் சூழலில் ஏற்படும் சிக்கல்கள் அனைத்தையும் அனுபவிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது., அதுவும் ஒரு தாயின் கர்பவாசம் இல்லாமலே.., இதன்படி யோகி இராமகிருஷ்ணாவின் மனைவியின் சாபமும் நிறைவேறியது.., இவை யாவும் அவரின் குருஅருளால் கிட்டியது.., குரு அருள் இருக்க குறையேதுமுண்டோ!!

1943ம் வருடம் முதல் 1948வரை காத்திருந்து பலனை அடைந்தார் யோகி ராமகிருஷ்ணா! யோகி ராமகிருஷ்ணா, ஆண்டவன் பிச்சையின் உடலில் புகுந்ததும், அம்மாவின் உடலில் அசைவுகள் தோன்றின.., மெதுவாக தன் கண்களைத் திறந்தாள்.., சுயநினைவு இல்லாதபோது தனனிச் சுற்றி பலர் சூழ்ந்திருந்ததை இப்பொழுது அவரால் காண முடிந்தது., பார்த்தாரே தவிர., சுற்றி இருந்தவர்கள் அனைவரும் புதுமுகங்களாகத் தெரிந்தனர்.., ஒன்றும் புரியாமல் தன் கண்களை மூடிக் கொண்டார்.., அருகில் இருந்தவர்கள் ஏதோ பேசுவது காதில் விழுந்தன “இவர்கள்  எல்லாரும் யார்? யாரை அம்மா, அம்மா என்று அழைக்கிறார்கள்.., நான் யார்? ஓஹோ! இந்த உடலைக் கண்டு என்னை அம்மா என்று அழைக்கிறார்கள் என்றால்.., நான் இவர்களின் அம்மாவா? அப்போ உள்ளே இருப்பது யார்? இதற்கு முன் எங்கு இருந்தேன்? பல கேள்விகள் எழுந்தன.., இத்தனை கேள்விகளை.., அந்த பஹீனமான உடல் தாங்காமல் மறுபடியும் சுயநினைவை இழந்தார்..,

இவ்விதமாக ஆண்டவன் பிச்சை ஆறுமாதங்கள் படுக்கையிலே கிடந்திருந்தாள்.., உடலில் பலமே இல்லாத நிலை.., எது சாப்பிட்டாலும் ஜீரணிக்க முடியாத நிலை.., எனவே நீராகாரமாக உணவு கொடுக்கப்பட்டது..,

ஒருநாள் ஒருவர் வந்து”என்னைத் தெரியவில்லையா அம்மா! நான் உனது பிள்ளை” என்பார்.., மறுநாள் “உன் பெண் வந்திருக்கிகேன் பார் அம்மா” என்பாள்.., படுக்கையில் கிடக்கும் மரகதவல்லில் என்ற ஆண்டவன் பிச்சையின் உடலுக்குள் புகுந்து இருக்கும் யோகி இராமகிருஷ்ணவிற்கு ஒன்றுமே புரியவில்லை..., இதனைக் கவனித்த உறவினரும்.., வீட்டில் இருந்தவர்களும் ஏன் அம்மா இப்படி வித்தியாசமாகப் பார்க்கிறாள் என்று கவலைப்பட்டனர். பாவம் உடலில் உட்புகுந்த சூக்ஷ்ம ரூப யோகிக்கு எப்படி இந்த உறவுகளைப் பற்றித் தெரியும்.., 
இதே நிலை தொடர்ந்து சில தினங்களும் ஆகி விட்டன. புதிதாக குடி கொண்ட யோகி ராமகிருஷ்ணாவிற்கு உள் இருந்து ஒரு குரல் சொன்னது.., 

நேரம் வரும் பொழுது எல்லாமே புரியவரும்.., “இந்த சூக்ஷ்ம ஆதமா எதைத் தேடி வந்துள்ளது? என்ன செய்ய வேண்டி உள்ளது எல்லாமே தெரியவரும்..., உனக்கு எல்லாமே சித்தியாகும்., எதைத் தேடி அலைந்தாயோ, எல்லாமே உன்னை வந்தடையும்., உன் எதிரில் வரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்., இந்த உடல் முருகன் குடிகொண்ட கோயில்., இங்கு அனுதினமும் பிரார்த்தனைகளும் பூஜைகளும் , முருகனுக்கு நடைபெற்று வந்தன., நீ மீண்டும் ஒரு கர்ப்பத்தில் நுழைந்து பிறவி எடுப்பதை விரும்பவில்லை., இப்பொழுது கடவுளின் எல்லையற்ற கருணையினால் இந்த உடலை நீ பெற்று இருக்கிறாய்., இவ்வுடல் மூலம் நீ பல யோகிகளையும், பிரம்மஞானிகளையும் தரிசிக்கப் போகிறாய், அதைத் தொடர்ந்து பல திருக்கோவில்களுக்கும் புண்ணிய தீர்த்தங்களுக்கும் சென்று வருவாய்!” என்று குரல் கூறியது.., 


(ஞானநிலைகள் ... தொடரும்....)

ஆத்மாக்களின் சங்கமம் ..1

ஒரே உடலில் பல ஆத்மாக்கள் உறைந்து வாழும் ‘அனந்தஜ ரிஷித்வம்’ பின்னவாசல் ஆன்மதளத்தில் ஆத்மாக்களின் சங்கமம் “ –  ஆத்ம்சாட்சாக்தாகார விளக்கங்களுக்கு .., ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள்..., பின்னவாசல் புண்ய கிராமத்தில் உள்ள அபூர்வமான ஜீவசமாதி பற்றியும், இங்கு நித்திய விஜயம் செய்யும் ஆனந்தஜ ரிஷிக்கான விளக்கமும் தந்தார்.., ஆண்டவனின் பிச்சி எனும் உத்தம முருக பக்தை, சமீப காலத்தில் ஆனந்தஜ ரிஷிபோல், தன் புனிதமான மானுடத் திருமேனியில் இரு பவித்ரமான ஆத்மாக்கள் உய்யும்படியாய்ப் பிரகாசித்தார்...., தொழுநோயாளி வடிவில் வந்த அனுமாரை முதலில் காண இயலாது போன மஹான் துளஸிதாஸர், இவ்வாறாய் அவ்யபிசாரிணி எனும் பக்தி மூலமாகவே ஆஞ்சநேரயைக் கண்டறிந்து தரிசித்தார்.., இதற்கு அவருடைய குருநாதராம் நரஹரிதாஸரின் குருவருள் துணை நின்றது.., நரஹரிதாஸருக்கு இந்த அரிய பக்தியோகத்தை ஆனந்தஜ ரிஷி சூக்குமாய்ப் புகட்டிய தலமும் முழையூர்...,, முழையூரில் கனியும்.., அவ்யபிசாரிணியின்.. அச்சாணி முழை, சித்புச்சப் புழை.... விளக்கங்களை... -  ..... 2017 மற்றும் செப்டம்பர் 2017 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் காண்க.....

ஆண்டவன் பிச்சை புத்தகத்திலிருந்து .........

சென்னை தம்புச் செட்டி தெருவில் காளிகாம்பாள் கோவில் மிகப் பிரசித்திப் பெற்றது. அக்கோவிலில் முருகனுக்கும் வள்ளிக்கும் ஒரு சிறு சந்நிதானம் கட்டித் திறப்பு விழா நடத்தினார்கள். அன்று திரளாக பக்தர்கள் வந்திருந்தனர். நிற்க கூட இடம் இல்லை. அந்த நிகழ்ச்சிக்கு ஆண்டவன் பிச்சையும் வந்து இருந்தார்கள்.. கூட்டம் அதிகமானதால் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்த ஆண்டவன் பிச்சைக்கு ஒரு அபூர்வ காட்சி தோன்றியது. அங்கு இருந்த முருகனின் சிலை தகதகவென்று மின்னுவதும் அதில் ஜோதி பிரகாசமாய் முருகன் அற்புத அழகுடன் நிற்பதும் தெரிய, அதிலேயே லயித்துப் போனாள். அந்த மனலயத்தில் பாட்டு வெளிப்பட்டது. அந்தப் பாட்டுதான் இன்றளவும் பட்டித் தொட்டிகளிலும் பாமர மக்களிடமும் பாடப்பட்டு வருகிறது. அந்தபாட்டு தான்  ..... உள்ளம் உருகுதடா..... முருகா உன்னடி காண்கையிலே....  சில சமயம் முருகனின் தரிசனம் நீடிக்காதா என்றும் ஏங்குவார் அந்த நேரத்தில் அவருக்கு உள்ளேயிருந்து ஒரு குரல் கேட்டது. ஆமாம் , இது முருகனின் குரல் என்று உணர்ந்தாள்.., நீ எதற்காக என்னை வெளியில் தேடுகிறாய்? நான் உனக்குள் இல்லை? நன்றாக உன்னுள்ளே பார்” என்றான்.., மனம் குவிந்தது சுற்றுப்புறத்தை மறந்தது.., முருகனிடம்..மீண்டும் மூழ்கி விட்டாள் ஆண்டவன் பிச்சை.., சிறிது நேரத்திற்குப் பின்னர் சுயநிலையில் வந்தவுடன் தான் கண்ட காட்சியானது. “எவ்விதம் யசோதைக்கு தன் வாயில் அண்ட சராசரங்கள் கிருஷ்ணர் காட்டினாரோ அப்படி இருந்தது நான் கண்ட காட்சி” என்று கூறினார்.

1948ம் ஆண்டு மார்ச் மாதம் ஆண்டவன் பிச்சையின் உறவினர் ஒருவருடன் ஸ்ரீசைலம் சென்று வர விரும்பினார். அங்கு சென்று விட்டு திரும்பிய ஆண்டவன் பிச்சையின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. பல வாரங்கள் நோயால் வாடினார். இதன் காரணமாக உடல் பலஹீனம் அடைந்திருந்தது. ஒரு நாள் அவருடைய பேரக் குழந்தையைத் தூக்கியவாறு மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருக்க கால் தடுமாறி கீழே விழுந்து மூர்ச்சை ஆகி விட்டார்.., வீட்டில் உள்ளவர்கள் அவரைப் படுக்கையில் கிடத்தி டாக்டரை அழைத்தனர். டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு, அம்மாவிற்கு (ஹார்ட் அட்டாக்) இதயம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார். அம்மாவின் இருபிள்ளைகள் டாக்டர்களாக இருந்தனர். அவர்களே சிகிச்சையும் அளித்து வந்தனர். அம்மாவின் மயக்கம் தெளிவில்லை. நாடித்துடிப்பு மிக பலவீனமாக இருந்தது. மேலும் உடல் நிலையும் மோசமாகிக் கொண்டே வந்தது. இதைக் கண்ட உறவினர்கள் அம்மாவின் (ஆண்டவன் பிச்சையின்) உயிருக்கே ஆபத்து வந்து விட்டதாக பயந்தனர். எந்த நிமிடம் என்ன நேருமோ என்ற கவலை எல்லோர் முகத்திலும் கவ்வி இருந்தது.

இனி மேலே ஆண்டவன் பிச்சையின் சரித்திரத்தை தொடருமுன், வாசகர்கள் ஒரு திடீர் திருப்புமுனையை எதிர் கொள்ள நேரிடுகிறது. வாசகர்கள் சென்னையை விட்டு உள்ள பின்னவாசல் என்ற ஊருக்குப் பயணப் பட வேண்டிய கட்டாயம் நேர்ந்துள்ளது. இந்த பின்னவாசல் பயணத்திற்கும், ஆண்டவன் பிச்சைக்கும் என்ன தொடர்பு, ஏன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற வினாக்கள் மனதிலே எழும். அவ்வினாக்களுக்கு விடை தெரிந்து கொள்ள வேண்டுமானால், இப்பயணம் மிகமிக அவசியமாகிறது..., வாருங்கள்... பின்னவாசலை நோக்கிப் பயணத்தை மேற்கொள்வோம்.

பின்னவாசல் யோகி ராமகிருஷ்ணா!

தமிழகத்தில் பின்னவாசல் என்றொரு ஊர் உள்ளது. அவ்வூரில் தெலுங்கு பிராமண வகுப்பைச் சேர்ந்த ஸ்ரீராமகிருஷ்ணா என்று ஒருவர் வாழ்ந்து வந்தார். சிறு வயதிலேயே ஆன்மீகம், வேதம், சாஸ்திரம் இவைகளில் மிக்க ஆர்வம் கொண்டு, சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தார். நாளடைவில் ஜபத்தில் மிகுந்த நாட்டம் ஏற்பட்டது. இந்த நாட்டத்தினால் பாண்டிய நாட்டிலுள்ள ஆவுடையார் கோவிலில் அமர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் தேவியின் பீஜ மந்திரங்களை ஜபித்து தேவியை உபாசனை செய்து வந்தார்., “யோகி ஸ்ரீராம கிருஷ்ணா,” என்ற திருபெயரால் அழைக்கப்பட்டார் மெள்ள மெள்ள யோக வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் தன் மகனைக் கண்ட இவர் பெற்றோர்கள். இவருக்கு நல்ல குடும்பத்திலிருந்து வந்த பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் இவருக்கு மணவாழ்க்கையில் சிறிது கூட நாட்டம் இல்லை., ஒரு நாள் கூட இல்வாழ்க்கையில் ஈடுபடவில்லை. பெற்றோரின் வற்புறுத்தலால் இத்திருமணம் நடந்தேறியது. இந்நிலையில் இவரது மனைவி தான் மணந்த கணவனே கண் கண்ட தெய்வம் என யோகி ராமகிருஷ்ணாவை பூஜித்து  பணிவிடை செய்து வரலானாள்.

 சில தினங்களிலேயே தானும், தன் கணவன் யோகி ராமகிருஷ்ணாவும் மற்றவர்களைப் போல, கணவன் மனைவியாக வாழ மாட்டோம் என புரிந்து கொண்டாள். இருந்தும் குறைந்த பட்சம் அவருக்குப் பணிவிடையாவது செய்து வரலாமே என்று தீர்மானித்து, நேர்மையான பணியாள் போல பணிவிடை செய்து வரலானாள். இதிலும் இப்பெண்மணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எப்பொழுதாவது யோகி ராமகிருஷ்ணாவின் அருகில் இவரது மனைவி வர நேர்ந்தால்,, வெறுப்பும் எரிச்சலும் கலந்த சொற்களால் நீ இனிமேல் இங்கே வரக் கூடாது என்பாராம். தொடர்ச்சியாக இவ்விதம் தன் கணவர் தன்னை வெறுத்து ஒதுக்குவதைக் கண்ட இவரது மனைவி மனம் வெதும்பி “என்னைப் போல் நீங்களும் ஒரு பெண்ணாகப் பிறந்த தான் அனுபவிக்கும் வேதனையை அனுபவித்தே தீர வேண்டும்” என்று சாபமிட்டு விட்டார்.

அவரது மனைவியின் வேதனை நியாயமானது தானே.. ,அந்நாட்களில் பெண்கள் படித்து, வெளியில் சென்று வேலை பார்ப்பது என்பது துர்லபம். திருமணத்திற்குப் பிறகு பெண் தனது கணவனைச் சார்ந்தே வாழவேண்டும்.,, பின்னர் தன் பிள்ளைகளைச் சார்ந்து வாழ வேண்டும். ஆனால் யோகி ராமகிருஷ்ணாவின் மனைவிக்கு கணவனும் வெறுத்து பிள்ளைகளுமில்லாமல் போனால்ல் அவள் வாழ்வு என்னாவது? இந்த பயத்தினால் அவ்வாறு சாபம் இட்டு விட்டாள்.., ஆனால் ராமகிருஷ்ணா இதைப் பற்றிக் கவலையே கொள்ளவில்லை. இவருக்கு வடமொழியில் நல்ல புலமை., சாஸ்த்திரத்தில் தேர்ச்சி, இக்காரணங்களால் பலர், மாணாக்கர்களாகி, பின்னர் பக்தர்களாகி அடியார்களாகி விட்டனர்.

இந்த அடியார்களுடன் இந்தியாவில் பல புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரலானார். ஒரு குருவைப் போல் பல அடியார்களுடன் இவர் இருக்கவும், இவரை அவ்வடியார்கள் சீடர்களைப் போல் பின்பற்றி வந்தாலும்., இவர் மனதில் ஒரு குறை இருந்து கொண்டே வந்தது. தான் குருவாக பலருக்கு புத்திமதி கூறி வந்தாலும், தனக்கு இன்னும் ஒரு குரு கிடைத்து சன்னியாச தீக்ஷ்க்ஷைப் பெறவில்லையே என்ற தவிப்பு இருந்து வந்தது..,, இந்த ஆசை மேலோங்க, யோகி இராமகிருஷ்ணா 1942ல் ரிஷிகேஷ்க்கு வந்தார். அங்கு சுவாமி சிவானந்தாவைத் தரிசித்து தனக்கு சன்னியாச தீக்ஷ்க்ஷை அருளுமாறு வேண்டலானார். சுவாமி சிவானந்தா பெரிய ஞானி., ராமகிருஷ்ணாவின் வேண்டுகோளை ஏற்கவில்லை...,
(ஞான நிலைகள்... தொடரும்.......)