எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, February 14, 2017

அன்னசார துதிகள்

“அன்னம் பஹுகுர்வீதம் , உலகெலாம் அன்னமயம் , உடலெல்லாம் அன்னமயம் , யாங்கனும் அன்னமயம் அன்னம் பஹுகுருவேதம் “ 

 என்று ஓதி வந்தால் , மனத்திற்க்குத் தெளிவு கிட்டும்..,  உணவாகிய அன்னம் இல்லை என்றால் உடலில் உயிர் தங்காது அல்லவா .., அன்ன சாரமே குருவருள் .., இது இல்லை என்றால் உடலில் ஆத்மா (தாங்காது) தங்காது...,

 அன்னவாலி சித்தரே போற்றி ., அன்னவிநோத ஈசா போற்றி...!!!

Ø  உலகில் மரம் போன்று மிகவும் அதிகமாக மனிதனால் பயன்படுத்தப் பெறுவது இரும்பு ஆகும். சாப்பிடும் தட்டும், நீரருந்தும் டம்ளரும்  எவர்சில்வரால், இரும்பால் அமைகிறது. இவையெல்லாம் சனீஸ்வர சக்திப் பொருட்களாகும்.
 
எனவே, 
இரும்புத் தம்ளரையோ, தட்டையோ, நன்முறையில் அவற்றில் உள்ள துரு தோஷங்களை அகற்றியே பயன்படுத்த வேண்டும். துருப் பிடிக்கும் குணத்தால்தான் பூஜைகளில் எவர்சில்வர் சாதனங்களைப் பயன்படுத்துவது கிடையாது. சில வகை வண்ணங்களைப் பயன்படுத்தி இத்தகையத் தோஷத் தன்மைகளைத் தணிக்கலாம். 

ஓம் ஸ்ரீசனீஸ்வர உலோகலோக பத்மாஸ்ரயே நம 
இரும்புத் துறைப் பாத ஈச சனீஸ்வரா போற்றி 

                                 --  என்று எட்டு முறை ஓதிய பின்னரே எவர்சில்வர் 
                               சாதனங்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.


உணவு உண்ணும் முன் :- ஓத வேண்டிய துதி.

அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர ப்ராணவல்லபே
ஞான வைராக்கிய சித்யர்த்தம் பிட்சாந் தேஹீச பார்வதி
மாதாச பார்வதிதேவி , பிதா தேவோ மஹேஸ்வர
பாந்தவாம் சிவபக்தாஸ்ச ஸ்வேதேசோ புவனத்ரயம்
பிட்சாந்தேஹி பிட்சாந்தேஹி பிட்சாந்தேஹி , 
க்ருபா வலம்பகைரி மாதா அன்னபூர்னணேஸ்வரீ

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் , பொன்னம் பாலிக்கு மேலுமீப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறு கண்டின்புற, இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே!



சமைக்கும் போது ஓத வேண்டிய துதிகள் :-

சிவகனிச் சாறும் செம்பாரக் கனிச் சாறும்
பவகரண யோகமும் பரிந்து கூடியே
உவப்புடன் ஒளிர்கின்ற உமையருள் ஜோதியே
பவதாரிணி சாகம்பரி பரிபாலயம் ஆகுகவே !

உலகெலாம் ஒங்கிடும் உமையவள் உன்னருள்
நிலமெலாம் நிரவிடும் நின்பயிர் பொங்கிடும்
பவமுகக் கண்ணுடை பரமனின் பாகமே
கலம்பக ஜோதியே ! காத்தருள் கண்ணியே”


“ஜகத் பிரம்ம விவர்த்தைக காரணே பரமேஸ்வரி நம :
சாகம்பரி சிவே நமஸ்தே சதலோசனே “

- All infoz taken from Sri Agasthiya Vijayam Magazine 

திருவாரூர் திருத்தலம்



    ஆரூரன் சந்நிதி போல்
   ஆருரன் ஆலயம் போல்

      ஆரூரன் பாதத்து
    அழகுபோல் – ஆரூர்

  மருவெடுத்த கஞ்சமலர்       வாவிபோல் நெஞ்சே ? 
        
     ஒருஇடத்தில் 
         உண்டோ உரை?                 -    சுவடிப்பாடல்


Ø  துவாதசாந்த மந்திர சிம்ஹாசனம் : யோக சாதனையில் சிரசுக்கு மேல் 12 அங்குலத்தில் தேகம் கடந்த தேகியை சிவம் ஸ்பரிசிக்கும்... ஸ்தானம்...,

Ø  நிலோத்பலம் புத்தம் பக்கம் – 27 [ திருவாரூர் ஷேத்திரம் பற்றிய முழுமையான நூல்.. book available in thiruvarur temple.]

Ø  குறிப்பு :  இது தான் மிருகி முத்திரையில் நிகழ்கிறது... ஆதலால் கையை முழுவதுமாக உயர்த்தி.. வணங்கிட வேண்டும்... அப்போது தான் பலன்..



Ø  அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரப் பாசுரம் 
எத்தகைய விதியையும் மாற்றி முக்தி அளிக்கும் தெய்வத் திருவடி பகவானின் திருவடிச் சின்னமே இறைவனின் திருக்கைச் சாற்றெனும் ஐயனின் கையெழுத்து


 சேல் பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்  பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல் பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்புமவன்
 கால் பட்டழிந்தது இங்கென் தலை மேல் அயன் கை எழுத்தே
§  ---(கந்தர் அலங்காரம்)



Ø  இந்திர லோகத்தில் இருந்து பூலோகம் வரை ஸ்ரீபாதம்தாங்கி சித்தரிஷியின் பரிவாரமே சுமந்து வந்து , முதன் முதலாக ஏழு மூர்த்திகளையும் வைத்துப் பூஜித்த தலம் திரு நல்லூர் என்பது பலரும் அறியாத தெய்வீக ரகசியம்...!!!

Ø  இந்த உன்னத மகத்துவத்தாலும் , திருநல்லூர் தலத்தில் சிவபெருமான் அப்பர் சுவாமிகளை வரவழைத்து , இங்கேயே திருநல்லூரில் அப்பருக்குத் திருவடி தீட்சையைத் தந்தருளினார்...,

Ø  மேலும் , பூவுலகில் எத்தலத்தில் அகஸ்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கமானது கருவறையில் மூல லிங்கத்துடன் சேர்ந்து அகஸ்தியரால் முதன் முதலில் பூஜிக்கப் பெற்றதோ , அப்புண்ய தலத்தில் இருந்தே மஹாவிஷ்ணு , இந்திரன் பூஜித்த தியாகராஜ மூலமூர்த்தம் மற்றும் தேவசிற்பிகளான விஸ்வகர்மா , மயனால் உருவாக்க பெற்ற ஏனைய ஆறு தியாகராஜ மூர்த்தங்களுக்கும் .., பூலோகத்தின் முதல் பூஜை துவங்க வேண்டும்.., இந்த நியதியையும் தேவகுருவான பிருஹஸ்பதி ரிஷியும் ., ஸ்ரீபாதரிஷியும் முசுகுந்த சக்கரவர்த்திக்கு எடுத்துரைத்தனர்..!!

Ø  திருநல்லூரில் ஸ்ரீபாதரிஷியின் வடிவமும் ., முசுகுந்தர் பூசித்த லிங்கமும் உள்ளன ., இவ்வாறாய் திருநல்லம் தலத்தில் தான் சப்தவிடத் தலங்களாகிய ஏழு தலங்களிலும் உள்ள தியாகராஜ மூர்த்திகள் முதன் முதலில் இப்பூவுலகிற்கு வந்து பிறகு எல்லா தலங்களுக்கும் சென்றனர்...

 மேலும் முழு திவ்ய விளக்கங்களுக்கு ,ஜூன் 2016 ஸ்ரீஅகஸ்திய விஜயம்..!!!

அத்தனை பிறவிகளையும் தீர்த்தருளும்
அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்
சற்குரு வேங்கடராம சுவாமிகள் அருளிச் செய்த –
அங்காளி அந்தாதி பாசுரம் – 90

பாத நினைவே எனக்கென்றும் வேண்டும் வேறெது நினைவும்
காத தூரம் ஓடிட வேண்டும் நின் நினைவு என்றும்
சேதமுறாது செம்மலர்ப் பாத நின் நினைவே வேண்டும்
நின் பாதமே என் பல பிறவி அழிக்க வந்ததே!
                                                        -அங்காளி அந்தாதி

Wednesday, January 4, 2017

தெய்வீக ரகசியங்கள் பூத்துக் குலுங்கும்

✴ பூவுலகின் ஆதிமுதல் நித்திய தெய்வக் கல்யாண பூமி பிரபஞ்சத்தின் சகல தெய்வ மூர்த்திகளும் ..., கல்யாணப் பெயருடன் , சகல் தெய்வ மூர்த்திகளின் திருக்கல்யாண உற்சவங்களும் .., தினமுமே ஒவ்வொரு தெய்வத் திருமண வைபவமும் கல்யாண பூமி கல்யாண மஹாதேவி ஸ்ரீகல்யாண மீனாட்சி அம்மன் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் அருட்சாரத்துடன் ..,
✴ ஜாதகத்தில் லக்னத்தின் ஏழாமிடமான திருமணஸ்தானம் ,மாங்கல்ய ஸ்தானம் இதை கொண்டருளும் பூவுலகின் திருமண மேடு .., நித்ய சுமங்ககலித்வ சக்திகளையும் , திருமண நல்வர சக்திகளையும் பூண்ட அரிய இரட்டை பனைமர ஸ்தலவிருட்சத் பட்டீஸ்வரம் ஸ்ரீகோபிநாதப் பெருமாளின் ஆசினாளும்....,


✴ திருமண சக்தித் தலங்களில் ஆற்றிய கல்யாண சங்கல்ப வழிபாடுகளை எல்லாம் இனிதே கனிய வைத்து திருமணத்தை நிகழ்த்தித் தரும் ..,பூவுலகின் திருமண முற்றம்.. இலந்தை துறை சிவா-விஷ்ணு. பூமியின் கல்யாண தீபச் சுடரோடு...,
✴ திருக்கடவூர் அமிர்த்வல்லித் தாயார் சன்னிதியில் திருமணதை நிகழ்த்துவதை விடப் பெரும் பாக்யம் வேறெதுவுமில்லை என்று தேவலோகங்களிலே போற்றும் அளவிற்குப் பல தெய்மூர்த்திகளின் , சித்தர்களின் , மஹரிஷிகளின் திருமண வைபவங்களும் நிகழந்த திவ்யாமிர்த தலம்.. அமிர்தவல்லி தாயார் சமேத அமிர்த நாராயணபெருமாளின் அருள் வார்ப்போடு...
✴ ஆங்கிரஸ மகரிஷி தம் பத்னி சுரூபாவுடன் தெய்வத் திருமணங்கள் , மகரிஷி திருமணங்களுக்கு .., அந்தந்தயுக நியதிப்படி ., அக்னி ஹோம பூஜைகளை ஆற்றிச் சிற்ப்பிக்கும் திருமணவயல் ஸ்ரீசௌந்தர நாயகி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரரின்..ஜோதி பிரவாகத்துடன் கழுமல நிவர்த்தி யாகமாய் ., வினை தீர்க்கும் வெகு வேள்வியாய் விரிந்து .., பரா யக்ஞமாய் பரந்து அருள் சுரக்கும் ஹோமாக்னி பிரம்ம முகூர்த்த ஆரம்பமான முன் அதிகாலை முன்று மணி அளவில் தொடங்கி .
✴ திருஅண்ணாமலையை நினைத்தாலேயே முக்தி தரும் என அம்பிகையும் , அகஸ்தியபிரானும் உமாமஹேஸ்வர மூர்த்தியின் திருமணக்கோல முன்னிலையிலேயே சர்வேஸ்வரனின் ஒருமித்த திருவாக்காய் யுகம் யுகமாய் உரைத்து வரும் உத்தம தலம்..., நினைத்தாலே முக்தி அளிக்கும் (ருத்ர , விஷ்ணு , பிரம்ம மும்மூர்த்தித் தலமே திருஅண்ணாமலை என .....

 சகல கோடிச் சித்தர்களின் முன்னிலையில் வாஸ்தம்பல மூர்த்தியாய் சபாபதி நாதன் ஓதி உணர்வித்த திருத்தலம் ..., இவ்வாறு அருணாசல முக்தா முக்தி வாக்கியம் முதன் முதலில் வேதவாஸ்து மந்த்ரப் பூர்வமாக ஒலித்த சோண வாஸ்து மண்டபமாய் இன்றும் பொலியும் .., தெய்வ திருமணங்களுக்க்கே திருமாங்கல்யம் வழங்கும் உத்தமத் தலம் திருமங்கலம் ஸ்ரீபூலோக நாயகி சமேத ஸ்ரீபூலோகநாதரின் , மாங்கல்ய ஆசியோடு மாங்கல்ய தாரணம்..!!

will be continued... after marriage .. temples to be visited.

Contents from Sri AGASTHIYA VIJAYAM ., magazine monthly editions