எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, July 13, 2026

Tulasi Ramayanam

ஸ்ரீகாகபுசுண்டி முனிவர் கூறுகிறார்: கருட பகவானே! கேளுங்கள்!!!

ஸ்ரீபாலராமனான குழந்தையின் வயிற்றில் பல ப்ரம்மாண்டத் தொகுப்புகளைப் பார்த்தேன். மிகவும் விசித்ரமான பல உலகங்கள்!!ஒன்றுக்கொன்று விசித்ரமான அமைப்புகள், கோடி ப்ரம்ம தேவர்கள். மஹேஸ்வரர்கள். எண்ணற்ற நக்ஷத்ரங்கள்! சூரியர்கள்! சந்த்ரர்கள், எண்ணற்ற லோக பாலகர்கள், யமன்கள், காலதேவதைகள், தேவர்கள்! எண்ணற்ற மலைகள்! விசாலமான பூமிகள், கடல்கள், நதிகள், குளங்கள், எல்லையற்ற காடுகள்...! "பலவிதமான அளவற்ற படைப்பின் விரிவுகள்!" தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள்!!!

நாகர்கள், மனிதர்கள், கின்னரர்கள், நான்குவிதமான உயிரினங்கள் கண்டேன். நான் இதுவரை பார்க்காதவை. கேட்காதவை. மனம் கொள்ளாதவை எல்லா அற்புதப் படைப்புகளையும் கண்டேன். அதை எப்படி வர்ணிப்பேன்!

ஒவ்வொரு ப்ரம்மாண்டத்தையும் சுற்றிப் பார்க்க நூறு ஆண்டுகள் பிடித்தன. இவ்விதம் பார்த்துக் கொண்டே பல ப்ரம்மாண்டங்களில் சுற்றினேன்.

ஒவ்வொரு உலகத்திலும் தனித்தனி ப்ரம்மாக்கள், தனித்தனி விஷ்ணுக்கள், ருத்ரர்கள், மனுக்கள். திக்பாலகர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள். பூதங்கள், வேதாளங்கள். கின்னரர்கள், ராக்ஷஸர்கள், பசுக்கள், பக்ஷிகள்! பாம்புகள், பல ஜாதிகளைச் சேர்ந்த தேவர்கள், தைத்யர்கள் ஆங்காங்கே வெவ்வேறு விதமாகப் பரவி இருந்தனர். எண்ணற்ற பூமிகள். நதிகள், கடல்கள், குளங்கள், மலை ஆகிய எல்லாப் படைப்புக்களும் அங்கங்கு தனித்தனியாக இருந்தன. ஒவ்வொரு ப்ரம்மாண்டத்திலும் நான் தனித்தனியே என்னுடைய உருவத்தைப் பார்த்தேன். மேலும் பல நிகரற்ற வஸ்துக்களையும் பார்த்தேன். ஒவ்வொரு ப்ரம்மாண்டத்திலும் தனித்தனி விதமான அயோத்யாபுரி. ஸரயு நதி. தனியாக ஆண்-பெண்கள் இருந்தனர். ஐயனே! மேலும் கேளுங்கள். தசரதர், கௌஸல்யா. பரதர் முதலான ஸஹோதரர்கள் கூடத் தனித்தனி. ஒவ்வொரு ப்ரம்மாண்டத்திலும் ராமன் அவதாரம் எண்ணற்ற பாலலீலைகளைப் பார்த்துக் கொண்டு சுற்றினேன்.

விஷ்ணுவின் வாஹனமானவரே! நான் எல்லாவற்றையும் வெவ்வேறாகவும் மிகவும் விசித்திரமானதாகவும் பார்த்தேன். எண்ணற்ற ப்ரம்மாண்டங்களில் சுற்றினேன். ஆனால் ப்ரபு ராமச்சந்த்ரனை வேறு விதமாகக் காணவில்லை. எல்லா இடத்திலும் அதே மாதிரியான குழந்தைத்தனம். அதே அழகு, அதே தயை நிறைந்த ஸ்ரீரகுவீரன். இவ்விதம் மோஹமயமான காற்றின் தூண்டுதலால் பல உலகங்களில் சுற்றினேன். அநேக ப்ரம்மாண்டங்களில் சுற்றி வந்ததில் ஒரு நூறு கல்பகாலம் கழிந்து விட்டதாகத் தோன்றியது. சுற்றித் திரிந்து நான் என்னுடைய ஆசிரமத்திற்கு வந்தேன். அங்குச் சில நாட்கள் கழித்தேன். பிறகு என்னுடைய ப்ரபு அயோத்தியில் அவதாரம் எடுத்துள்ளார் என்று கேள்விப்பட்டவுடன், பக்திப் பெருக்குடன் நான் மகிழ்ச்சியோடு ஓடிச் சென்று, முன்னரே நான் (துளசி ராமாயணம் காண்க) விளக்கியபடி பிறந்தநாள் கொண்டாட்டங்களைக் கண்டேன். ஸ்ரீராமச்சந்த்ரனுடைய வயிற்றில் நான் அநேக உலகங்களைக் கண்டேன்!!!அவற்றைக் காண முடியுமே தவிரச் சொற்களால் வர்ணிக்க முடியாது. அங்கே நான் மீண்டும் மாயையின் யஜமானன் ஆகிய அருளாளனான பகவான் ஸ்ரீராமனைப் பார்த்தேன். நான் மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பார்த்தேன். என்னுடைய புத்தி மோஹமயமான குழப்பத்தினால் நிரம்பியிருந்தது. இவை எல்லாவற்றையும் இரண்டு நாழிகை நேரத்திலேயே பார்த்தேன். மனதில் தனியான ஒரு மயக்கம் ஏற்பட்டதால் நான் களைப்படைந்தேன். குழப்பம் அடைந்திருந்த என்னைப் பார்த்து அருளாளனாகிய ஸ்ரீரகுவீரன் சிரித்தார். தீரமுடைய கருடன் அவர்களே! கேளுங்கள்!! அவர் சிரித்தவுடனேயே அவருடைய திருவாயிலிருந்து நான் வெளியே வந்துவிட்டேன்!

 :- (துளசி ராமாயணம் )

(ராம சரித மானஸம் உத்தரகாண்டம் தோஹா 
ஸ்லோகம் 79/2 முதல் 82/ஸ்லோகம் வரை)!


No comments:

Post a Comment