எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, May 22, 2017

திருஅண்ணாமலை சித்தர்கள் - 7

குழந்தை பாக்கியத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட “கல்யாண முருங்கை”

மச்சமுனிவர் தான் கண்டுபிடித்த அதிசிய மூலிகைகள் மூலம் என்ன சித்து விளையாட்டை செய்து காண்பிக்கப் போகிறார் என்பதைக் காண திருஅண்ணாமலை மீது திரண்டிருந்த சித்தர்கள், தெய்வங்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர்.


அப்போது  :-    
               இது தான் வெள்ளைப் புனல் மூலிகை என்று ஒரு சிறு தாவரத்தை எடுத்துக் காட்டிய மச்ச முனிவர் “இதனுள் அடங்கியிருக்கும் அபூர்வமான சக்தி மூளை சமந்தமான நோய் எதுவாக இருந்தாலும் குணப்படுத்திவிடும்” என்றார்..!

      “எப்படி?” என்று கேட்டார் அருணாச்சலேஸ்வரர். கொஞ்சம் இருங்கள்.... என்று கூறிய மச்சமுனிவர் . அந்த மலைக்காட்டில் பித்து பிடித்தவன் போல் உடையில்லாமல், தாடியும், மீசையும் கொண்டு, குளிக்காமல் அழுக்கேறொய ஒரு ஆதிவாசி மனிதனை அங்கே கொண்டு வந்து நிறுத்தினார். நிர்வாண கோலத்தில் இருந்த அவனுக்கு மரத்தழைகளால் ஆடையை அணிவித்தார்.

  “இவன் சித்தப்பிரமை பிடித்தவன்., இந்த அண்ணாமலை வனத்தில் 40 வருடங்களாக இப்படியே அலைந்து கொண்டிருக்கிறாள். இவனது வாயில் இந்த வெள்ளைப் புனலைக் கசக்கி உங்கள் முன்பு விடப் போகிறேன்., ஒன்றரை நாழிகையில் இவன் சித்தப்பிரமை நீங்கி சாதாரண மனிதனாக மாறுவான்..” என்றார் மச்சமுனிவர்.
       
         தொடர்ந்து அவர், அந்த ஆதிவாசி மனிதனை நன்றாக கட்டிப் போட்டார். அவன் திமிறினான். பேந்த பேந்த விழித்தான். கை,கால்களை உதறிப் பார்த்தான் முடியவில்லை.., அவனை மச்சமுனிவர் தன் கண் பார்வையால் அடக்கினார்.

  தன் கையில் இருந்த வெள்ளைப்புனலை, கைகளால் கசக்கி, அதன் சாற்றை அவன் வாயிலும்,மூக்கிலும், அவனது இரண்டு கண்களிலும் ஒவ்வொரு சொட்டாக விட்டார் மச்சமுனி, மீதமுள்ள வெள்ளைபுனலின் சாற்றை எடுத்து அவனது உச்சந்தலையில் தடவினார்.

         சரியாக ஒன்றரை நாழிகை ஆயிற்று.!!

அதுவரை மயங்கிக் கிடந்த அவன் மெல்ல அசையத் தொடங்கினான். மெதுவாக அவன் வாயில் இருந்து “அம்மா.....” என்ற சொல் முணகியபயே வந்தது..

        இவன் சித்தப் பிரமையில் இருந்து மீண்டுவிட்டான் அருணாச்சலேவரா...” என்று அமைதியாகச் சொன்னார் மச்சமுனி,

 உண்மைதான்! அது என் ஞானக் கண்களுக்குத் தெரிந்து விட்டது..” என்று அருணாச்சலேஸ்வரர் சொன்ன போது அருகில் இருந்த பிரம்ம தேவருக்கு கோபம் வந்தது. “இந்த மச்சமுனி செய்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். விதியின்படி இவன் கடைசிவரை சித்தப்பிரமை பிடித்து தான் அலையவேண்டும். இதை மாற்றும் சக்தி மச்சமுனிக்கு இல்லை” என்றார் பிரம்மா.

            இதைக்கேட்ட அருணாச்சலேஸ்வரர் ,பிரம்மாவை சமாதானப்படுத்தியதோடு, சித்தர்களுக்கு விதியை மாற்றும் வலிமை உண்டு. அதுமட்டுமல்ல...., இந்த ஆதிவாசி சதா சர்வகாலமும் என்னுடைய இந்த அண்ணாமலை காட்டிலே வலம் வந்து கொண்டிருந்தான். அதனால் , இந்த ஆதிவாசிக்கு “விதி” மாறிவிட்டது நானே இதற்கு அனுமதியைத் தருகிறேன்” என்றார்..

              இதைக் கேட்டு பிரம்மதேவன் அடங்கிப் போனார்...!!

           “இந்த ஆதிவாசி மனிதனை மறுபடியும் அவன் இருப்பிடத்திற்கே விட்டு விடுகிறேன்.  ஏனெனில் சித்தர்களும், ஞானிகளும், ரிஷிகளும் மட்டுமே தெய்வங்களை நேரில் கண்டு பேசலாம். மனிதர்கள் அந்த பாக்கியம் பெற நீண்டகாலம் தவம் செய்ய வேண்டும். இந்த ஆதிவாசிக்கு அந்தத் தகுதி இல்லை..” என்ற மச்சமுனிவர், அந்த ஆதிவாசியை தன் கைகளால் தூக்கிக் கொண்டு, அவனது பழைய இருப்பிடத்திற்கே கொண்டு போய் விட்டார்.

       பின்னர், தெய்வங்களை வணங்கிவிட்டு, “அடுத்ததாக நான் கண்டிபிடித்த கல்யாண முருங்கை இது” என்று ஒரு காயை எடுத்துக் காட்டினார்...

      இதென்ன புதுமையான காயாக இருக்கிறதே...” என்றார் அருணாச்சலேஸ்வரர்.

             ஆமாம் பிரபு எனது 50 ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு கிடைத்த அற்புதமான பரிசு இது” .,

             “இதை வைத்து என்ன சித்து வேலை செய்ய போகிறாய்?”

“அருணாச்சலேஸ்வரா! இதுவும் பிரம்மாவுக்கு பிடிக்காத விஷயம் தான்

       இருந்தாலும் தெரிந்தோ தெரியாமலோ மனிதர்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கொடுக்கலாம்.., ஆனால் கர்மா, என்றும் , விதி என்றும் மானிட மக்களை பழிக்குப்பழி வாங்குவது இந்த மச்சமுனிவருக்கு ப்டிக்கவில்லை. அவர்களது தலைவிதியை மாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த கல்யாண முருங்கையைக் கண்டுபிடித்தேன்....”

               அப்போது பிரம்மா திடீரென்று குறுக்கிட்டார்.

“அதாவது .... எங்களுடன் இருந்து கொண்டு எங்களுக்கே “சதி” செய்கிறாய் இல்லையா “மச்சமுனி” என்று அவர் சற்று ஆத்திரத்தோடு கேட்டார்.

         “மன்னிக்க வேண்டும் பிரம்மதேவா! விதியை , பிரார்த்தனையினால் வெல்லலாம் என்று தாங்களே சட்டத்தில் ஒரு வழி வகுத்திக்க் கொடுத்திருக்கிறீர்களே... அது எப்படி நியாயமோ அதே போல் தான் நான் செய்வதும் நியாயம் !!” என்றார் மச்சமுனி.

    “அடடா... உங்களுக்குள் என்ன சண்டை இப்போது? மச்சமுனி கண்டு பிடித்த கல்யாண முருங்கை எப்படி விதியை மாற்றப் போகிறது? அதைப் பற்றி விளக்கமே சொல்லாத போது, ஏன் அவசரப்படுகிறாய் பிரம்மதேவா..” என்று முக்கண்ணன் சற்று அதட்டிச் சொன்ன போது பிரம்மாவும் , மச்சமுனியும் அடங்கிப் போனார்கள்.

 “சரி மச்சமுனி... மேலும் சொல்....!” என்று அருணாச்சலேஸ்வரர் சொன்ன பிறகு மச்சமுனி வாய் திறந்தார்...!!

  “ஐயனே! பிரம்மாவின் சட்டப்படி , மனிதர்கள் அவரவர் செய்த பாவ பலன்களுக்கு ஏற்ப திருமணம் ஆகிறது. திருமணத்தின் தத்துவமே வாரிசு உண்டாவது தான். ஆனால் சிலருக்கு திருமணமாகியும் குழந்தைகள் பிறப்பதில்லை.., அவர்கள் கோவிலைச் சுற்றுகிறார்கள் ., பரிகாரங்களைச் செய்கிறார்கள் ., விரதம் இருக்கிறார்கள்.., ஆனாலும் அவர்களுக்கு புத்திர தோஷம் நிவர்த்தி ஆவதில்லை. இதனால் மனநிம்மதி இழக்கிறார்கள்.. பலர் தற்கொலையும் செய்து , சண்டாளர்களாக மாறிவிடுகிறார்கள்.

 அப்படிப்பட்டவர்களுக்கு, கருவில் தோஷம் இருந்தால் அதை விலக்கவும் , அவர்களுக்கு வாரிசு பாக்கியம் கொடுக்கவும் இந்த புதிய தாவரத்தைப் படைத்து, பலருக்கு அவர்களையும் அறியாமல் உணவில் கலந்தும் கொடுத்துவிட்டேன்..”

               “அப்படியா,,,...”

   ஆமாம் ஐயனே! அதன் பலன் வயது அதிகமானாலும் அவர்களுக்குப் புத்திரப் பாக்கியம் கிடைத்திருக்கிறது... இது அதிசியம் தானே...?

“உண்மை தான்! ஆனால் சாதாரணமாக இருக்கிற கல்யாண முருங்கைக்கு அவ்வுளவு பெரிய சக்தி இருக்கிறதா?”   
 “ஆமாம் ஐயனே!”

“அப்படியென்றால் .. பிரம்ம தேவருக்கு படைக்கும் தொழில் பளு குறைந்துவிட்டது என்று கூடச் சொல்லலாம் இல்லையா மச்சமுனி ?” என்று கேட்டார்.. அண்ணாமலையார்.

“ஐயனே... வெறும் கல்யாண முருங்கையினால் மட்டும் குழந்தை பிறக்காது. அதனுடன்.. வேறொரு ரகசிய மூலிகைகளும் கலந்து கொடுக்க வேண்டும். அது தெய்வீக ரகசியம்.. ஆனால் கல்யாண முருங்கைக்கு குழந்தையை உருவாக்கும் சக்தி இருக்கிறது” என்றார் மச்சமுனி.

சரி... சரி.. இதையெல்லாம்.. இந்த மலையில் நேரடியாக நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை., மச்சமுனி சொல்வதை யாம் ஏற்றுக் கொள்கிறோம்...”என்ற சிவபெருமான்...

          “மச்சமுனி சொல்வதைப் பார்த்தால் , இனி தெய்வங்களுக்கு எதிர்காலத்தில் வேறு வேலையே இல்லை என்பது போல்.. தோன்றுகிறதே !!! சித்தர்களுக்கு அப்படிப்பட்ட சக்தி இருக்கிறது உண்மைதான்...!”

          என்று அருணாச்சலேஸ்வரர் சொன்ன போது அங்கிருந்த சித்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது....
       
(--- சித்தர்கள் வருவார்கள்)

Sunday, May 21, 2017

திருஅண்ணாமலை சித்தர்கள் - 6

மீன்களுக்காக போராடிய மச்சமுனி

 
 மச்சமுனிவர் எங்கே? என்று அண்ணாமலையில் எல்லோரும் தேடியபோது , திடீரென்று மச்சமுனிவர் செய்து காட்டிய தீயப்பிழம்பு சித்து வேலையைக் கண்டு சிவபெருமான் உள்பட அத்தனை பேரும் அதிசயித்துப் போனார்கள் ...,

அந்நேரத்தில்  , கைகூப்பி சிவபெருமான் முன்பு வந்து நின்றார் மச்சமுனிவர்.., அவரது தோற்றத்தைக் கண்டு எல்லோருமே.,அதிசயித்துப் போனார்கள் . 

முகத்தில் மட்டும் தாடி – மீசை , தலையில் ஜடாமுடி , மார்புவரை மனித உடம்பு .., இரண்டு கைகள் மட்டும் கூப்பிய நிலை.., கண்களிலே தீர்க்கமான ஒளி வெள்ளம் . மார்புக்கு கீழே மீன் போன்ற அமைப்பு .கால்களைக் காணவில்லை . ஆனால் செதிள் , செதிளாக தோற்றம் . சிவபெருமான் – உண்ணாமுலை அம்மன் பொற்பாதத்தில் மச்சமுனி விழுந்து வணங்கினார்.

“உன்னுடைய சித்து வேலையைக் கண்டு பிரமித்துப் போனேன் . எப்படி அந்த நான்கு ஒளிப்பிழம்பு வந்தது? என்று கேட்டார் அருணாச்சலேஸ்வரரான சிவபெருமான்.

“அந்த நான்கும் என்னால் உண்டாக்கப்பட்ட அற்புதமான மூலிகைச் செடிகள் அந்த செடிகளுக்கு வானத்தை நோக்கிச் செல்லும் ஆற்றல் உண்டு. அதேசமயம் பூமியை நோக்கி கீழே விழுந்து விதவிதமான பொருளாக மாறும் சக்தியும் உண்டு. இது என் தவசக்திக்கு கிடைத்த பரிசு...,

              “இந்த நான்கிற்கும் ஏதேனும் பெயர்கள் இருக்கிறதா ?”

இருக்கிறது அருணாச்சலேஸ்வரா! முதலாவது மூலிகைச் செடியின் பெயர் வெள்ளைப் புனல் , இரண்டாவது மூலிகைச் செடிக்குப் பெயர் கல்யாண முருங்கை , மூன்றாவது மூலைகைச் செடிக்குப் பெயர் காவன்எதிரிப் பேயச் சுரை , நான்காவது மூலைகைக்குப் பெயர் இருவரிக் கற்றாழை”

“இது எந்த வகையைச் சேர்ந்தது ?”

“செடி , மர வகையைச் சேர்ந்தது , அவற்றை உயிர் கொடுக்கும் மூலிகை இனமாக மாற்றியிருக்கிறேன்.”

“இது எப்படி உயிரைக் காக்கும்? “

அருணாச்சலேஸ்வரா ! தாங்களும் , மற்றவர்களும் அனுமதி அளித்தால் இந்த நான்கு மூலிகைகளை தங்கள் முன்னே செயல்பட வைக்கிறேன்..”

“மச்சமுனி... அது ஒரு பக்கம் இருக்கட்டும்.., நீயோ மனிதமுகமும் , மீனின் உடல் அமைப்பும் கொண்டிருக்கிறாய் . இது எப்படி? இந்த உருவத்தை வைத்துக் கொண்டு உன்னால் சித்த நிலையை எப்படி அடைய முடிந்தது ..?

“ஜயனே ! தாங்களே இப்படியொரு வரத்தை அன்றைக்கு கைலாயத்தில் எனக்கு கொடுத்து விட்டு ., இப்போது ஏதும் அறியாதவர்போல் ., கேள்வி கேட்கிறீர்களே..... இது நியாயமா?”.. என்று மச்சமுனி பவ்வியமாக கேட்டபோது அகத்தியர் குறுக்கிட்டார்...,

“மீன்கள் எல்லாம் நீரில் இருக்கும்போது ஆனந்தமாக வாழ்கின்றன .., ஆனால் அவை தரையில் விழுந்த போது துடிதுடித்து இறந்து விடுகின்றன. ஒரு சமயம் இயற்கையின் சூழ்நிலை காரணமாக கடல்கள் வற்றியது. இதனால் மீன்கள், திமிங்கலங்கள் , சுறா போன்றவை இறந்த, ஆனால் அதே சமயம் நீருக்குள் வாழ்ந்து கொண்டிருந்த ஆமைகள் மட்டும் பிழைத்துக் கொண்டன.

      ஆமையைத் தவிர மற்ற கடல்வாழ் பிராணிகள் தரைக்கு வந்த போதும், கடல் நீர் வற்றிய போதும் துடிதுடித்து இறப்பைதைக் கண்ட இந்த மச்சமுனிவர் தானே மச்ச உருவமாக மாறி கடுமையாகத் தவம் புரிந்தார்...” என்று அகத்தியர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே.....,

        “எதற்கு தவம் புரிந்தார்?“ என்று, வேண்டும் என்றே ஒன்றும் அறியாதவர் போல் கேட்டார் சிவபெருமான்.   “ அருணாச்சலேஸ்வரா! இதுவும் தாங்கள் அறியாததா?. ஏன் இந்த நாடகம்?“ என்று கேட்ட அகத்தியர்.., “கடல் வாழ் ஆமைகளைப் போல் கடல் வாழ் மீன்களுக்கும் கடலிலும் உயிர் இருக்க வேண்டும். தரைக்கு வந்தாலும் எல்லா மீன்களும் உயிரோடு இருக்க வேண்டும். ஆமைக்கு ஒரு நீதி மீனுக்கு ஒரு நீதியா? என்று போராடினார் இந்த மச்சமுனிவர்....”

       “அப்படியா நடந்தது? பிறகு...?” என்று அப்போது திருவாய் மலர்ந்து ஆச்சரியத்துடன் கேட்டாள் சிவன் பக்கத்தில் இருந்த உண்ணாமுலை அம்மன். 

                “பிறகு என்ன... சிவபெருமானாகிய இவர் வாய் திறந்து பேசவில்லை.. மீன்களுக்குத் தக்க நீதியும் கிடைக்கவில்லை...,  எனவே மச்சமுனிவர் வருண பகவானை வேண்ட... வருண பகவான் மழையாகப் பொழிந்தார் கடலில் நீர் பெருகியது. தண்ணீர் இல்லாமல் துடிதுடித்துக் கொண்டிருந்த அத்தனை மீன்களுக்கும் உயிர் வந்தது. இல்லையா மச்சமுனி?“  என்று அகத்தியர் மச்சமுனிவரைப் பார்த்துக் கேட்டார்.

     “அகத்தியர் சொல்வது , அத்தனையும் உண்மை.., ஆனால் இன்னமும் சிவபெருமான் என் வேண்டுகோளை ஏற்கவில்லை.. இன்றைக்கும் மீன்களின் கதி அப்படியேத்தான் இருக்கிறது...” என்று மிகவும் வருத்தப்பட்டார் மச்சமுனி...

        அப்போது.....
               “ஸ்வாமி..... என்றாள் பார்வதி தேவியான உண்ணாமுலை அம்மன்.. “என்ன...?” என்று புருத்தாலேயே பதில் கேட்டார். சிவபெருமான்.. “இந்த மச்சமுனி கேட்பது நியாயம் தானே? ஆமைக்கு ஒரு நீதியும் ,மீனுக்கு ஒரு நீதியும் இனுயும் இருக்க வேண்டாமே..  பேசாமல் மீன்களுக்கும் தரையில் உயிர் கொடுத்து விடுங்களேன்” என்றாள் தேவி உண்ணாமுலை அம்மன்.

    இதைக் கேட அருணாச்சலேஸ்வரர் கடகடவென்று சிரித்தார்.. அகத்தியர் உள்பட அங்குள்ள அனைவருக்கும் சிவபெருமான் சிரிப்பதற்குரிய காரணம் தெரியவில்லை. சில விநாடிகள் அமைதியாக இருந்த அருணாச்சலேஸ்வரர் , “தேவி... சட்டென்று யாரையும் நம்பிவிடாதே! இந்த மச்சமுனி மிகப்பெரிய சித்தன். நிறைய தவத்தால் பல பெரும் சக்தியை வைத்துக்கொண்டிருப்பவன். என்னிடம் வேஷம் போடுகிறான்..” என்றார்..

“எப்படி?” என்று தன் மீன் கண்களால் கேட்டாள் உண்ணாமுலை அம்மன்...

        இவன் செய்த தவத்திற்கு நாம் மசியவில்லை என்றதும் , வருண பகவானைக் கொண்டே வற்றிய கடலை நிரம்பச் செய்தானே.... அது மிகப்பெரிய ஆச்சரியம் இல்லையா....?

 “ஆமாம்....!”  அன்றைக்கு கடல் வற்றி, துடித்துக் கொண்டிருந்த லட்ச்சக்கணக்கான மீன்களுக்கு கடலை உண்டாக்கி உயிர் கொடுக்க வைத்தானே... இது தெய்வ நிகர் சக்தி தானே...??

“ஆமாம் .... ஆமாம்!!” “தனது போராட்டாம் நிறைவு பெறும் வகையில், இன்றுவரை உடம்பை மீனாக மாற்றி தலையை சித்தனாக வைத்துக் கொண்டிருக்கிறானே.... இது பெரிய சாதனை அல்லவா..

       “ஆ....மாம்!!”             
              இப்படிப்பட்ட மச்சமுனிவன்.., இறந்தாலும் உயிர் கொடுக்கும் வகையில் யாருக்கும் தெரியாத வகையில் நான்கு வகை மூலிகைகளைக் கண்டு பிடித்தான்.. இவனால் இன்றைக்கு ஒரு மீன்கூட தரையில் வந்தாலும் இறப்பதில்லை., எந்த மீன் கரைக்கு வந்தாலும் இவன் இந்த நான்கு வகை மூலிகைகளில் ஏதேனும் ஒன்றைக் கொடுத்து காப்பாற்றிக் கொண்டு வருகிறானே.... இது யாருக்காவது தெரியுமா..?” என்று அருணாச்சலேஸ்வரர் சொன்ன போது, அங்கிருந்த அனைவரும் மச்சமுனிவரது திறமையைக் கண்டு வியந்து அவரை நோக்கிக் கை கூப்பினார்கள்...!

     தொடர்ந்து ., “மச்சமுனிவரே! உன் நான்கு மூலிகைகளின் சித்த குணத்தை இப்போது இங்குள்ள எல்லோர் முன்னிலையிலும் காட்டு!” என்றார் அருணாச்சலேஸ்வரர்.

எல்லாச் சித்தர்களும் அதைக் காண ஆவலோடு தயாரானார்கள்...!

 (--- சித்தர்கள் வருவார்கள்...)


Thursday, May 11, 2017

Osho வின் -- தாம்பத்ய பார்வை...!!!!


உங்களது காம ஆசைக்கு ஆதரவு கொடுப்பதற்காகவே ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நிர்வாணமான பெண் நீங்கள் கற்பனை செய்வதற்கு எந்த இடமும் கொடுப்பதில்லை. அதனால்தான் நிர்வாணமான பெண்கள்அந்த அளவுக்கு கவர்ச்சியாக இருப்பதில்லை.அதே போன்று நிர்வாணமான ஆண்களும் கவர்ச்சியாக இருப்பதில்லை. ஆனால்,ஒரு ஆணோ, பெண்ணோ ஆடைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் போது அவர்கள் உங்களது கற்பனைக்கு அதிகம் விட்டுவிடுகிறார்கள். இந்த ஆடைகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று நீங்கள் கற்பனை செய்ய முடியும். நீங்கள் மீண்டும் கற்பனை செய்யலாம்.ஆனால், உங்களது மனைவியை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.அதுதான் சிக்கல். உங்களால் உங்களது பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியை கற்பனை செய்து பார்க்க முடியும். அவள் கவர்ச்சியாக தெரிவாள்.! உங்களது மனைவியிடம் உங்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டதென்றால் உங்களுக்கு அவளது ஆன்மாவிற்குள் நுழைவது எப்படி என்று தெரியவில்லை.

நீங்கள் அவளது உடலில் நுழைய முடியும். ஆனால் அது விரைவில் சலிப்பாக ஆகிவிடும். ஏனெனில் அது ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வதாக இருக்கும். உடல் என்பது மேம்போக்கான விஷயம்.
நீங்கள் உடலோடு ஒருமுறை,இருமுறை,மூன்றுமுறை உறவு கொள்ளலாம். அதன்பிறகு அந்த உடலோடும், அதன் வளைவு நெளிவுகளோடும்  .,  உங்களுக்கு பரிச்சயம் ஏற்பட்டுவிடுகிறது. அதன் பின்னர் அங்கே எதுவும் புதிதாக இருக்காது.  நீங்கள் அடுத்த பெண்ணின் மீது ஆர்வம்  கொள்ள ஆரம்பித்து விடுகிறீர்கள்.

உங்களது மனைவியைவிட அவர்களிடம்  ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். அவர்களது ஆடைகளுக்குப் பின்னால்  அவர்கள் ஏதோ ஒன்றினை வித்தியாசமாக
பெற்றிருப்பார்கள் என்று  குறைந்தபட்சம் உங்களால் கற்பனையாவது  செய்து பார்க்க முடியும்.    "மக்கள் தங்களது மனைவி மற்றும் கணவன்களோடு சலிப்படைந்து விட்டனர்."    அதற்கான காரணம் ஒருவர் மற்றொருவரின்  ஆன்மாவோடு தொடர்பு கொள்ளமுடியாமல் போகின்றனர்.


நீங்கள் ஆன்ம நண்பர்கள் ஆகிவிடும்போது
அங்கே சலிப்பு என்பது இருக்கவே இருக்காது.
"அதனால்தான் தந்த்ரா மார்க்கமானது
எல்லா மனிதர்களுக்கும் கல்வியில் தேவையான ஒரு
பகுதியாக ஆகவேண்டும் என்று நான் கூறுகிறேன்.
" "தந்த்ரா என்பது ஆன்மாக்களோடு தொடர்பு கொள்கின்றன,
அடுத்தவரின் ஆழ்ந்த மையத்திற்கு செல்கின்ற ஒரு விஞ்ஞானம்."
"இந்த கலையை அறிந்துகொண்ட ஒரு உலகில்
மட்டுமே இந்த சலிப்பு மறைந்துபோகும்."

--- ஓஷோ---