எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, February 14, 2017

திருவாரூர் திருத்தலம்



    ஆரூரன் சந்நிதி போல்
   ஆருரன் ஆலயம் போல்

      ஆரூரன் பாதத்து
    அழகுபோல் – ஆரூர்

  மருவெடுத்த கஞ்சமலர்       வாவிபோல் நெஞ்சே ? 
        
     ஒருஇடத்தில் 
         உண்டோ உரை?                 -    சுவடிப்பாடல்


Ø  துவாதசாந்த மந்திர சிம்ஹாசனம் : யோக சாதனையில் சிரசுக்கு மேல் 12 அங்குலத்தில் தேகம் கடந்த தேகியை சிவம் ஸ்பரிசிக்கும்... ஸ்தானம்...,

Ø  நிலோத்பலம் புத்தம் பக்கம் – 27 [ திருவாரூர் ஷேத்திரம் பற்றிய முழுமையான நூல்.. book available in thiruvarur temple.]

Ø  குறிப்பு :  இது தான் மிருகி முத்திரையில் நிகழ்கிறது... ஆதலால் கையை முழுவதுமாக உயர்த்தி.. வணங்கிட வேண்டும்... அப்போது தான் பலன்..



Ø  அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரப் பாசுரம் 
எத்தகைய விதியையும் மாற்றி முக்தி அளிக்கும் தெய்வத் திருவடி பகவானின் திருவடிச் சின்னமே இறைவனின் திருக்கைச் சாற்றெனும் ஐயனின் கையெழுத்து


 சேல் பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்  பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல் பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்புமவன்
 கால் பட்டழிந்தது இங்கென் தலை மேல் அயன் கை எழுத்தே
§  ---(கந்தர் அலங்காரம்)



Ø  இந்திர லோகத்தில் இருந்து பூலோகம் வரை ஸ்ரீபாதம்தாங்கி சித்தரிஷியின் பரிவாரமே சுமந்து வந்து , முதன் முதலாக ஏழு மூர்த்திகளையும் வைத்துப் பூஜித்த தலம் திரு நல்லூர் என்பது பலரும் அறியாத தெய்வீக ரகசியம்...!!!

Ø  இந்த உன்னத மகத்துவத்தாலும் , திருநல்லூர் தலத்தில் சிவபெருமான் அப்பர் சுவாமிகளை வரவழைத்து , இங்கேயே திருநல்லூரில் அப்பருக்குத் திருவடி தீட்சையைத் தந்தருளினார்...,

Ø  மேலும் , பூவுலகில் எத்தலத்தில் அகஸ்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கமானது கருவறையில் மூல லிங்கத்துடன் சேர்ந்து அகஸ்தியரால் முதன் முதலில் பூஜிக்கப் பெற்றதோ , அப்புண்ய தலத்தில் இருந்தே மஹாவிஷ்ணு , இந்திரன் பூஜித்த தியாகராஜ மூலமூர்த்தம் மற்றும் தேவசிற்பிகளான விஸ்வகர்மா , மயனால் உருவாக்க பெற்ற ஏனைய ஆறு தியாகராஜ மூர்த்தங்களுக்கும் .., பூலோகத்தின் முதல் பூஜை துவங்க வேண்டும்.., இந்த நியதியையும் தேவகுருவான பிருஹஸ்பதி ரிஷியும் ., ஸ்ரீபாதரிஷியும் முசுகுந்த சக்கரவர்த்திக்கு எடுத்துரைத்தனர்..!!

Ø  திருநல்லூரில் ஸ்ரீபாதரிஷியின் வடிவமும் ., முசுகுந்தர் பூசித்த லிங்கமும் உள்ளன ., இவ்வாறாய் திருநல்லம் தலத்தில் தான் சப்தவிடத் தலங்களாகிய ஏழு தலங்களிலும் உள்ள தியாகராஜ மூர்த்திகள் முதன் முதலில் இப்பூவுலகிற்கு வந்து பிறகு எல்லா தலங்களுக்கும் சென்றனர்...

 மேலும் முழு திவ்ய விளக்கங்களுக்கு ,ஜூன் 2016 ஸ்ரீஅகஸ்திய விஜயம்..!!!

அத்தனை பிறவிகளையும் தீர்த்தருளும்
அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்
சற்குரு வேங்கடராம சுவாமிகள் அருளிச் செய்த –
அங்காளி அந்தாதி பாசுரம் – 90

பாத நினைவே எனக்கென்றும் வேண்டும் வேறெது நினைவும்
காத தூரம் ஓடிட வேண்டும் நின் நினைவு என்றும்
சேதமுறாது செம்மலர்ப் பாத நின் நினைவே வேண்டும்
நின் பாதமே என் பல பிறவி அழிக்க வந்ததே!
                                                        -அங்காளி அந்தாதி

Wednesday, January 4, 2017

தெய்வீக ரகசியங்கள் பூத்துக் குலுங்கும்

✴ பூவுலகின் ஆதிமுதல் நித்திய தெய்வக் கல்யாண பூமி பிரபஞ்சத்தின் சகல தெய்வ மூர்த்திகளும் ..., கல்யாணப் பெயருடன் , சகல் தெய்வ மூர்த்திகளின் திருக்கல்யாண உற்சவங்களும் .., தினமுமே ஒவ்வொரு தெய்வத் திருமண வைபவமும் கல்யாண பூமி கல்யாண மஹாதேவி ஸ்ரீகல்யாண மீனாட்சி அம்மன் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் அருட்சாரத்துடன் ..,
✴ ஜாதகத்தில் லக்னத்தின் ஏழாமிடமான திருமணஸ்தானம் ,மாங்கல்ய ஸ்தானம் இதை கொண்டருளும் பூவுலகின் திருமண மேடு .., நித்ய சுமங்ககலித்வ சக்திகளையும் , திருமண நல்வர சக்திகளையும் பூண்ட அரிய இரட்டை பனைமர ஸ்தலவிருட்சத் பட்டீஸ்வரம் ஸ்ரீகோபிநாதப் பெருமாளின் ஆசினாளும்....,


✴ திருமண சக்தித் தலங்களில் ஆற்றிய கல்யாண சங்கல்ப வழிபாடுகளை எல்லாம் இனிதே கனிய வைத்து திருமணத்தை நிகழ்த்தித் தரும் ..,பூவுலகின் திருமண முற்றம்.. இலந்தை துறை சிவா-விஷ்ணு. பூமியின் கல்யாண தீபச் சுடரோடு...,
✴ திருக்கடவூர் அமிர்த்வல்லித் தாயார் சன்னிதியில் திருமணதை நிகழ்த்துவதை விடப் பெரும் பாக்யம் வேறெதுவுமில்லை என்று தேவலோகங்களிலே போற்றும் அளவிற்குப் பல தெய்மூர்த்திகளின் , சித்தர்களின் , மஹரிஷிகளின் திருமண வைபவங்களும் நிகழந்த திவ்யாமிர்த தலம்.. அமிர்தவல்லி தாயார் சமேத அமிர்த நாராயணபெருமாளின் அருள் வார்ப்போடு...
✴ ஆங்கிரஸ மகரிஷி தம் பத்னி சுரூபாவுடன் தெய்வத் திருமணங்கள் , மகரிஷி திருமணங்களுக்கு .., அந்தந்தயுக நியதிப்படி ., அக்னி ஹோம பூஜைகளை ஆற்றிச் சிற்ப்பிக்கும் திருமணவயல் ஸ்ரீசௌந்தர நாயகி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரரின்..ஜோதி பிரவாகத்துடன் கழுமல நிவர்த்தி யாகமாய் ., வினை தீர்க்கும் வெகு வேள்வியாய் விரிந்து .., பரா யக்ஞமாய் பரந்து அருள் சுரக்கும் ஹோமாக்னி பிரம்ம முகூர்த்த ஆரம்பமான முன் அதிகாலை முன்று மணி அளவில் தொடங்கி .
✴ திருஅண்ணாமலையை நினைத்தாலேயே முக்தி தரும் என அம்பிகையும் , அகஸ்தியபிரானும் உமாமஹேஸ்வர மூர்த்தியின் திருமணக்கோல முன்னிலையிலேயே சர்வேஸ்வரனின் ஒருமித்த திருவாக்காய் யுகம் யுகமாய் உரைத்து வரும் உத்தம தலம்..., நினைத்தாலே முக்தி அளிக்கும் (ருத்ர , விஷ்ணு , பிரம்ம மும்மூர்த்தித் தலமே திருஅண்ணாமலை என .....

 சகல கோடிச் சித்தர்களின் முன்னிலையில் வாஸ்தம்பல மூர்த்தியாய் சபாபதி நாதன் ஓதி உணர்வித்த திருத்தலம் ..., இவ்வாறு அருணாசல முக்தா முக்தி வாக்கியம் முதன் முதலில் வேதவாஸ்து மந்த்ரப் பூர்வமாக ஒலித்த சோண வாஸ்து மண்டபமாய் இன்றும் பொலியும் .., தெய்வ திருமணங்களுக்க்கே திருமாங்கல்யம் வழங்கும் உத்தமத் தலம் திருமங்கலம் ஸ்ரீபூலோக நாயகி சமேத ஸ்ரீபூலோகநாதரின் , மாங்கல்ய ஆசியோடு மாங்கல்ய தாரணம்..!!

will be continued... after marriage .. temples to be visited.

Contents from Sri AGASTHIYA VIJAYAM ., magazine monthly editions

Thursday, December 8, 2016

ஃ எனும் பிரணவம்...

§  அருணாசல தீபஜோதியில் ஃஎழுத்தின் அமிர்த சக்தியும் , எண் பதிமூன்றின் அமிர்த ப்ரவாகமும்  , அமிர்த ஃபல ஸ்தான சக்திகளோடு பொழிவதால் , ஆழ்ந்த  நம்பிக்கையுடன் அருணாசல ஜோதியை தரிசித்து , அமிர்தமயத் திருவருளையும் பெறுவீர்களாக.

§  அமிர்தசக்தி வஸ்துக்களான ஃ எழுத்து , எண் பதின்மூன்று இரண்டையும் தற்காலத்தில் பலரும் ஒதுக்கு வருவது சரியல்ல ..., இனியேனும் இவ்விரண்டின் ஆன்ம சக்தி , ஆத்மப் பரிசுத்தம் , அமிர்த வளத்தை உணர்ந்து , தினமும் ஒரு சில முறையேனும் எழுத்தில் , பேச்சில் ,  பயன்படுத்தி வரவும்...,



§  மழைப்பொழிவில் பதின்மூன்று , பதின்மூன்று துளித் தொகுகித் கொத்துக்களாய் வான்மழையை வருண மூர்த்தி , வர்ஷிக்கின்றார் .., இது அதியற்புதமான “த்ரயோதஸ்ச வர்ஷம்” எனும் மெய்ஞ்ஞான விஞ்ஞான விளக்கம் ..., இவையாவும் அஷ்டவக்ர ரிஷியின் “மதிமத்த்வமதி” எனும் சூக்கும கிரந்தங்களில் பொலிவன..

§  எனைய த்வ்யபிரபந்த விளக்கங்களுக்கு . 2016*டிசம்பர் மாத ஸ்ரீஅகஸ்திய விஜய இதழை காண்க....
§  ========================================================================
§  ஃ எழுத்திற்கு அகர உகர மகரக் கொந்துகை என்ற பெயரும் உண்டு. கொந்துகை என்பது ஃ எழுத்தின் மத்தியில் உள்ள கடுவெளி..., 

அ , உ , ம  ஆகிய மூன்று பிரணவாகார ஒளியொலிப் பீடங்கள் சேர்ந்தது தான் ஓம் எனும் ஓஃங்காரம் அல்லவா ..., பிள்ளையார் சுழியான “உ” என்பதும் ,ஓங்கார பீட்த்தைச் சார்ந்த்தே .,

§  ஃஎனும் ஆயுத எழுத்து , பிரணவ எழுத்து என்றும் சிறப்புடைந்துள்ளது.., பிரணவம் எனப்படும் ஓஃங்கார பீடத்தின் மூல வடிவைக் கொண்ட ஃஅட்சரத்திற்கு , ஆயதன எழுத்து என்பதே ஆதிகாலப் பெயர் ., ஆயதனம் என்றால் நீங்காத செல்வம் (தனம்) நிறைந்து , சாசுவதமாய் விருத்தியாகிப் பரிணமிப்பது என்றும் பொருளாகும்...,

§  தற்காலத் தமிழ்ச் சமுதாயம் ஆயுத எழுத்தை மறந்தாலும்  , இதன் ஆயதனசக்தி என்றென்றும் மறைவதில்லை..,!!!

§     பரம்பெருளாம் ஸ்ரீமன் நாராயணப் பெருமாள் முக்கோணப் பீடத்தில் நின்று , இருந்து , கிடந்து , நடந்து அருள்வதாய் ஐதீகம் .., பெரியாழ்வாரின் “பல்லாண்டு” பாசுரமும் இதனை விளக்குவதாம் .., ஸ்ரீவித்யை தத்துவத்திலும் முக்கோண்ப பீட்த்திற்குப் பெருஞ்சிறப்பு உண்டு..., இந்த முக்கோணப் பீட சக்தி கொண்ட்து ஃ எழுத்தாகும்..


         ஃஎழுத்தின் மத்தியில் உள்ள சூட்சுமப் பரவெளி...., கடுவெளி .., இதனுள் ஆதிமுதலில் சர்வேஸ்வரன் ,முதன் முதலில் சித்தர்களைத் தோற்றுவித்தார் .  சித்சக்தி வாய்ந்த ஸ்வஸ்திக் சக்கரமும் முக்கல் எனப்படும் ஃஎழுத்தின் ஆக்கப் பூர்வ இயக்கமே..!!!

§  எப்போதும் தவத்தில் திளைக்கும் அட்சரமாய் ஃ எழுத்தினைக் கீழ்க்கண்டவாறு அகஸ்தியர் சிறப்பித்துப் போற்றுகின்றார்...!!!


  கண்டுரைத்த ‘காரணத்தான் எழுத்தாய் அப்பா
 பண்டொரு நாள் ஃ என்னும் முக்கண் தானே
 அண்ணாமலைத் தோன்றல் முக்கல் யாகம்
  கண்ணாயிர சக்திசிவ சீவனுந்தானே
விண்டவரோ கண்டவரோ பிரணவம் என்பார்
  பண் ஆயிரங் கண்ட ஃகைப் பாராய்
  செண்டாலே சேல்முருகன் சேவுகனாகி
  வண் தவத்தே பூச்சியமாய் ஆகுது பாரேன்

§        இப்பிரணவ பிராண சக்திப் பாசுரத்தை தினமும் ஓதுதல் , ஃஅடசரத்தின் பிரணவப் பிராண சக்திகளை வார்க்கும்...மேலும் (பொதிய) மலை போல் விளக்கங்களுக்கு ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழை காண்க..... மார்ச் 2014