எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, April 24, 2017

திருஅண்ணாமலை சித்தர்கள் - 2


கைலாயத்திற்க்குச் சென்றால்தான் சிவ பெருமானை தரிசிக்க முடியும் என்று முன்னொரு காலத்தில் சொல்லப் படுவது உண்டு.கைலாயத்திற்க்குச் செல்லாமலே தமிழ்நாட்டில் சிவ பெருமானை காண முடியும் என்று விதியை மாற்றிய பெருமை திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உண்டு.

'தென்னாடுடைய சிவனே போற்றி' என்று தான் சிவபெருமானை அடியவர்கள் எல்லோரும் பாடி அகம் மகிழ்ந்திருக்கிறார்கள்.சிவபெருமானே விரும்பி அமர்ந்த இடம் தமிழ்நாட்டில் இரண்டு உண்டு.ஒன்று...சதுரகிரி மலை.இன்னொன்று திருவண்ணாமலை.

இறைவன் எங்கு குடியிருக்கிறானோ அங்குதான் சித்தர்களும் குடியிருப்பார்கள்.சித்தர்களுக்கு எல்லாம் தலயாயச் சித்தர் முதல் சித்தர் சிவபெருமான்தான்.தலைவர் இருக்கும் இடத்தில்தானே தொண்டர்களும் குடியிருப்பார்கள்?



அதனால் திருவண்ணாமலையில் சிவா பெருமானுக்கு உறுதுணையாக,காலம் காலமாக நாம் பெரிதும் போற்றும் பதினெட்டு சித்தர்களும்,அவர்களுக்கு பக்கபலமாக 178  சித்தர்களும் இன்றைக்கும் அரூபமாக நடமாடி மாடிக் கொண்டுருக்கிறார்கள்.கைலாய மலையில் கூட காண கிடைக்காத அதிசயம் இது.மலை மேல் சிவ பெருமான் அமர்ந்திருந்தாலும் அவரது எண்ணம் எல்லாம் பூலோக மக்களின் நலன் மீது தான் இருந்தது.அதற்கு அடையாளம்தான் திருவண்ணாமலையில் குடிகொண்டு இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவில்.

அத்தகைய புண்ணிய மலையை நமது தமிழகம் பெற்றிருக்கிறது என்றால்,இதை விட வேறு பாக்கியம் நமக்கு என்ன வேண்டும்?   ஆனால் - நிறைய பேருக்கு திருவண்ணாமலை பற்றிய முழு வரலாறு தெரியவில்லை.அங்கு நமக்காக உதவிகளை செய்யும் சித்தர்களைப் பற்றியும் சரியாக தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.

'சதுரகிரி'யைப் பற்றி சொல்லும் பொழுது,எவ்வளவு பெருமைப்படுகிறோமோ, அதை விட பன்மடங்கு பெருமை கொள்ளும் அளவுக்கு திருவண்ணாமலையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உண்டு.அந்த அழகிய-அற்புதமான திருவண்ணாமலை வரலாற்றையும்,இதுவரை வெளியே வராத பல்வேறு அற்புத தகவல்களையும் அகத்தியப் பெருமான் ஜீவநாடியில் எடுத்துரைத்ததை நாம் இந்த புதிய தொடரில் பார்க்க இருக்கிறோம்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால்,மொத்தம் 205 சித்தர்கள் திருவண்ணாமலையில் இருக்கிறார்கள்.இதை விட்டால் சதுரகிரிக்கு அடிக்கடிசென்று வருவார்கள்.

அந்த சித்தர்கள் யார்-யார்?
அத்திரிமகரிஷி, மச்சமுனிவர், கோரக்கர்,ராமதேவர்,துர்வாசர்,சட்டை முனிவர்,அகத்தியர்,போகர்,புசுண்டர்,உரோமா மச்சித்தர்,யூகி முனிவர்,சுந்தரானந்தர்,அழகனந்தா,பிரம்ம முனி,காலங்கி நாதர்,நந்தி தேவர்,தன்வந்திரி,குரு ராஜரிஷி,கொங்கனர்,உதயகிரிச் சித்தர்,பிகுஞ்சக ரிஷி ,மேக சஞசார ரிஷி,தத்துவ ஞான சித்தர்,காளமீகா ரிஷி,விடன முனிவர்,யாகோபு முனிவர்,அமுத மகாரிஷி,சூதமா முனிவர்,சிவத்தியான முனிவர்,பூபால முனிவர்,முத்து வீரமா ரிஷி,ஜெயமுனி,சிறு வீரமா முனி,வேதமுனி,சங்கமுனி, காசிபமுனி,பதஞ்சலி முனி, வியாகிரம மகாரிஷி,ஜனகமா முனி,சிவப்பிரம்ம முனி,பராச முனி,வல்ல சித்தர்,அஸ்வணி தேவர், குதம்பைச் சித்தர்,புண்ணாக்கு சித்தர்,யோகச்சித்தர், கஞ்சமலைச் சித்தர்,திருமூலநாதர்,மவுனச்சித்தர்,தேகசித்திக் சித்தர்,வரரிஷி, கவு பாலச்சித்தர்,மதிராஜ ரிஷி,கவுதமர்,தேரையர்,விசுவனித் தேவர், அம்பிக்கானந்தர், டமாரானந்தர்,கையாட்டிச்சித்தர், கண்ணானந்த சித்தானந்தர்,சச்சிதானந்தர்,கணநாதர்,சிவானந்தர்,சூரியானந்தர்,சோகுபானந்தர்,தட்சிணா மூர்த்தி,ரமநாதர் மதிசீல மகாமுனி,பெரு அகத்தியன்,கம்பளி நாதர்,புலஸ்தியர்,திரி காலாக்கயான முனி,அருட் சித்தர்,கவுன குளிகை ச்சித்தர்,ராஜரிஷி வசந்தமாமுனி,போதமுனி,காங்கேய ரிஷி,கான்சன முனி,நீயான சமாதிச்சித்தர்,சாந்த மஹா ரிஷி,வாசியோகச்சித்தர்,வாத சாந்த மகாரிஷி,காலாட்டிச்சித்தர்,சத்தரிஷி,தேவ மகாரிஷி,பற்ப மகாரிஷி, நவநாத ச்சித்தர்,அடவிச்சித்தர்,நாதந்தச்சித்தர், 
ஜோதிரிஷி,பிரம்மானந்த ரிஷி,அநுமாதிச்சித்தர்,ஜெகராஜ ரிஷி,நாமுனிச்சித்தர்,வாசுதேவ மகாரிஷி,பாலை யானந்தர்,தொழுகன்னிச்சித்தர்........

இந்த சித்தர்களைப்பற்றி - அவர்கள் செய்து வரும் விந்தைமிகு செயல்களைப் பற்றி,ஆன்மீகத்திற்காகவும்,மருத்துத்திற்காகவும் ஆற்றி வரும் தொண்டுப்பற்றி முதலில் பார்ப்போம்.இது தவிர இன்னும் பாக்கி இருக்கும் 150 மகாசித்தர்கள் பற்றியும் இவர்களால் மனித குலத்திற்க்கு ஏற்படும் ஆதாயங்களைப் பற்றியும்,இன்றைக்கும் திருவண்ணாமலையில் இவர்கள் எந்த உருவத்தில் உலா வருகிறார்கள்?.இவர்களை எந்த நிலையில் தரிசித்தால் அவர்களுடைய கருணை பார்வை நமக்குக் கிடைக்கும்? என்பதைப் பற்றி அகத்தியர் தனது ஜீவ நாடியில் எடுத்துரைத்திருக்கிறார்.

நாம் வாழ்ந்ததின் பலன்  நமக்குக் கிடைக்க வேண்டும்,நமது கஷ்டங்கள் விலக வேண்டும்.நினைத்ததை அடைய வேண்டும் பிரார்த்தனைகள் செய்ய முடியாதவர்களுக்கும் நல்ல பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அகத்தியர் அருளால் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

அதற்க்கு முன்பு,நாம் அனைவரும் இந்த கார்த்திகை மாதத்தில் முதலாவதாக திருவண்ணாமலை ஈஸ்வரனை ஒரே ஒரு தடவை கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்வோம்.அவனருள் நிச்சயமாக எல்லோருக்கும் கிடைக்கும்.

(சித்தர்கள் வருவார்கள்...)

திருஅண்ணாமலை சித்தர்கள் - 1

••• மிகவும் பிரபலமான ஜீவ நாடி திரு.ஹனுமத்தாசன் அவர்கள் தினத்தந்தியில் தொடராய் எழுதிய “அருள் தரும் திருஅண்ணாமலை சித்தர்கள்” பற்றி…சென்ற வருடம் பெங்களுருவில் நடந்த தஞ்சை ஜீவ அருள் நாடி சத்சங்க பொது வாக்குரையில் ஒரு அன்பர்.. கீழ் காணும் மாறு கேட்ட கேள்வியும் ..அதற்க்கு அகத்தியம் பெருமான் கூறிய பதிலும்..

==========================================================

••• அடியார் கேள்வி : தங்கள் அருளாசியால் 35 (திருவண்ணாமலை) சித்தர்களின் வரலாறு, விளையாடல்களை வெளியிட மட்டுமே அருள் செய்தீர்கள். மீதியுள்ளவற்றையும்  வெளியிட தங்களின் ஆசி வேண்டும்
.••• அகத்தியெம் பெருமான் : இறைவன் கருணையாலே இறைவன் அருளாணையிட மீண்டும் ஏனைய மகான்களின் விளையாடல்கள், இறையோடு தொடர்புடைய,

••• அஃதொப்ப திருகிரி தொடர்புடைய நிகழ்வுகள், மனிதர்களுக்கு, தேவைப்படும் மனிதர்களுக்கு, நம்பக்கூடிய மனிதர்களுக்கு இந்த வெளி உலகத்தில் தெரிய வருமப்பா.
================================================================
•••அனனத்து மகான்களும் , சித்தர்களும் கூறுவது : நம்பிக்கை

..••• திருஅண்ணாமலை சித்தர்கள் பற்றிய தொகுப்பு இவ் வலைப்பூவில்http://annamalaisiththarkal.blogspot.in கால் பாகம் வந்துள்ளது.. வேறு வலைத்தளத்தில் எங்கும் காணக்கிடக்கவில்லை...
••• தொடர்பதிவாக இங்கு அளிக்கிறேன்...
••• நம்புகின்ற அடியார்கள் மட்டும் படித்தால் அது மதி..., வீண் விவாதம் செய்தல் வேண்டாம்....,


பதினெண் சித்தர்கள் நித்தம் பூஜை செய்யும் எல்லாம் வல்ல கனி கணபதிக்கு முதல் வணக்கம்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

Saturday, March 25, 2017

வாமாச்சாரம்.....,


••• பலரும்... சில உபாசனை முறைகளில்... மீன் , மது , மாமிசத்தை வைத்து பூஜை.. செய்ய வேண்டும். எனக் கூறுகின்றனர்... எந்த சித்தர்களும்.. எக்காலத்திலும்..., எந்த உபாசனாமார்கத்திளும்.. கூறிப்பிடுவதலில்லை..
••• உதாரணமாக.. சித்தர் பாடல்களை.. படித்தால்.. அவர்களின்.. நிகண்டு.., மறைப்புசூத்திரத்தை... படித்தால். தான். விளங்கும்.. இல்லையேல்.. அண்டகோழி என்பதை.. கோழி முட்டை.. என்று.. புரிந்து கொண்டு. ஒலப்பி கொழப்பி.. கடைசியில்... ஆப்பாயில்.. ஆம்பளேட் தான்.. சாப்பிட வேண்டும்..,
••• மேலும் வாமச்சார பூஜை.. என்பது.., இந்த யுகத்திற்க்கான.. நியதியல்ல. என்பதையும் புரிந்து.. கொள்ள வேண்டும்..., அதைபோல். எந்த சித்தரும்.. பெண் போகத்தில்.. ஆழந்தவர்.. கிடையாது...., அவர்கள்.. கூறும் பெண் தத்துவம் வேறு...,.

••• “உடலில் உள்ள பாண்டவ சக்திகளையும்.. கௌவர சக்திகளையும். உண்ர்விப்பதே.. மஹாபாரத காவியமாகும்... உள்ளுள்..ஒளிர்வதே ஒப்பற்ற காவியமாகிறது....” -- என்பதையும் உணர்தல் வேண்டும்.. இதை.. விடுத்து.. நம் புராணங்களையும்.. இதிகாசங்களையும்... இவர்களுக்கு இத்தனை.. மனைவிகள்.. இத்தனைகண்வர்கள்..               என நாமே அறியாமையால் நகைப்புக்குறியதாக.. ஆக்க கூடாது...., “

என்றைக்கு உங்கள்.. நிழல் உங்களுக்கு உங்கள்.. குருவாக.. தெரிகிறதோ... அன்றைக்குத் தான் குரு உங்களை.. நிழல் போல்.. தொடர்ந்து காக்கிறார்... கண்காணிக்கிறார்... என்பது புனலாகும்...., நீங்களும்.. குருபக்தியில்.. மெய்குரு பாதையில் செல்கறீர்கள்.. என்பது பொருள்... கண்ணாற காண வேண்டும்..

•••.ITS THE FIRST SPIRITUAL QUALIFICATION TEST* அப்பறம்.. தான்... குருவுஞ் சீடனும் கூடிக் கலந்து 
இருவரு மொருதனி இடந்தனிற் சேர்ந்து
தானந்த மாகித் தற்பர வெளியில்
ஆனந்த போத அறிவைக் கலந்து
புவனத் தொழிழைப் பொய்யென றுணர்ந்து
மவுன முத்திரைய மனத்தினி லிருத்திப்
பெண்டு பிள்ளை பண்டு பதார்த்தங்
கண்டது மாயைக் கனவெனக் காட்டிப்
பாச பந்தப் பவக்கடல் நீக்கி
ஈச னினணயடி யிருத்தி மனத்தே….

••• எனும் நக்கீரர் விநாயகர் திருஅகவல்.. கூற்று.. மெய்பிக்கும்...,••• அது வரை... பாசககயிறு.. அறுபடாது....

••• மிக முக்கியமாக உபாசனை செய்பவர்கள்... சுவாமிக்கு... தேவயற்றவனற்றை,,,,,,,,.. படைத்து..., தோசங்களை தேடிக் கொள்ள வேண்டாம்.. என்பதற்காக.. கீழ்காணும்.. விஷியத்தை... பகிர்ந்து..கொள்கிறேன்...

••• ஆத்மாவும் அம்பிகையும் இனைவது மைதுனம்...,

இந்தத் தத்துவங்களைப் புரிந்து கொள்ளாமல்.. வாமாசார வழிபாட்டில்.. மதுவையும்..., மீனையும் ..., மாமிசத்தையும் .., மைதுனத்தையும்.. கொண்டு... வழிபட்டு... வந்திருக்கிறார்கள்.., இதனால்.. வாமாசார முறைக்கே கெட்ட பெயர் ஏற்ப்பட்டது...,

••• மாத்யா , மாம்ஸா , மச்சா , முத்ரா , மைதுனா என்ற இவை ஐந்தும் “ம” காரத்தில் ஆரம்பிப்பதால் பஞ்ச மகரம் எனக் கூறப்படும் .. ஆகமசாரம் என்ற நூலில் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்.

••• மாத்யா என்ற போதை தரும் பானம் [ சாதாரண *கள் அல்லது மது* அல்ல ] பிரும்மரந்திரம் என்ற ஆதாரத்திலிருந்து கிடைக்கும் “அமிர்தம்” மாம்சம் நாக்கையும் அதன் உதவி கொண்டு பேசும் பேச்சையும் குறிப்பிடுகிறது ..,

••• மச்சம் அசைந்து கொண்டே இருக்கும் .. [ மீன்கள் ஒரு நிமிஷம் சும்மா இருக்காது ]..., இடை பிங்கலை... நாடிகளை இது குறிக்கிறது..., சகஸ்ரார பத்மத்தில் தூண்டப்படும்... அறிவை முத்திரை... குறிக்கிறது...

••• மைதுனத்தின் இரகசியம்... பொருளாவது...:

செந்நிறமான “ர” என்ற எழுத்து... குண்டத்தில் இருக்கிறது..., “ம” என்ற எழுத்து விந்துவில் உருவத்தில்.. யோனியில் இருக்கிறது .. அகர உருவில் ஹம்சத்தில்..உட்கார்ந்திருக்கும் மகரம் ரகரத்தோடு சேருகிறது...,

••• இதனால்.. சாதகன் பேரின்பத்திற்கு அடிப்படையான பிரும்ம ஞானத்தை அடைகிறாள்., சாதகனுக்கு இப்போது.. “ஆத்மா ராமா” என்ற பெயர்..., அவள் ஆத்மா , சகஸ்ராரத்தில் இருந்து கொண்டு.. இன்பத்தை அனுபவிக்கும்...,
••• ஆவரண பூஜையின் மாத்யா என்பது .. அம்ருதமான விசேஷோர்க்யம்..., மாம்சம். எனப்து இஞ்சித் துண்டு..., வாயினால் சொல்லும்.. மந்திரத்திற்க்கு இது சூசகப் பொருள்.., உயிரான ஆவியிலிருந்து கிளம்பும் ஒளி உடலின் (நாக்கு) உறுப்பால் .. வெளிப்பட்டு பொருளான இஞ்சி மூலம் அர்ச்சிக்கப்படுகிறது ....

••• ஆதாவது.. உடல் .., பொருள்.., ஆவி மூன்றையும் பூஜையில் ஈடுபடுவதாக .. அர்த்தம்..--- ஸ்ரீவித்யா தேவி நவாவரண பூஜை.... ஆசிரியர் நஜன்.

---------------------------------------------------------------------------------.
••• மேலும்… அமுரிக்கான பரிபாஷை
•••பார்த்திபனே அகாரமடா விந்து விந்து
பதிவான விந்துவடா சாரமாகும்
சாற்றியதோர் சாரமது அப்பு அப்பு
சங்கையில்லை அப்பதுவுந் தண்ணீர் தண்ணீர்
போற்றியே தேகந் தண்ணீர் வெண் சாரையாகும்
தெவிட்டாத சாரையடா அமுரிதானே

•••அமுரிக்கு பேர் மாத்திரம் சொல்லக் கேளு
            அப்பனே சந்திர புஷ்கரணி என்றும்
              கரகமதில் ஊசிநீர் ரோம நீ ரென்றும்
           கண்மணியே சொல்வார்கள் அநந்த நாமம்....

••• ***பூசை நெறி யறியாமல்*** ஆண்பெண் இரண்டும்
பொல்லாத மாய்கை வலை தன்னில் சென்று
ஆசைகொண்டு மோகமதில் அறிவு கெட்டு
அங்கமென்ற சங்கதியை யறியாமற்றான்
பாசமென்ற பல ருசியால் மாண்டார் கோடி
ஓசையென்ற சத்தம் உதித் தடங்கும் வீட்டை
உத்தமனே மனக் கண்ணால் நித்தம் பாரே.. •••

•••நூல் : அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி
-------------------------------------------------------------------
அகத்தியெம்பிரான் கூறியது.. போல்.. “ பூசை நெறி.. “ அறிந்து.. பூஜை செய்யுங்கள்.. அன்பர்களே.....
-- 
ஸ்ரீ அகஸ்திய விஜயம் தான் குரு காட்டும் பாதை