எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, July 30, 2013

அடிப்படை ஆன்மிகம் - 1

முன்னுரையும் ,  முடிவுரையும் இல்லா  - பொருளுரை  !!!!!!!!!

     ஏகம் ஏன்? அனேகமானது  . அதாவது இறை என்னும் ஏகப் பரம்பொருளாகிய பரமாத்மாவில் இருந்து ஏன்? ஜீவாத்மா வந்தது .., வந்தாலும் முதலில் மாயை உயிரை ஏன்? எதற்கு? பற்றவேண்டும்  .., ஆன்மா அசுத்தம் அற்றது  ,   இவையல்லாம் ஏன் ?, எதற்கு? ,

எதனால் மனம் , அறிவு .,  ஆத்மா ., இவை இனைந்து  உடம்பில்  கலக்கிறது / ஏன் கலக்க வேண்டும் ? . உலகியலில் பரிநாமவளர்ச்சி அடைந்துகொண்டேபோகிறது .,  ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து ., அறிவோடு ஒடுங்கி ஞானத்தை தேடி ., ஜோதியில் கலக்கிறது ., மீண்டும் ஜோதியில் இருந்து தெரித்து ., ஆன்மாவில் மீண்டும்   .....


தானாயிருக்கும் பிரமத்தின்
     தன்செயல் தன்னை அறிந்தாக்கால்
வானாகி நின்று மறைபொருள்
     ஆனதை வாய்கொண்டு சொல்லுவாரோ?
                                       - ஏகநாதர் 

சொல்லமுடியாது தான் .. இருந்தாலும் முயற்சிக்கிறோம், முடிந்தவரை இறையருளால் புரிந்து கொள்ள முயற்ச்சியுங்கள் ., கந்த குரு கவசத்தில் வரும் அதி திவ்ய வாசகம் " அறிவை எல்லாம் அறியும் அவ்வறிவை கொடுத்தது யார் ? இதற்க்கு ஸ்ரீ கந்த குரு கவசத்தில் வரும்  அடுத்த வரிகள விளக்குகின்றன .., " நல்லதும் ., கேட்டதும் ., நான் என்பதும் மறக்கவேண்டும் - நான் யார் என்பதை அறிவதை விட "நான்" என்பதை மறத்தலே சிறப்பு .., எண்ணங்கள் அற்ற நிலை . இதுவே ஆன்மாவின் உச்ச நிலை ..,  இதுவே ஆன்மாவின் பரிபுரன நிலை .இதை அறிவின் துணை கொண்டு அடையவேண்டும்   இந்த எண்ணங்கள் அற்ற நிலை தான் காலம் நிதர்சனமாகும் ,.., [ இந்த காலம் பற்றி சொல்கையில் . முக்காலத்தையும் கடந்த கடக்க வல்லவர்கள் சித்தர்கள் என்பார்கள் . சக்திய உண்மைதான் . இந்த காலத்தை கடத்தல் என்பதில்  சிருஷ்டி படைப்பு பற்றிய  சிதம்பர ரகசியத்தின் திறவுகோள் ., உள்ளது .. 


சித்தம் பலத்திலச் சிதம்பர 
வித்தையைத் தேறித் தெளிந்தேதான் 
சத்தம் பிறந்திட வாசி 
அறிந்து தானும் நடந்தேன் .
            --- ஏக நாதர் 

[ ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் காலம் பற்றி குறிப்பிடுகையில் "நடந்ததே நடப்பனவாய் நடந்து கொண்டிருகின்றன " என்ற வாசகத்தை குறிபிடுவார்கள் .., இந்த வாசகத்தில் காலத்தை  பற்றி நன்கு விளங்கும் .., மேலும் காலத்தை கடத்தல் பற்றி அதிதிவ்யமாக அறிய விரும்பினால் 2002 செப்டம்பர்  மாத இதழ் அடிமை கண்ட ஆனந்தத்தை படித்து பாருங்கள்  ஆழ்ந்த  நம்பிக்கையோடு  படித்தால் .,முக்காலத்தையும் கடந்த ., கடக்கும் ., கடக்க ., வல்ல  பேரானந்த குரு குல வாச அனுபூதி .., ] 

சரி ., விசயதிற்கு வருவோம் .., "எண்ணங்கள் அற்ற நிலை" ., இதுவே ஆத்மாவின் உச்ச நிலை . மாயை பற்றாத கர்மா அற்ற நிலை  ., இதை இறைவன்  கொடுத்த அறிவை கொண்டு அடைவோம் .., இதற்கு என்ன செய்ய வேண்டும் .., "அடிப்படை ஆன்மிகம் தான் " வேறேதுவும் தேவைவில்லை . அடிப்படை ஆன்மிகம் பற்றி அடுத்த பதிவில் தெரிவிக்கின்றேன்...,  படித்ததை .,கேட்டதை ,  உணர்ந்ததை ஏதோ யம் அறிவுக்கு எட்டியதை  .., நன்றி .!.

-------------------------------------------------------------------------------------------------------------------------------


அகஸ்தியரின் அறவுரைகள் !

ஒரு மனிதன் மன அழுத்தமில்லாமல் வாழ அவன்தான் பயிற்சி எடுக்கவேண்டும். ஒரு மனிதனின் ஹ்ருதயமானது “ நான் இந்த கூட்டுக்குள் இருக்கிறேன். எனக்கு சத்துள்ள உணவை இந்த மனிதன் இன்று கொடுக்கவில்லை. எனவே நான் இயங்க மாட்டேன் “ என்று கூறினால் என்னவாகும் ? ஒரு மனிதனின் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் போராடி, போராடி ஜீவித்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறதா ? சரியான உணவை இந்த மனிதன் தந்தாலும், தராவிட்டாலும் போராட வேண்டும் என்ற எண்ணம் உள்ளே இருக்கும் உறுப்புகளுக்கு இருக்கிறது. சிந்தனா சக்தியில்லாமல் வெறும் இயந்திரகதியில் இயங்குகின்ற உறுப்புகளே அவ்வாறு இயங்கும்போது சிந்தனையாற்றல் கொண்ட மனிதனானவன் “ இதனால் நான் இதனை செய்யவில்லை. இந்த பிரச்சினை இருப்பதால் நான் இன்று பூஜை செய்யவில்லை. இந்த கஷ்டம் வந்துவிட்டதால் நான் இன்று அதிகாலை எழவில்லை. இப்படியொரு சிக்கலான சூழல் இருப்பதால் நான் இன்று ஆலயம் செல்லவில்லை. இப்படியொரு கடுமையான பொருளாதார நெருக்கடி இருப்பதால் நான் தர்மம் செய்யவில்லை என்று காரண, காரியங்களை அடுக்கிக்கொண்டே செல்லாமல் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு மிகவும் அதி விரைவாக அவன் கடமைகளை செய்வதோடு யாங்கள் காட்டுகின்ற பாதையில் செல்லவேண்டும்.

எனவே ஒரு மனிதன் எந்தவொரு நிலையிலும் தன்னுடைய குடும்பக் கடமைகளை தவறவிடக்கூடாது. ஆனால் பற்றும், பாசமும் அற்ற நிலையில் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு நாங்கள் அடிக்கடி கூறுவதுபோல மிக விலை உயர்ந்த வாகனத்தை ஒரு தனவான் வாங்கி அதை அவன் இயக்கத் தெரியாமல் இன்னொரு மனிதனை ஊதியத்திற்கு அமர்த்தி இயக்கும்பொழுது, விலையுயர்ந்த வாகனத்தை இயக்கும் பொறுப்பு மட்டும்தான் நமது. ஆனால் நம்முடைய கடமை அதோடு முடிந்துவிட்டது. இந்த வாகனத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது என்ற நிலை தெரிந்தே அந்த வாகனத்தை அவன் இயக்குகிறானோ அதைப்போல் குடும்ப பொறுப்புகளையும், மற்ற பொறுப்புகளையும் ஒரு மனிதன் ஏற்றுக்கொண்டு, கடமையை ஆற்றுவது என்பது வேறு, கடமையிலேயே ஆழ்ந்து கிடப்பது என்பது வேறு. எதிர்காலம் குறித்து திட்டமிடுதல் என்பது வேறு, எதிர்காலம் குறித்து கவலைப்படுவது என்பது வேறு. கடந்த காலத்தை எண்ணி இனி சற்று விழிப்போடு இருக்கவேண்டும் என்று உணர்ந்து கொள்வது என்பது வேறு, அதிலேயே உழன்று கிடப்பது என்பது வேறு. எனவே இந்தக் கருத்துக்களை மீண்டும், மீண்டும் அசைபோடு. நன்மை உண்டு. நாழிகை பின்பு மீண்டும் வாக்கு உரைப்போம். ஆசிகள்.

1.   எனவே மனதை திடமாக, உறுதியாக, நம்பிக்கையாக, இறை பக்தியாக வைத்துக்கொண்டிட வேண்டும். அவனவன் சக்திக்குட்பட்டு தர்மகாரியங்களை செய்யலாம்.

2.   அடுத்ததாக இறைவழிபாடு, அதிலும் அதிகாலை எழுந்து செய்யவேண்டிய வழிபாடு என்ற ஒன்று இருக்கிறது. கால, தேச, வர்த்தமான சூழலால் மனிதனின் வாழ்க்கைமுறை மாறி அதிகாலை துயில் எழுதல் என்பதே மனிதனுக்கு மிகப்பெரிய பாரமாகி விட்டது. முதலிலே ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். காலம், நாழிகை, பருவம் எல்லாம் எதற்கு பொருந்தும் ? மனிதனுக்குப் பொருந்தும், மனிதன் வசிக்கின்ற இந்த பூமிக்குப் பொருந்தும். இந்தப் புவி மண்டலத்தைத் தாண்டிவிட்டால் அப்பொழுது ஏது இரவு ? ஏது பகல் ? அண்ட சராசரங்களையும் தாண்டி செல்லும்பொழுது அங்கே எல்லாம் ஒன்றுதான். இந்தப் புவியிலே இந்த வளிமண்டல அழுத்தத்திலே கீழே பார்க்கின்ற மனிதன் எவ்வாறு நீரின் அழுத்தத்திலே மீன் வாழ்கிறதோ, மற்ற நீர்வாழ் உயிர்கள் வாழ்கிறதோ, அதைப்போல் காற்று மண்டலத்தின் அழுத்தத்திலே மனிதனும், மற்ற உயிர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அழுத்தம் மனித உடல் மீது எப்பொழுதும் ஒரே கதியில் இருப்பதில்லை. அந்த அழுத்தத்தின் ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் மனித உடலை வினைக்கேற்ப பாதிக்கும். உயர்வைத் தரும்.

3.   எனவே முதலில் பக்தியை விட்டுத்தள்ளினாலும் கூட ஒரு மனிதன் வாழும்வரை தேக நலத்துடன் வாழவேண்டும். அதற்கு, இந்தப் பகுதியிலே இந்த வளிமண்டலத்திற்குள் வாழ்கின்ற உயிர்கள் அனைத்தும் சூரியன் உதிக்கும் முன்னால் துயில் களைந்தால்தான் நல்ல பலன் கிட்டும். குறிப்பாக கடைவரையில் விழி, கூர்மையாக இருக்கவேண்டும், சுலோச்சனம் போடக்கூடாது என்று எண்ணக்கூடியவர்கள் யாரும் சூரியன் விழித்த பிறகு விழிக்கக்கூடாது. ஒரு பிணி வந்துவிட்டால் போதும், உடலின் முக்கியத்துவம் மனிதனுக்குப் புரிந்துவிடுகிறது. ஆரோக்யத்தின் அவசியம் புரிந்துவிடுகிறது.

4.   எனவே ஒரு மனிதனுக்கு பக்தி, இறை நம்பிக்கை ஒருபுறமிருந்தாலும் தன்னுடைய பொன்னான உடலை பாதுகாக்கும் வண்ணம், இருக்கும் வரை உடல் தொல்லை தராமல் இருக்கவேண்டும் என்றால் மிக, மிக அதிகாலையிலே எழுந்து வழிபாடு செய்யவேண்டும் என்ற எண்ணத்திற்கு வரவேண்டும். வழிபாடு செய்யாவிட்டாலும், உடலை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்திலாவது அதிகாலை துயில் எழ பழக வேண்டும். இதற்காக ஒரு மனிதனானவன் முன் இரவிலே விரைந்து துயில் கொள்ளப் பழகவேண்டும். ஏனென்றால் ஒரு மனிதனின் ஆரோக்யத்தில் குறுக்கிட இன்னொரு மனிதனுக்கு அதிகாரமில்லை.

5.   இந்த ஆரோக்யத்தின் அடிப்படையில்தான் யாம் ஒத்த முனிவர்கள் எல்லோரும் அதிகாலை துயில் களைதல் முக்கியம் என்று வலியுறுத்துகிறோம். அதன் பிறகு பக்தி, வழிபாடு, தியானம், யோகாசனம் எல்லாம். முதலில் எழுதல் என்பதே முக்கியம். இஃதொப்ப நிலையிலே ஒரு மனிதனானவன் எழுந்து, எழுந்து பழகிவிட்டால் அதிகாலை துயில் களைதல் என்பது எளிமையான விஷயம் ஆகிவிடும். அடுத்ததாக மன அழுத்தத்தில் மாட்டிக்கொள்கின்ற மனிதன் அதனால் சரியான துயில் இல்லாமல், உறக்கம் வராமல் இருக்கிறான். இந்த மன அழுத்தத்தை ஒரு மனிதன் எப்படி பார்க்கவேண்டும் ? என்றால் ஆனது ஆகிவிட்டது. இப்பொழுது சயனத்திலே படுத்துக்கொண்டு காலையில் என்ன நடக்குமோ?  என்று கவலைப்படுவதாலோ அல்லது இன்று அதிகாலையில் இப்படி நடந்துவிட்டதே ? என்று வருத்தப்படுவதாலோ, இரண்டையும் அவனால் மாற்றிவிடப் போவதில்லை. 

இப்பொழுது என்ன வேலை ? சயனம் கொள்ளவேண்டிய வேலை. விழிகளை மூடி “ இறைவா ! உன் அருளால் இன்றைய தினம் ஓரளவு நன்றாக சென்றுவிட்டது. நாளைய தினம் நன்றாக இருக்கவேண்டும். நான் தரை மார்க்கத்தில் வெற்றி பெறுவதற்காக உழைக்கிறேனோ இல்லையோ, இறை மார்க்கத்தில் வெற்றி பெற அன்றாடம் உழைக்க வேண்டும். அதற்கு வேண்டிய உந்து சக்தியை, உத்வேகத்தை கொடு “ என்று எண்ணி இறை நாமாவளியை மனதிற்குள் மெல்ல, மெல்ல சொன்னால் அந்த மன அழுத்தம், மன பாரம் குறைந்து உறக்கம் என்பது மெல்ல வரும்.

6.   எனவே இஃதொப்ப நிலையிலே ஒரு மனிதன் மன அழுத்தமில்லாமல் வாழ அவன்தான் பயிற்சி எடுக்கவேண்டும். ஒரு மனிதனின் ஹ்ருதயமானது “ நான் இந்த கூட்டுக்குள் இருக்கிறேன். எனக்கு சத்துள்ள உணவை இந்த மனிதன் இன்று கொடுக்கவில்லை. எனவே நான் இயங்க மாட்டேன் “ என்று கூறினால் என்னவாகும் ? ஒரு மனிதனின் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் போராடி, போராடி ஜீவித்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறதா ? சரியான உணவை இந்த மனிதன் தந்தாலும், தராவிட்டாலும் போராட வேண்டும் என்ற எண்ணம் உள்ளே இருக்கும் உறுப்புகளுக்கு இருக்கிறது. சிந்தனா சக்தியில்லாமல் வெறும் இயந்திரகதியில் இயங்குகின்ற உறுப்புகளே அவ்வாறு இயங்கும்போது சிந்தனையாற்றல் கொண்ட மனிதனானவன் “ இதனால் நான் இதனை செய்யவில்லை. இந்த பிரச்சினை இருப்பதால் நான் இன்று பூஜை செய்யவில்லை. இந்த கஷ்டம் வந்துவிட்டதால் நான் இன்று அதிகாலை எழவில்லை. இப்படியொரு சிக்கலான சூழல் இருப்பதால் நான் இன்று ஆலயம் செல்லவில்லை. இப்படியொரு கடுமையான பொருளாதார நெருக்கடி இருப்பதால் நான் தர்மம் செய்யவில்லை என்று காரண, காரியங்களை அடுக்கிக்கொண்டே செல்லாமல் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு மிகவும் அதி விரைவாக அவன் கடமைகளை செய்வதோடு யாங்கள் காட்டுகின்ற பாதையில் செல்லவேண்டும்.

இஃதொப்ப கூறும்பொழுது பலருக்கும் பல்வேறுவிதமான ஐயம் ஏற்படும். ஒருவேளை அகத்தியனையோ அல்லது ஏனைய சித்தர்களையோ சதாசர்வகாலம் துதி செய்து கொண்டிருந்தாலும், இறைவனின் நாமாவளியை சொல்லி துதி செய்து கொண்டிருந்தாலும் மட்டும்தான் இறைவனோ, சித்தர்களோ ஒரு மனிதனுக்கு அருள்வார்கள் என்று. இது மிக, மிக தப்பிதமான கருத்தாகும். இறைவனையோ அல்லது எம்மையோ புகழ் பாடுவதால் மட்டும் ஒரு மனிதன் வாழ்க்கையிலே முன்னேற்றம் வந்துவிடுமா என்ன ? அப்படியல்ல. எங்கெல்லாம் நேர்மை, சத்தியம் பின்பற்றப்படுகிறதோ, தர்மம் தடையின்றி நடக்கிறதோ, எங்கெல்லாம் பெருந்தன்மை கொடிகட்டிப் பறக்கிறதோ, எங்கெல்லாம் இரக்க சுபாவம் பொங்கி எழுகிறதோ, அதுபோன்ற மனிதர்கள் எம்மைத் தேடினாலும், தேடாவிட்டாலும் யாம் அஃதொப்ப ஆத்மாக்களை இனம் கண்டு எம்மால் முடிந்த அருளாசியை செய்து கொண்டிருக்கிறோம்..!

இறைவன் அருளால், ஒரு மலர் மலர்வதை என்றாவது மனிதக் கண்ணால் உணர முடியுமா ? ஒரு மனிதனின் வளர்ச்சியை அந்தந்த கணம் ஒரு மனிதனால் உணர முடியுமா ? குழந்தை வளர்ந்திருக்கிறது என்று தெரியும். ஆனால் அந்த வளர்கின்ற தன்மையை தாய் கூட பார்க்க முடியாது. அதேபோல் தேர்வை எழுதிவிட்டு ஆசிரியரைப் பார்த்து “ நான் எந்தளவு மதிப்பெண் பெறுவேன் ? நான் சற்று முன்பின்னாக எழுதியிருந்தாலும் மன்னித்து உயர்ந்த மதிப்பெண்களை போடுங்கள் “ என்று கூறினால் அது ஏற்புடையதாக இருக்குமா ? எனவே எப்படி வளர்ந்து இருக்கிறோம் ? என்று கேட்பதைவிட, வளரவேண்டும் என்ற எண்ணம் இன்னும் உறுதியாக ஆழமாக பதிந்து நாங்கள் கூறுவதை பின்பற்றினால் போதும் கட்டாயம் வளர்ச்சி இருக்கிறது என்பது உண்மை.
-ஜீவ அருள் நாடி.

Tuesday, July 16, 2013

வைராக்கிய தீர்த்த விரதம் (2) !!!

இதற்கு முந்தைய பதிவை [வைராக்கிய தீர்த்த விரதம் 1]படித்துவிட்டு இந்த பதிவை படிக்கவும் 

*** ஏன் ஜீவன் படைக்கப் பட்டது என்று அறிய முடியாததை அறிய முயல்வதைவிட , முதலில் படைப்பாகிய அனுபூதி எவ்வாறு கும்பகோணம் திருத்தலத்தில் நிகழ்கின்றது என்று ஓரளவு உணர முற்படுவது மூலம் , தக்க தெளிவு கிட்டும் என்றார் சத்குரு வேங்கடராம சுவாமிகள் ., அர்த்தமுள்ள இவை யாவும் புராணங்களிலும் காணப் பெறுவன .



*** ஒவ்வொரு மஹாப் பிரளய காலத்திலும் , பூலோகத்தின் கோடிக் கணக்கான ஜீவன்களும்  பிரளய வெள்ளத்தில் மூழ்குவர் . ஒரு பிந்து குடத்தில் - அமிர்தம் சேர்ந்த மண் கலயத்தில் (கும்பத்தில்) -மூலக்கரு அணுக்களாய்ச் சேமித்து வைக்கப் பெறுவர் .

*** ஆனால் , இந்தப் பிரளய வெள்ளத்தில் மூழ்கும் எந்த ஜீவனுக்கும் மூச்சுத் திணராது என்பதே இங்கு நிகழும் தெய்வாற்புதம் .., 
மாறாக " யுக நியதியான பிரளய வெள்ளம் இது . நாம் அனைவரும் ஒரு குடத்தில் அசென்றுடைக்கலம் ஆவோம் " என்ற எண்ணமே அங்கு மேலோங்கி இருக்குமாம் . அல்லது எந்த ஜீவனுக்கும் திணறலோ அல்லது வேறு எதுவுமே அங்கு தோன்றாதிருக்கும்  , அல்லது இவ்வாறு உண்மையை உணர்விக்கப் பெறுவர் .

*** இம்மூன்றைத் தவிர , பிரளய காலத்தில் அங்கு வேறு எந்த மன ஓட்டமும் எந்த ஜீவனுக்குள்ளும் இருக்காது .  வெள்ளத்தில் மூச்சுத் திணறுதல் என்பதே கிடையாது ., இது தான் இங்கு பிரளயம் பற்றி அறிய வேண்டிய அதியற்புதமான ஆரம்பப் பாடமான ஆன்ம ரகசியம் .

*** தெய்வ ரகசியம் என்றால் மறைக்கப்படுவது , மறைமுகமானது என்று மட்டும் பொருளல்ல . அறிய முடியாதது ,(மனித) அறிவிற்குப் புலப்படாதது என்ற அர்த்தமும் உண்டு . படைப்பு பற்றி விஷியங்களைப் புரிபடாத தெய்வ ரகசியங்கள் என்பது ஏனோ ?
ஒரு பழத்தை உண்டு விட்டால் , தின்ற பழத்தை வெளியே காண முடியாது அல்லவா?., இதே வகையில் போல தன்னை யார் என்று அறிவதே படைப்பு ரகசியம் என்பதால் அப்படி உணரும் போதும் அங்கே -- " நான் ராமன் , நான் கிருஷ்ணன் " என்ற தனித்த மனித உணர்வே இருக்காது . ஒருவர் தின்ற பழம் அவரே காண முடியாதவாறு அவருக்கு உள்ளேயே கிடப்பது போல "நான் இன்ன பெயர் கொண்டவன் " என்ற உணர்வுகளும் உள்ளேயே மறைந்து விடும் . ஒருவர்  தன் உடலை விட்டு வெளியே இருந்து கொண்டு தன் உடலை காண முடியுமா ? இதுதான் படைப்பு ரகசியத்தின் மூலம் .
யோகசக்தியால் மட்டுமே இது சாத்தியமே .

*** பிறந்த குழந்தையிடம் பிஸிக்ஸ் , கெமிஸ்ட்ரி பற்றிச் சொன்னால் அதற்குப் புரிபடுமா?  இதைப் போலத்தான் , ஆன்ம அறிவியல் குழந்தையாய் இருக்கும் மனிதர்களும் சிருஷ்டி பற்றி முழுமையாக அறிய முற்படுவதும் . இது பற்றி எவ்வுளவுதான் விளக்கிச் சொன்னாலும் , குழந்தை போல் மனிதச் சமுதாயத்துக்குப் புரிபடாது .படைப்பு ரகசியங்களைப் படிக்கவோ , கற்கவோ முடியாது , தக்கோர் மூலம் உணர்விக்கப் பெறுதல் வேண்டும் என்று முதலில் மனதார ,ஒத்துக் கொள்வதுதான் ஆரம்பப் பாடம் .

மஹாமகம் அகில உலக ஜீவநல வளவர இறைப் பெருவிழா ! 

மகாமக வைபவத்தை நிகழ்த்த வேண்டிய ஆன்மத் திருப்பணியை , பிரபஞ்சத்திலேயே பெறுதற்கரிய அரும்பெரும் இறைக்கடமையாய் ,புண்ணிய பாரதத்தின் தெய்வத்தமிழ்த் திருநாட்டார் அண்ட சராசரத்தின் சார்பாய் ,பல கோடிச் சதுர்கோடி யுகங்களாய் ஆத்மார்த்தமாய் நிறைவேற்றி வருகின்றார்கள் .இதில் உலக ஜீவன்களாகிய உங்கள் ஒவ்வொருவருடைய ஆன்மசக்தி ப (பா)ங்கும் நிச்சியம் உண்டு என்பதையும்  அறிந்தாக வேண்டும் .  இதுவும் ஜீவசிருஷ்டி ரகசியத்தின் ஆரம்பப் பாடம் . திருக்குடந்தைத் தலத்தின் புனிதமான கும்பமேளாவான மஹாமகம் வார்த்தளிக்கும் தான் ,.பிரம்ம ஞானரகசியமும் கூட . இதற்காகவே பிரம்மரும் ,நவநதி தேவதா மூர்த்திகளும் கும்பகோணத்தில் மட்டுமே அபூர்வமான மெய்ஞான விஞ்ஞான யோகப் பிரகாச வடிவங்களில் அருள்கின்றனர்.


  
யுகங்கள் , உலகங்களின் தோற்றமும் , முடிவும் 

*** யுகங்கள் மற்றும் பூமிகள் ,லோகங்கள் தோன்றுவதும் ,மறைவதும் எவருக்கும் புலப்படாத மஹாபிரம்ம கால ரகசியம் .உத்தம தெய்வநிலைகளில் மட்டும் தான் இதனைப் பற்றி ,அதுவும் இறையருளால் மட்டுமே ஓரளவு தெரிய வரும் .தக்க சத்குரு மூலமாய் இதனைப் பற்றி அறிவோரும் அடக்கமாய் இருப்பர்.ஒரு போதும் இதனை வெளியிடார் ., தேவையும் இல்லை ., அப்படியே சொன்னாலும் எவருக்கும் புரிபடாது , அதாவது ,இங்கு இறைச் சித்தம் தான் இயங்கும் ,வெறும் மனித அறிவு அல்ல .

***பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பூமியும் ,நட்சத்திரப் படைப்பிற்கும் கரணங்கள் உண்டு .ஒவ்வொரு உயிரும் ,ஒரு சிறு எறும்பும் கூட எண்ணற்ற காரணங்களுடன் தான் படைக்கப் பெறுகின்றது .இதனையே அடிப்படைப் பாடமாக இப்போதைக்கு ஆழ்ந்த நம்பிக்கையுடன் அறிதலும் போதுமானதே .ஏனென்றால் சாதாரண மனிதப் பகுத்தறிவுக்கு ஓரணுத் துளியும் சற்றும் எட்டாத ஞானங்கள் இவை .
தக்க சத்குரு தான் இத்தகைய அரிய ஞானத்தை உணர்த்திட இயலும் .இதிலும் சத்குருவும் அவரவருக்குத் தேவையானதை மட்டுமே ,அவரவர்தம் ஆன்ம நிலையைப் பொறுத்து அளித்திடுவார் ,அவநம்பிக்கை  ,ஆசை இருந்தால் இது பற்றி ஒரு சிறிதும் அறிய முடியாது .

தீர்த்த நீராடல் செய்தபின் ., மகாமகத் தீர்த்த வலம் .

பிரபஞ்சத்தில் உள்ள எண்ணற்ற புண்ணியத் தீர்த்தங்களும் வந்திணையும் பூவுலகின் ஒரே சமஷ்டிப் புண்ணியத் தீர்த்த வளாகம் ,மாமாங்கத் தீர்த்தமே .

பௌர்ணமி ./ மக நட்சத்திர நாளில் ..,தொடக்கத்தில் மகாமகக் குளத்தை குறைந்தது மூன்று முறையேனும் வலம் வருதல் நன்று ., இயன்றால் 5,7,12,16 முறை வலம் வருதல் , தீர்த்த வலப் பலன்களை விருத்தி செய்வதாம் ., பதினாறு முறை வலம் வருதல் பரிபுரணமான பலன்களை வார்க்க வல்லதாம் .

மகாமகத் தீர்த்தவலத்தின் போது ஓத வேண்டிய மகாமக நவவாசல் வாசித்துதி 

கெஞ்சுவர மாயருளும் கந்தசிவங் காணுமே  கீதபத மோதமே 
பஞ்சுபரி ஆவது போல் பாவவினை தீருமே  பண்டுவளி தாருமே 
எஞ்சிடாத வல்வினைகள் தீரவழி பேணுமே  எவ்வி தவ போதமே 
கஞ்சமடை ஆகுதலே காசிவிச்வ நாதமே   குஞ்சதரு  வேதமே 
அஞ்சுபொறி பாதவலி அண்டகா வீழுமே     ஆரமுத மாகுமே 
விஞ்சிடாத நவநதிமா வேதசார ஆரமே    வாலைமுக யோகமே 
உஞ்சினைமா யோகவழி உய்யவளி பாருமே   உத்துங்க சோதியே 
பஞ்சபூத பஞ்சநாத பங்கயமா ஞாதரே              பாதபத வாழியே 
முஞ்சதிரு குடந்தையது முக்தகலமா வேதியே  மாமாங்க ஆழியே 
தஞ்சயோக மாகவந்த மாகதீர்த்த பாலியே    பல்லாண்டு வாழியே 
                                                                            பல்லாண்டு வாழியே 

தீர்த்தசக்தி தீர்த்தசக்தி  தீர்த்தசக்தி பாஹிமாம் 
தீர்த்தபாத மகாமக திவ்ய தீர்த்த ரட்சமாம் 

ஓம் தீர்த்தபாலாய வித்மஹே நவதீர்த்த நதிவரதாய தீமஹி 
தந்நோ கும்பகோண விஸ்வதீர்த்த மகேஸ்வர ப்ரசோதயாத் 

** தெய்வாதி தேவ தேவாதி மூர்த்திகளாலும் தீர்த்த நீராடப் பெறுகின்றன பிரபஞ்சத்தின் உத்தம தீர்த்த பூமியே மாமாங்கத் தீர்த்தம் என்றால் ,தற்போதைய உலக மனிதச் சமுதாயம் எப்படி எல்லாம் இந்த மகாமகத் தீர்த்த பூமியைப் போற்றி வழிபட்டுப் பயன்படுத்திக் கொள்தல் வேண்டும் !.

பூமியில் உயிர்கள் ஏன் ,எவ்வாறு ,எவரால் எப்படிப் படைக்கப் பெறுகின்றன ? பூமி எவ்வாறு தோன்றியது ? முதன் முதலில் ஜீவன் எவ்வாறு படைக்கப்பட்டது ? .இவை அனைத்துக்கும் தக்க விடைகளை ஆன்மீக ரீதியாக ,அவரவருக்கான அறிவு நிலைப் பக்குவப்படி வார்க்க வல்லது மகாமகத் தீர்த்த நீராடல் .




*** எத்தனை கோடி ஜென்மங்கள் எடுத்தாலும் மகாமகத் தீர்த்தப் பெருமையை விண்டிட இயலாது என்பதும் இதன் மஹிமையின் ஒரு பாங்கே ., மகரிஷிகளின் மாஞானத்திற்கும் எட்டாதது மகாமகத் தீர்த்த நீராடல் மகத்துவம் .


--- மார்ச் & பிப்ரவரி 2013   ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதலிருந்து ..,தொகுத்தவை . மேலும் விளக்கங்களுக்கு மார்ச் & பிப்ரவரி 2013 ., மே 2012 , ஏப்ரல் 2012 .இதழை காண்க மற்றும் மகாமகத் தீர்த்த நீராடல் மகிமை 1&2 .ஆகிய புத்தகங்களிலும் காணாலாம் ., 

இப்படிக்கு 
சித்தர் பைத்தியம் 

Friday, June 28, 2013

தமிழ் மறை பாடல்கள்

தேனருவி போல பொழியும் .. தேவாரங்களில்யிருந்து . ஆராஅமுத ஊற்றாய்... உள்ளத்(தில்...) தேன் ஊறிச் சளைத்த குறும்பழாக்களான இரு பாடல்கள்.... 


அடுத்து , தினமும் பழனியம்பதியில் காலையில் மலை மேல் ஒலிக்கபெரும் பாடல்கள்  ., 


இப்படிக்கு 
புலிப்பாணி சித்தர் அடிமை 
சித்தர் பைத்தியம்